சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்ளும் ஹோண்டா.. இவ்ளோ அழகான காரானு எல்லாரும் வாயடைச்சு நிக்க தயாரா இருங்க!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) விரைவில் இந்தியாவில் அதன் அமேஸ் (Amaze) கார் மாடலின் புதிய தலைமுறை (New Gen) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருப்பது இரண்டாம் தலைமுறை அமேஸ் ஆகும். விரைவிலேயே இதை விற்பனையில் இருந்து வெளியேற்றிவிட்டு மூன்றாம் தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஹோண்டா. இதன் ஸ்கெட்ச் (Sketch) படங்களையே தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
சமீபத்தில் இந்த கார் மாடலின் முதல் டீசர் படம் (Teaser Pic)-ஐ வெளியிட்ட நிலையில் தற்போது ஸ்கெட்ச் படத்தையும் ஹோண்டா வெளியிட்டு இருக்கின்றது. இந்த ஸ்கெட்ச் படம் வாயிலாக மிகவும் அழகான வாகனமாக மூன்றாம் தலைமுறை அமேஸ் கார் தயார் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மிக முக்கியமாக இப்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV) கார் மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு புதிய தலைமுறை அமேஸ் தயார் செய்யப்பட்டு இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. இந்தியாவில் முதன் முதலில் ஹோண்டா அமேஸ் கார் 2013 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக 2018 ஆம் ஆண்டிலேயே இப்போது விற்பனையில் இருக்கும் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது மூன்றாம் தலைமுறை அமேஸ் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஹோண்டா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹோண்டா சிட்டி-க்கே சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அழகிய வாகனமாகவே அது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக ஹூண்டாய் அவுரா (Hyundia Aura) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) உள்ளிட்ட கார் மாடல்களுக்கே மிகப் பெரிய சவாலாக இந்த காரின் வருகை அமைய இருக்கின்றது.
இதற்கேற்ப முற்றிலும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட வாகனமாக அமேஸ் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தனித்துவமான ஹெட்லைட், டிஆர்எல், கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் லைட்டுகள் அட்டகாசமானதாகக் காட்சியளிக்கின்றன.
அந்தவகையில், இரட்டை பீம்கள் கொண்ட எல்இடி ஹெட்லைட், ஒரு பக்க முறுக்கு மீசையை பிரதிபலிக்கக் கூடிய எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இதன் பின் பக்கமும் முற்றிலும் அட்டகாசமானதாக தயார் செய்யப்பட்டு இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கெட்ச் படங்கள் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.
தொடர்ந்து, காரின் கவர்ச்சியான வெளிப்புற தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமையும் விதமாக அழகிய அலாய் வீல்களும் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. எஞ்சினை பொருத்த வரை இந்த காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும். கியர்பாக்ஸை பொருத்த வரை 5ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி-யே எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த காரில் எச்விஏசி வெண்ட்டுகள், மிதக்கின்ற வகையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் கப் ஹோல்டர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி டிசையர் கார் மாடல் சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதைபோலவே, ஹோண்டா அமேஸ்-ஸிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படும் எனில் அதற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








