ஹோண்டாவோட இந்த காரு மட்டும் இந்தியா வந்துச்சு மாருதி என்ன அதோட அப்பனே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது!
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா (Honda), அதன் அதிக சிறப்புகளைத் தாங்கிய சிஆர்-வி (CR-V) கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. அமெரிக்க சந்தைக்கான இந்த சூப்பரான கார் பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
அதாவது என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் திறனைக் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது? இந்த காரில் உள்ள சிறப்பம்சம் வேறு எந்த காரிலும் இல்லையா? இதுபோன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் 2025 சிஆர்-வி இ-எஃப்சிஇவி (CR-V e-FCE) காரை அமெரிக்க சந்தையில் வெளியீடு செய்து இருக்கின்றது. இந்த வெளியீடு நிகழ்வு மற்ற நாடுகளில் உள்ள ஹோண்டா கார் பிரியர்களை சற்றே பொறாமையில் ஆழ்த்தி இருக்கின்றது என கூறலாம்.
ஏனெனில் அந்தளவிற்கு அதிக சிறப்புமிக்க காராகவே இதனை அமெரிக்கர்களுக்காக தயார் செய்து தற்போது அங்கு அறிமுகம் செய்திருக்கின்றது, ஹோண்டா. 2025 மாடல் என கூறப்படும் இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் அம்சம் கொண்ட ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இதில் என்ன ஆச்சரியம் இதுபோன்ற கார்களைதான் வேறு பிராண்டுகளும் விற்பனைக்கு வழங்குகின்றனவே என நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்த காரில் சில தனித்துவமான யுக்திகளை பயன்படுத்தி இருக்கின்றது, ஹோண்டா. உலக சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான ஃப்யூவல் செல் வாகனங்கள் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் மட்டுமே இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், ஹோண்டா இந்த காரை தனியாகவும் சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியுடன் உருவாக்கி இருக்கின்றது. அதாவது, பிளக்-இன் ஹைபிரிட் கார்களைப் போல இந்த காரை ஹோண்டா வடிவமைத்திருக்கின்றது. பிளக்-இன் ஹைபிரிட் கார்களை எப்படி பெட்ரோல் மற்றும் தேவைப்படும் நேரங்களில் சார்ஜேற்றி எலெக்ட்ரிக் காராக பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அதைபோலவே இந்த காரையும் தேவைப்படும் நேரத்தில் ஃப்யூவல் செல்லை நிரப்பியும் அல்லது சார்ஜேற்றியும் ஓட்டிக் கொள்ள முடியும்.
தற்போது அமெரிக்காவில் போதுமான ஃப்யூவல் செல் நிரப்பும் நிலையங்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்த வசதியுடன் தன்னுடைய காரை வடிவமைத்திருக்கின்றது, ஹோண்டா நிறுவனம். எனவே ஃப்யூவல் செல் நிலையங்கள் தட்டுப்பாடு உள்ள நேரங்களில் ஹோண்டா சிஆர்-வி கார் பயன்பாட்டாளர்களால் அந்த காரை சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து இயக்கிக் கொள்ள முடியும்.
ஓர் முழு சார்ஜில் இந்த கார் 47 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதற்காக மிகப் பெரிய பேட்டரி பேக்கை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் வசதியுடன் வேறு எந்த காரும் அமெரிக்காவில் விற்பனைக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவே அந்நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய டெக்னாலஜியை ஏற்றுக் கொண்ட கார் மாடலாக ஹோண்டாவின் சிஆர்-வி இ-எஃப்சிஇவி மாறி இருக்கின்றது. இந்த காரில் எலெக்ட்ரிக் கார் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது 174 எச்பி மற்றும் 311 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இத்துடன், 17.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பிக் கொள்ளும் சிலிண்டர் அமைப்பும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பும்பட்சத்தில் 435 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
அதேவேளையில், காரில் ஃப்யூவல் செல்லை நிரப்ப முடியவில்லை என்றால் அருகில் உள்ள மின்சார வாகன சார்ஜிங் மையத்தைப் பயன்படுத்தி சார்ஜ் செய்துக் கொண்டு பயணிக்க முடியும். அதேவேளையில், மிகவும் பிரீமியம் ரைடு அனுபவத்தையும் இந்த காரில் அதன் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக 12ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே -ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிக்கொண்ட 9அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.2அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கன்சோல், ஒயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் மற்றும் ஹீட் வசதிக் கொண்ட முன்பக்க இருக்கை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, அடாஸ் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களே இப்போதுதான் வேகமாக வளர தொடங்கி இருக்கின்றது. அதாவது, இப்போதே மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படிபடியாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான், நம் நாட்டில் ஹைபிரிட் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், விரைவில் இந்தியாவையும் ஃப்யூவல் செல் வாகனங்கள் ஆளத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








