ஒரு ஊரே சொகுசா ஒக்காந்து கிட்டு போக கூடிய காரின் விலை இவ்ளோதானா! வாங்கறதுக்கு பெரிய அடிதடியே நடக்க போகுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில், கியா கேரன்ஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கியா நிறுவனம் தற்போது கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக கியா நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியாவில் (South Korea), கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்படவுள்ளன. இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொகுப்பு முக்கியமானதாக இருக்கலாம்.

இதுதவிர டேஷ்போர்டில் 2 டிஸ்ப்ளேக்களும் கொடுக்கப்படலாம். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இந்திய கார்களில் தற்போது இந்த வசதி மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இவை எல்லாம் தவிர, எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகளையும் நாம் எதிர்பார்க்கலாம். செயல்திறனை பொறுத்தவரையில் தற்போது வழங்கப்பட்டு வரும் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) எவ்விதமான மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது. எனவே தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் T-GDi பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிசைனை (Design) பொறுத்தவரையில், புதிய ஹெட்லேம்ப்கள், புதிய டெயில்லைட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர டிசைனில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை சுமார் 11 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற எம்பிவி ரக கார்களுக்கு, கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








