லாரியே வந்து மோதுனாலும் ஒன்னும் ஆகாது! 13 ஏர்பேக்குகள் உடன் அறிமுகமான எலெக்ட்ரிக் கார்!

சீனாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் செடான் காரான சீல் என்ற காரை அப்டேட் செய்து தற்போது புதிய அவதாரத்தில் வெளியிட்டுள்ளது. இந்த காரில் பல்வேறு புதிய பவர்ஃபுல்லான அம்சங்கள் மற்றும் அதிக ரேஞ்ச் தரும் வகையில் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக இந்த காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது எல்லாம் செய்யப்பட்டுள்ளன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் தனது சீல் என்ற எலெக்ட்ரிக் செடான் காரை அப்டேட் செய்து இந்திய மதிப்பில் ரூ20 லட்சம் என்ற விலையில் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இந்த காரின் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பலர் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இந்த கார் ரியர்வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆகிய 2விதமான வேரியன்ட்களிலும் விற்பனையாகி வருகிறது.

2025 BYD Seal Launch

இந்த காரின் பேஸ் மாடல் ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள நிலையில், இதில் 650 லாங்க் ரேஞ்ச் எடிஷன் இருக்கிறது. இந்த கார் ரூபாய் 21.6 லட்சம் என்ற விலையிலும், 650 இன்டெலிஜென்ட் டிரைவிங் எடிஷன் கார் ரூபாய் 24.7 லட்சம் என்ற விலையிலும், 600 ஆல் வீல் டிரைவ் கார் ரூபாய் 27.31 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

இந்த காரை முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்து வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 41 லட்சம் முதல் ரூபாய் 53 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது இருக்கும். தற்போது இந்த கார் சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்த கார் இந்தியாவிலும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 BYD Seal Launch

இந்த புதிய அப்டேட்டில் பல்வேறு விதமான புதிய அம்சங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த காரில் லைடார் சென்சார் மாடல் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் ரூஃப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் அடாஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள அம்சமாக இருக்கிறது. இதனால் இந்த காரில் தானியங்கியாக செயல்படும் அம்சங்கள் அதிகமாக உள்ளன.

இப்படி இந்த காரின் ரூஃப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள லைடார் என்ற தொழில்நுட்பம் காரை சுற்றி கண்ணுக்கு தெரியாத லேசர் லைட் ஒன்றை வெளியிடும். அந்த லைட் வெளியிடப்பட்டதிலிருந்து அது மீண்டும் தடுக்கப்படுவது வரை எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிட்டு அதற்கான தூரத்தை கணக்கிட்டு காரை சுற்றியுள்ள பகுதியை ஒரு 3d தொழில்நுட்பமாக காருக்குள் இருக்கும் டிரைவருக்கு எடுத்து வந்து காட்டும் தொழில்நுட்பமாக செயல்படுகிறது.

2025 BYD Seal Launch

மேலும் இந்த காரில் முக்கிய தொழில்நுட்பமாக l2+1 டிபைலட் 300 என்ற சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் கார் அதிவேகமாக செல்லும்போதும் சரி, அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளில் செல்லும்போதும் சரி, அல்லது தானியங்கியாக வாலட் பார்க்கிங் பகுதிக்கு செல்லும் போதும் சரி முற்றிலுமாக எந்தவித டிரைவரின் இன்புட்டும் இல்லாமல் செயல்படுவதற்கான திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரை பொறுத்தவரை பிஒய்டி நிறுவனம் இ-பிளாட்பார்ம் 3.1 என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இதே பிளாட்பார்மில் தான் நிறுவனத்தின் ஸூ லயன் 07 என்ற கார் உருவாக்கப்பட்டது. அந்த காரின் பெயரை போலவே இந்த காரின் பெயரிலும் சீல் 07 என பெயர் வைக்கலாம் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர் பல்வேறு கருத்துகளில் இந்த பெயர் தேவை இல்லை என கூறுவது தெரியவந்ததால் இந்த 07 என்ற பெயர் நீக்கப்பட்டு விட்டது. அளவுகளை பொருத்தவரை இதற்கு முன்னர் வெளியான அதே சீல் என்ற செடான் காரின் அளவுகள் தான் இந்த காரில் பின்பற்றப்பட்டுள்ளது.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4800 மிமீ நீளமும் 1875 மிமீ அகலமும் 1460 மிமீ உயரமும் 2920 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 12இன்1 எலெக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இப்படியான தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட உலகின் முதல் கார் இதுதான். இந்த காரில் பாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் அதிக திறன் கொண்ட தெர்மல் மேனேஜ்மென்ட் மாடல் வாகனத்தின் பாதுகாப்பு கட்டுமான சிடிபி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உலகின் முதல் இன்டெலிஜென்ட் மோஷன் கண்ட்ரோல் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் சொகுசு, ஸ்டெபிளிட்டி, ஹேண்டிலிங் உள்ளிட்ட அம்சங்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் சஸ்பென்ஷன் செட்டப்பையும் ஸ்டேபிளாக வைத்திருக்க உதவுகிறது. ஆல்வீல் டிரைவ் வேரியண்டில் டம்பிங் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை நான்கு போர்க் கொண்ட பிளாட் பாட்டம் ஸ்டேரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது போக பெரிய மத்தியில் பொருத்தப்பட்ட புரோட்டின் டச் ஸ்கிரீனில் ரொடேட் செய்யக்கூடிய ஆப்ஷனுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக வயர்லெஸ் சார்ஜர் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத ஏசி வெண்ட்கள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த காரில் 13 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் மொத்தம் 2விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி 61.44 கிலோவாட் ஹவர் மற்றும் 80.64 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கிறது. இது முறையே 510 மற்றும் 650 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 228 எச்பி திறன் கொண்ட பின்பக்க மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. மிட் வேரியண்டில் இது 308 எச்பி திறன் கொண்டதாகவும், டாப் வேரியண்டில் 523 எச்பி திறன் கொண்டதாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கார் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடியில் பிக்கப் செய்துவிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை சார்ஜ் செய்ய 10-80% சார்ஜுக்கு வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் இப்படியான ஒரு காரை தயாரித்து மிகவும் குறைவான விலையில் இவ்வளவு அம்சங்களை உட்பகுத்தி கொண்டு வந்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது அதிக விலையில் இருக்கும் என்றாலும், இதே அளவு தொழிற்நுட்பம் மற்றும் வசதியைக் கொண்ட காரின் விலையை ஒப்பிடும்போது குறைவாக தான் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 7:00 [IST]
English summary
2025 byd seal launched price 20 lakhs adas safety parking features
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X