டாடா கார் எதுவும் லிஸ்டில் இல்லை!! 10 லட்சம் பேரது நம்பிக்கையை பெற்ற 3 இந்திய எஸ்யூவி கார்கள்!!

இன்றைய காலத்தில் இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் பல புதிய எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒரு காலத்தில் எஸ்யூவி கார்கள் என்றாலே விலையுயர்ந்தவை ஆக இருந்தன.

இந்தியாவில் இன்றைய கால நிலவரப்படி, டாடா நெக்ஸான், டாடா பஞ்ச், கியா சொனெட் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களாக உள்ளன. ஆனால் இதுவரையில், இந்தியாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் மூன்றே மூன்று தான். மஹிந்திரா ஸ்கார்பியோ, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா என்பன அவை ஆகும்.

suvs with 10 lakh customers

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் எஸ்யூவி கார் இதுவாகும். இதனாலேயே இந்த லிஸ்ட்டில் ஸ்கார்பியோவை முதலாவதாக பார்க்கிறோம். முதன்முதலாக 2002ஆம் ஆண்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், இந்த 22 வருடங்களில் ஸ்கார்பியோ கார்களின் தோற்றம் பல்வேறு விதங்களில் மாற்றப்பட்டுள்ளன.

இருப்பினும், ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவத்தில் மஹிந்திரா கை வைக்கவில்லை. தற்சமயம் மார்க்கெட்டில், ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஸ்கார்பியோ கிளாசிக் ஆனது பாரம்பரியமான தோற்றத்தையும், ஸ்கார்பியோ-என் ஆனது அடுத்த தலைமுறைக்கான தோற்றத்தையும் கொண்டுள்ளன.

suvs with 10 lakh customers

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் முதன்மையானதாக ஹூண்டாய் உள்ளது. ஹூண்டாய் இத்தகைய நிலையை அடைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, கிரெட்டா ஆகும். 2015ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா தற்சமயம் ஸ்டாண்டர்ட் மற்றும் என்-லைன் என 2 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் கிரெட்டா என்-லைன் கார் சில வருடங்களுக்கு முன்புதான் அறிமுகம் செய்யப்பட்டது. இது, செயல்படுதிறன்மிக்க கிரெட்டா மாடலாக விளங்குகிறது. கிரெட்டா கார்களின் முக்கிய சிறப்பம்சமே அவற்றின் என்ஜின் ஆப்ஷன்களின் எண்ணிக்கை ஆகும். ஏனெனில், மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிரெட்டா விற்பனை செய்யப்படுகிறது. இவை இல்லாமல், சிஎன்ஜி ஆப்ஷனிலும் ஹூண்டாய் கிரெட்டா கிடைக்கிறது.

suvs with 10 lakh customers

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): முதன்முதலாக 2016ஆம் ஆண்டில் விட்டாரா பிரெஸ்ஸா காரை சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால், கிராண்ட் விட்டாரா என்கிற மற்றொரு காரை அறிமுகம் செய்வதற்காக, சில வருடங்களுக்கு முன்பு விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்த 'விட்டாரா' பெயரை மாருதி நிறுவனம் நீக்கியது.

ஸ்கார்பியோ, கிரெட்டா கார்களை போன்று டீசல் என்ஜின் ஆப்ஷனில் பிரெஸ்ஸா கிடைப்பதில்லை. 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே பிரெஸ்ஸா விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சிஎன்ஜி ஆப்ஷனிலும் பிரெஸ்ஸாவை வாங்கலாம். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.34 லட்சத்தில் இருந்து ரூ.14.14 லட்சம் வரையில் உள்ளன.

suvs with 10 lakh customers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹேட்ச்பேக், செடான் ரக கார்கள் இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ள எஸ்யூவி கார்கள் இவை மூன்று மட்டுமே ஆகும். இந்த லிஸ்ட் இதோடு நின்றுவிட போவதில்லை. ஏனெனில் டாடா நெக்ஸான், டாடா பஞ்ச் உள்ளிட்ட கார்கள் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. இவையும் மார்க்கெட்டில் 10 லட்சத்திற்கு மேல் விற்பனையாகுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 28, 2024, 8:00 [IST]
English summary
3 indian suv cars that earned trust of more than 10 lakh customers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X