2,3 குடும்பம் ஒன்னா போகலாம்! பைக் மாதிரி மைலேஜ்! விலை எவ்ளோனு தெரிஞ்சா கண்ண மூடிட்டு வாங்கீருவீங்க!
தீபாவளி (Diwali) பண்டிகையை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வரிசையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய கார்களை வாங்கவும் பலர் திட்டமிட்டு கொண்டுள்ளனர். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. இந்திய சந்தையில் 7 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலைக்குள் கிடைக்க கூடிய கார்களின் பட்டியலை, இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். ஓரளவிற்கு குறைவான விலையில் புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி உதவி செய்யும். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.
1. ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): இந்த பட்டியலில் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான கார் இதுதான். வெறும் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே ரெனால்ட் ட்ரைபர் கார் கிடைக்கிறது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே இந்த காரில் 7 பேர் பயணம் செய்ய முடியும்.

அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் ஏற்றது. இந்த காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
2. டாடா பன்ச் (Tata Punch): இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வெறும் 6.13 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே டாடா பன்ச் கார் கிடைக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாக டாடா பன்ச் உள்ளது.

டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 86 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டாடா பன்ச் காரில் இதே 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட சிஎன்ஜி வேரியண்ட்டும் கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை 7.23 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
3. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இது டாடா பன்ச் காருக்கு, நேரடி போட்டி மாடல் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், டாடா பன்ச் காரை போலவே, 6.13 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே ஹூண்டாய் எக்ஸ்டர் காரும் கிடைக்கிறது.
டாடா பன்ச் காரை போலவே, ஹூண்டாய் எக்ஸ்டர் காரிலும், இரண்டு 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்று பெட்ரோல் இன்ஜின் ஆகும். மற்றொன்று சிஎன்ஜி இன்ஜின் ஆகும். இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை 8.43 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், சிஎன்ஜி வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய இரண்டுமே மைக்ரோ எஸ்யூவி ரக கார்கள் ஆகும்.
4. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், 6.49 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக 82 பிஎஸ் பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போதைய நிலையில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் இல்லை. ஆனால் கூடிய விரைவில் இந்த காரிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இங்கே கூறப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் எல்லாம், இந்த 4 கார்களையும் பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








