இந்த காரு மட்டும் இந்தியா வந்துச்சு ஃபார்ச்சுனர் இருக்க இடம் தெரியாம போயிரும்! பாலை வனத்துல வச்சும் ஓட்டலாம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan) அதன் 7 ஆம் தலைமுறை பேட்ரோல் (Patrol) கார் மாடலை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. 3.5 லிட்டர் வி6 (3.5 litre V6) எஞ்சினுடனேயே இந்த காரை தயார் செய்து அது வெளியீடு செய்திருக்கின்றது. 14 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் இந்த காரை அப்டேட்டுகளுடன் நிஸான் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை முன்னிட்டே இந்த வெளியீட்டு நிகழ்வை நிஸான் அரங்கேற்றி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதன் விற்பனைக்கான வருகை இந்த ஆண்டிற்கு பின்னரே அரங்கேறும் என கூறப்படுகின்றது. துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களையும் நிஸான் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை இந்த காரில் நிஸான் சேர்த்திருக்கின்றது. அவை என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க் இருக்கின்றோம் வாங்க.

நிஸான் பேட்ரோல் ஓர் முழு அளவு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பல்வேறு கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். குறிப்பாக ஃபார்ச்சூனர் போன்ற பெரிய உருவம் கொண்ட கார்களுக்கே கடுமையான போட்டியாக இதன் வருகை அமைய இருக்கின்றது.
இதுபோன்ற பெரிய உருவம் கொண்ட கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்க வேண்டும் என்பதற்காக சிறப்பம்சங்களையும், நவீன கால தொழில்நுட்பங்களையும் இந்த காரில் நிஸான் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, எந்த மாதிரியான கடுமையான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதாகவே இந்த காரை நிஸான் தயார் செய்திருக்கின்றது.

கரடு-முரடான மலை பாதையோ, மணல் பாங்கான பாலைவனமோ எதுவாக இருந்தாலும் இந்த கார் சமாளித்துவிடுமாம். இதேபோல், கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராகவும் இதனை நிஸான் தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எல்இடி லைட் வேற லெவல் அழகானதாகக் காட்சியளிக்கின்றது.
'E' எனும் எழுத்தை பிரதிபலிக்கக் கூடிய எல்இடி டிஆர்எல் லைட்டே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, பாக்ஸியான தோற்றம், அகலமான உருவம், குரோம் பூச்சால் அலங்கரிக்கப்பட்ட கிரில், ரேஞ்ச் ரோவர் கார்களில் காணப்படுவதைப் போன்ற முன் பக்க பம்பர் ஆகியவற்றையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.
இவையே நிஸான் பேட்ரோலின் முன் பக்கத்திற்கு கூடுதல் அழகைச் சேர்க்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. புதிய பேட்ரோலின் முன் பக்கம் மட்டுமல்ல பக்கவாட்டு மற்றும் பின் பக்கமும் மிகுந்த அழகானதாகவேக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த காரின் உட்பக்கத்தையும் சிற்பியை போல நிஸான் செதுக்கியிருக்கின்றது.
இதற்கு சான்றாக பேட்ரோலின் டேஷ்போர்டு காட்சியளிக்கின்றது. இந்த பேட்ரோல் ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் ஆகும். எனவே அதிக நபர்களை இந்த காரில் தாராளமாக ஏற்றிச் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஒரு குடும்பமே பயணிப்பதற்கு ஏதுவான வாகனமாக இது இருக்கும் என தெரிகின்றது.
தொடர்ந்து, பிரீமியம் ரைடு அனுபவத்தை பெறும் விதமான அம்சங்களையும் இந்த காரில் நிஸான் அதிகளவில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் அதிகளவில் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், ஃபாக்ஸ் பிரஷ்டு அலுமினிய ட்ரிம்மும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது.
இவற்றுடன் சேர்த்து 14.3 அங்குல அளவுள்ள இரண்டு திரைகளையும் இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது. இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று, இன்ஃபோடெயின்மென்ட் திரையாகவும் வேலை செய்யும். இதற்கு அடுத்தபடியாக சில மாற்றங்களையும் இந்த காரில் நிஸான் செய்திருக்கின்றது.
அந்தவகையில் வழக்கமான கியர் செலக்டர்களுக்கு பதிலாக சில பட்டன்கள் சென்டர் கன்சோலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எச்விஏசி கன்ட்ரோல்களுக்கு கீழே இது நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு கன்ட்ரோல்கள் மிகவும் அட்வான்ஸ்டானதாகவே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது ஓர் ஆஃப்-ரோடு வாகனம் என்பதால் பலதரப்பட்ட நிலபரப்புகளை சமாளிப்பதற்கான வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கான கன்ட்ரோலும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கன்ட்ரோல்கள் எச்விஏசி கன்ட்ரோலுக்கு கீழேயே இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, பேட்ரோலில் பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களையும் நிஸான் வழங்கி இருக்கின்றது. 12 ஸ்பீக்கர்கள் கொண்ட பிரீமியம் சவுண்டு சிஸ்டம், பின் பக்கத்திற்கான பொழுதுபோக்கு திரை உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
இந்த அம்சம் காருக்குள் மினி பார்ட்டியைக் கொண்டாட உதவியாக இருக்கும். இதுதவிர, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், யுஎஸ்பி சி-போர்ட் சார்ஜர், ஹெட்-அப் திரை மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான கெஸ்ச்சர் கன்ட்ரோல் ஆகியவற்றையும் இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.5 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 425 எச்பி மற்றும் 700 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இத்துடன், ஆஃப்-ரோடுகளைச் சமாளிக்கும் விதமாக 4 வீல்களுக்கும் இயங்கும் திறனை இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது.
மேலும், பழைய ஜெனரேஷனில் பயன்படுத்தப்பட்டதைக் காட்டிலும் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாகவே இந்த புதிய தலைமுறை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. முந்தைய வெர்ஷனில் 5.6 லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் சேண்டு (Standard), ராக் (Sand), மட் (Rock), ஈகோ (Eco) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் பேட்ரோல் கார் மாடல் விற்பனைக்கு வரும் எனில் பலதரப்பட்ட கார் மாடல்களுக்கு போட்டியாளனாக அமையும். குறிப்பாக, அரசியல்வாதிகள் விரும்பி வாங்கும் கார் மாடலான ஃபார்ச்சூனர் எஸ்யூவி-க்கே இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய எந்த விபரமும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








