829 கிமீ தூரம் பயணிக்கும் ஹைபிரிட் கார் அறிமுகம்.. பார்க்கவும் ரொம்ப அழகா இருக்கு! வாங்கி போட நீங்க தயாரா!!

2025 பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur) கார் மாடல் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. பென்ட்லீ நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இதன் நான்காம் தலைமுறை வெர்ஷனே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. முந்தைய வெர்ஷன் ஃப்ளையிங் ஸ்பர் கார் மாடலில் டபிள்யூ12 (W12) வகை எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. ஆனால், புதிய வெர்ஷனில் 771 எச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட வி8 (V8) மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றனர்.

மேலும், இதுவே நிறுவனத்தின் நான்கு டோர்களைக் கொண்ட அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட கார் மாடல் ஆகும். இந்த கார் இந்த அளவிற்கு அதிக ஆற்றலை உருவாக்குவதற்கு அதில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைபிரிட் அம்சமே காரணமாக உள்ளது. பென்ட்லீ இந்த காரில் சேர்த்திருக்கின்றது.

Bentley flying spur unveiled with hybrid powertrain

இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மிக சிறந்த திறனை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சின் மாற்றத்தை மட்டுமே நிறுவனம் செய்யவில்லை. இன்னும் பலதரப்பட்ட மாற்றங்களை அது செய்திருக்கின்றது. பெரிய கிரில் இந்த காரில் அப்டேட்டின்கீழ் வழங்கி இருக்கின்றது.

இத்துடன், முன் மற்றும் பின் பக்க பம்பர்களையும் அது அப்டேட் செய்திருக்கின்றது. இதுதவிர, புதிய டிஃப்யூசர் பின் பக்கத்திலும், 22 அங்குல கவர்ச்சிகரமான அலாய் வீல்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து காருக்குள் பயணிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டைமண்ட் டிசைன் கொண்ட இருக்கைகள், வெல்னஸ் வகை இருக்கை, அனைத்து இருக்கைகளுக்கும் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Bentley flying spur rear

தொடர்ந்து, 2025 பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் கார் மாடலில் ரொடேட் செய்யும் வசதிக் கொண்ட 12.3 அங்குல தொடுதிரை, 3 அனலாக் டயல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இதுமட்டுமில்லைங்க, 650 வாட் திறன் கொண்ட 10 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்டு சிஸ்டம், ஆக்டீவ் பாஸ் வசதிக் கொண்ட 19 ஸ்பீக்கர் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களையே இந்த காரில் பென்ட்லி வழங்கியிருக்கின்றது. எஞ்சினை பொருத்த வரை 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருடன் பிளக்-இன் ஹைபிரிட் சிஸ்டமே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, தனியாக சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட ஹைபிரிட் சிஸ்டத்தையே இந்த காரில் பென்ட்லி வழங்கி இருக்கின்றது.

எனவே இந்த காரை எலெக்ட்ரிக் காராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக இந்த காரில் 25.9 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 76 கிமீ வரை பயணிக்க முடியும். இத்துடன், டேங்கை ஃபுல் செய்தால் ஒட்டுமொத்தமாக 829 கிமீ துரம் வரை பயணிக்க முடியும். இந்த காரில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதேபோல், இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சினும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்ட டபிள்யூ12-வைக் காட்டிலும் 147 எச்பி பவரை அது வெளியேற்றும்.

அதாவது, எலெக்ட்ரிக் மோட்டாருடன் சேர்த்து 782 எச்பி பவரை அது வெளியேற்றும். இதேபோல், 1,000 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 285 கிமீ ஆகும். இந்த காரின் வருகை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய அமையும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்கள் பலரின் பிரியமான சொகுசு கார் மாடலாக ஃப்ளையிங் ஸ்பர் காட்சியளிக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அம்பானி மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரின் இந்திய வருகை பற்றிய விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 5:00 [IST]
English summary
2025 bentley flying spur unveiled with hybrid powertrain
மேலும்... #bentley
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+