வீட்டு பக்கத்துல ஆடி ஷோரூம் இருந்தா இப்பவே போய் லைன்ல நின்னுடுங்க! இந்த காருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு

சமீபத்தில் அப்டேட் செய்த தனது காருக்கான புக்கிங் தற்போது துவங்கி உள்ளது. இந்த காரை ரூபாய் 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் வரும் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ள நிலையில் இதற்கான அதிகாரப்பூர் புக்கிங் துவங்கி உள்ளது. விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆடி நிறுவனம் தனது க்யூ7 என்ற காரை இந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்து முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்நிலையில் இந்த காரை இந்தியாவில் வரும் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுவனம் விற்பனைக்காக அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பாகவே இந்நிறுவனம் தனது காருக்கான அதிகாரப்பூர்வமான புக்கிங் தற்போது துவங்கி உள்ளது.

2025 Audi Q7 Facelift Booking

இந்த காரை வாங்க நினைப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆடி ஷோரூம் காரை புக்கிங் செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிதாக அப்டேட் செய்யப்பட்ட காரில் உட்பக்கமும் வெளிப்பக்கமும் ஏகப்பட்ட அப்டேட்களை நிறுவனம் செய்துள்ளது. இதனால் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் புதிய அப்டேட்டிற்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது விருந்து கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆடி நிறுவனம் இந்த புதிய அப்டேட்டில் ஆடி க்யூ7 காரின் முன் பக்க கிரில் பகுதியை அப்டேட் செய்து உள்ளது. இது சுற்றுப்புறத்தில் குரோம் பட்டைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய எல்இடி டிஆர்எல் மற்றும் எல்இடி ஹெட் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த லைட்டுகள் எல்லாம் கியூ சிக்ஸ் காரில் உள்ள அதே ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் களாக உள்ளன. பின்பக்கத்தில் டெயில் லைட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஷாகீர் கோல்டு, வைடோமோ ப்ளூ, மைத்தோஸ் பிளாக், சமூராய் கிரே மற்றும் கிளேஸியர் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன. காருக்குள்ளே சிடார் பிரெளன் மற்றும் சைகா பேஜ் ஆகிய கலர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதில் எந்தெந்த கலர் ஆப்ஷன்கள் எல்லாம் இந்திய இந்திய மார்க்கெட்டுக்கு வரும்போது அறிமுகமாகும் என்பது அறிமுகத்தின் போது தான் தெரியவரும்.

இந்த காரின் உட்பகுதியில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ஆகியவையும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மேலும் முக்கிய அப்டேட்டாக இதில் லேன் சேஞ்ச் வார்னிங் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது மற்ற அனைத்து பாகங்களும் இதற்கு முந்தைய மாடலில் உள்ள அதே ஆப்ஷன்களாக உள்ளன.

இந்த காரியின் இன்ஜினை பொறுத்தவரை பழைய மாடலில் உள்ள அதே 3.0 லிட்டர் டர்போ சார்ஜர் வி6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் மற்றும் டார்க் கூட மாறாமல் அதே இன்ஜின் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் இன்ஜின் 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் குவாட்டர் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து வீல்களுக்கும் பவரை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.6 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, வால்வோ எக்ஸ்சி 90, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டில் களமிறங்குகிறது. 2024ம் ஆண்டில் ஏகப்பட்ட சொகுசு காரர்கள் களமிறங்கியுள்ள நிலையில், 2025ம் ஆண்டில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி போன்ற சொகுசு காரர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கும் மக்கள் பல சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இப்படியான ஒரு அந்தஸ்தை வழங்கும் கார் என்பதால் இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் இந்த காரின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 17:21 [IST]
English summary
2025 audi q7 facelift booking rs 2 lakh launch nov 28
மேலும்... #audi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+