அதிகம் மைலேஜ் தரும் காராக மாற போகிறது ஹோண்டா சிவிக்.. மாருதியின் அடி மடியிலேயே கை வைக்க போகும் கார்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் (Sedan) ரக கார் மாடலாக சியாஸ் (Ciaz) இருக்கின்றது. பிரீமியம் அம்சங்களை தாங்கி இருப்பதில் மட்டுமல்ல இந்த கார் மாடல் அதிகம் மைலேஜ் தருவதிலும் சிறந்த வாகனமாக காட்சியளிக்கின்றது.
இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆப்ஷன் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.65 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 20.04 கிமீ மைலேஜையும் வழங்கும். இத்தகைய அதிகம் மைலேஜ் தரும் காருக்கு போட்டி அளிக்க வேண்டும் என்கிற நோக்கில் ஹோண்டா அதன் சிவிக் (Honda Civic) கார் மாடலை தயார் செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, 2025 சிவிக்-இல் மிகவும் பவர்ஃபுல்லான ஹைபிரிட் தொழில்நுட்பத்தை ஹோண்டா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே மைலேஜ் தருவதிலும், திறனை வெளிப்படுத்துவதிலும் 2025 சிவிக் மிக சிறந்ததாக வாகனமாக இருக்கும் என தெரிகின்றது. இந்த கார் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனில் அதன் வருகை மிகப் பெரிய போட்டியாக மாருதி சுஸுகியின் அதிகம் மைலேஜ் தரும் செடான் கார் மாடலான சியாஸ்-க்கு அமையும்.
இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் ஹோண்டாவின் சிட்டி (5ஆம் தலைமுறை மற்றும் இ:இஎச்இவி), அமேஸ் மற்றும் எலிவேட் ஆகிய கார் மாடல்களே விற்பனையில் இருக்கின்றன. சிவிக் விற்பனையில் இல்லை. இந்த புதிய வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய சிவிக் அதிக மைலேஜ் தரும் மற்றும் அதிக திறனை வெளியேற்றும் காராக மட்டுமே இருக்கப் போவதில்லை.

அது அதிக ஸ்போர்ட்டியான லுக்கைக் கொண்ட வாகனமாகவும் இருக்கும். குறிப்பாக, இந்த காரின் முன் பக்கத்திற்கு மிகவும் முரட்டுத் தனமான லுக் வழங்கப்பட்டு இருக்கின்றது. புதிய கிரில், புதிய பம்பர், ஷார்பான ஹெட்லைட், கவர்ச்சியான வால் பகுதி மின் விளக்கு ஆகியவை இந்த காருக்கு பலம் சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டு இறுக்கின்றது.
இரண்டு மோட்டார்கள் கொண்ட ஹைபிரிட் சிஸ்டமே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே அதிக திறனையும், மைலேஜையும் தரும் காராக சிவிக்கை மாற்றி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அதிகாரப்பூர்வ மைலேஜ் விபங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இது லிட்டருக்கு 25 கிமீ முதல் 26 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. மேலும், உலக சந்தையில் இந்த கார் மாடல் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

எல்எக்ஸ், ஸ்போர்ட், ஸ்போர்ட் ஹைபிரிட் மற்றும் ஸ்போர்ட் டூரிங் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். 200 எச்பி திறன் வரை வெளியேற்றும் திறன் கொண்டதாகவே 2025 சிவிக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதே திறனைக் கொண்டதாக 2025 சிவிக் இந்தியாவிற்கு வருமா என்பது சந்தேகமே.
இதேபோல், மேலே பார்த்த ட்ரிம்களுடனேயே 2025 சிவிக் இந்தியாவில் களமிறக்கப்படுமா என்பதும் சந்தேகமே. இருப்பினும், அதிகம் மைலேஜ் மற்றும் அதிக திறனைக் கொண்டதாக சிவிக்காக அது இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்தியாவில் மாருதி சியாஸ்-க்கு அது கடுமையான போட்டியாளனாக அமைவது கட்டாயம் உறுதியாகி இருக்கின்றது.
1.5 லிட்டர் டர்போ மற்றும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சினே ஆப்ஷனே 2025சிவிக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த காரில் பாதுகாப்பு வசதியாக டிரைவர் அசிஸ்டன் சிஸ்டம், மோதலை தவிர்க்கும் பிரேக்கிங் சிஸ்டம் (Collision Mitigation Braking System), பாதாசாரிகளைக் கண்கானிக்கும் வசதி, முன் பக்க மோதலை தவிர்ப்பதற்கான எச்சரிக்கை, லேன் கீப் அசிஸ்ட் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எப்போது சிவிக் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஹோண்டாவின் எலிவேட் எஸ்யூவி-க்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைப்போல இன்னும் சில புதிய தயாரிப்புகளையும் அது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்த வரிசையில் சிவிக் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









