மாருதி காராக இருந்தாலும் இப்போது வாங்குவது சரியாக இருக்காது... இதுக்காகவே வெயிட் பண்ணலாம்!!
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி விட்டது. தீபாவளி, தசரா, ஆயுத பூஜை என தொடர்ச்சியாக பண்டிகைகள் வர உள்ளன. இதற்கேற்ப புதிய கார்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கார்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம். இவற்றில் சில கார்களின் அறிமுகங்கள் சற்று தாமதமாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த 4 கார்களை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.
மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களுள் ஒன்று. தாழ்வான செடான் ரக கார்களில் அதிகம் விற்பனையாகும் ஒரே கார். இப்படிப்பட்ட பல சிறப்புகளை கொண்ட டிசைர் விரைவில் முக்கியமான ஜென்ரேஷன் அப்கிரேடை பெறவுள்ளது. 2024 டிசைர் புதிய டிசைன், மேம்பட்ட கேபின் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட மெக்கானிக்கல் பாகங்களை கொண்டிருக்கும்.

குறிப்பாக, புதிய மாருதி சுஸுகி டிசைர் கார் முற்றிலும் புதுமையான முன்பக்கத்தை பெற்றுவர உள்ளது. புதிய டிசைரின் படங்கள் ஏற்கனவே இணையத்தில் கசிய ஆரம்பித்துவிட்டன. இந்த காரில் 15-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படலாம். புதிய ஜென்ரேஷன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சமீபத்தில்தான் கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் வழங்கப்பட்ட நிறைய விஷயங்களை புதிய டிசைரில் எதிர்பார்க்கிறோம்.
ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்தியாவில் ஓரளவிற்கு அதிகம் விற்பனையாகும் மிகவும் சில ஹோண்டா கார்களுள் அமேஸும் ஒன்று. மேலே பார்த்த மாருதி டிசைருக்கு விற்பனையில் நேரடி போட்டியாக உள்ள செடான் கார்களுள் இதுவும் ஒன்று. ஹோண்டா அமேஸும் ஜப்பானிய ஸ்டைல் செடான் கார் ஆகும். டிசைரை போலவே, ஹோண்டா அமேஸ் காரும் நியூ ஜென்ரேஷன் அப்கிரேடுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்போது உள்ள அமேஸ் காரை விட புதிய அமேஸ் காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், அப்படிப்பட்ட சேசிஸில் இந்த கார் உருவாக்கப்படுகிறதாம். ஹோண்டா சிட்டி காரை தவிர்த்து மற்ற ஹோண்டா கார்கள் இந்தியாவில் அப்கிரேட் செய்யப்படுகிறது என்றாலே கொஞ்சம் ஆச்சிரியமானது தான்.
நிஸான் மேக்னைட் (Nissan Magnite): இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்க போகும் மற்றொரு ஜப்பானிய ஸ்டைலை ஒத்த கார் இதுவாகும். இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிவரும் நிஸான் நிறுவனத்தில் இருந்து ஓரளவிற்கு விற்பனையாகும் ஒரே கார் மேக்னைட் ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் இதுவரையில் அதிகம் விற்பனையான நிஸான் கார், மேக்னைட் எனலாம்.

மேக்னைட் கார் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட போவதில்லை. காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தின் டிசைன்ஸ் மாற்றப்படும். புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்படலாம். காருக்குள் சில புதிய டெக்னாலஜிகள் இடம்பெறலாம். பயணிகளின் பாதுகாப்புக்கு காரில் 6 ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்படும். மற்றப்படி, காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
மஹிந்திரா எக்ஸ்யூவி400 (mahindra xuv400): மஹிந்திராவின் மாடர்ன் எலக்ட்ரிக் காரான இதுவும் விரைவில் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை போன்று எக்ஸ்யூவி400 காரின் தோற்றம் மாற்றப்பட உள்ளது. ஏனெனில் இரண்டும் மஹிந்திராவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும்.

காரின் வெளிப்பக்க ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்பர்களின் டிசைன்கள் மாற்றப்படும். புதிய அலாய் சக்கரங்கள் வழங்கப்படும். காருக்கு உள்ளேயும் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை போன்று மாற்றிவிடுவார்கள். மற்றப்படி, பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டாரின் திறன்களில் மாற்றம் இருக்காது. குறுகிய காலத்திற்கு, எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் புரோ வேரியண்ட்களுக்கு சுமார் ரூ.2.75 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இதில் சில கார்களின் அறிமுகங்கள் தாமதமாகுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இவற்றின் அறிமுகங்கள் உறுதியானவை. அதேபோல், இந்த பண்டிகை காலத்திற்கு ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் ஸ்பெஷல் எடிசன்கள் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும்போல் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications









