கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?

இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் யூஸ்டு கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் யூஸ்டு கார்களை பெண்கள் வாங்குவது எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதையும், இந்த விபரங்களை வெளியிட்டுள்ள தனியார் நிறுவனத்தை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்றான நம் இந்தியாவில், புதிய கார்களுக்கு இணையாக, மற்றவர்கள் பயன்படுத்திய யூஸ்டு கார்களும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், நம் நாட்டில் யூஸ்டு கார்கள் சார்ந்த வணிகங்களும் கோடிக் கணக்கிலான ரூபாய்களில் நடைபெறுகின்றன.

most of women bought used cars

இந்தியாவில் யூஸ்டு கார்கள் வணிகத்தில் முன்னிலையில் இருக்கும் கார்ப்பிரேட் நிறுவனம் என்றால், அது ஸ்பின்னி ஆகும். யூஸ்டு கார்களை வாங்க & விற்க இந்தியாவின் முன்னணி இணைய தளம் ஸ்பின்னி ஆகும். ஸ்பின்னி நிறுவனத்தின் யூஸ்டு கார்கள் விற்பனை இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 31% அதிகரித்துள்ளது. அதாவது, 2023ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களை காட்டிலும், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஸ்பின்னி யூஸ்டு கார்களின் வணிகம் 31% வளர்ச்சி கண்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை ஸ்பின்னி சுட்டிக்காட்டி உள்ளது. இதுகுறித்து ஸ்பின்னி நிறுவனம் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் குறிப்பாக இந்த 2024 மார்ச் மாதத்தில் யூஸ்டு கார்களை வாங்கியவர்களில் சுமார் 46 சதவீதத்தினர் பெண்களாவர்.

most of women bought used cars

ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், மொத்த யூஸ்டு கார் கஸ்டமர்களில் ஏறக்குறைய 35 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாக இருந்தனர். இதனால், 46% பெண் கஸ்டமர்கள் என்பது யூஸ்டு கார்கள் மார்க்கெட்டில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக தலைநகர் டெல்லியில் அதிக பெண் கஸ்டமர்கள் யூஸ்டு கார்களை வாங்குகின்றனர். எந்த அளவிற்கு அளவிற்கு என்றால், டெல்லியில் யூஸ்டு கார்களை வாங்குவோரில் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.

டெல்லிக்கு அடுத்து, யூஸ்டு-கார்களை வாங்குவோரில் 2வது இடத்தில் மும்பை 46% பெண் கஸ்டமர்களுடனும், பெங்களூர் 41 சதவீதத்துடன் 3வது இடத்திலும், புனே 39 சதவீதத்துடன் 4வது இடத்திலும் இருப்பதாக ஸ்பின்னி தெரிவித்துள்ளது. அதேபோல், கேரளாவின் கொச்சியிலும் பெண்கள் பலர் யூஸ்டு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக ஸ்பின்னி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

most of women bought used cars

இதில் இருந்து, இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு வரையில் யூஸ்டு கார்களை வாங்குவதற்கு பரவலாக பெண் கஸ்டமர்கள் கிடைத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. லக்னோ, ஜெய்பூர் போன்ற மெட்ரோ-அல்லாத நகரங்களில் கூட பெண் கஸ்டமர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாக ஸ்பின்னி கூறுகிறது.

ஸ்பின்னி இணையத்தள மூலமாக யூஸ்டு காரை வாங்கும் 30 - 40 வயதான பெண்கள் பரவலாக தேர்வு செய்யும் கார்களாக ரெனால்ட் க்விட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி சுஸுகி பலேனோ விளங்குகின்றன. 2015இல் நிறுவப்பட்ட யூஸ்டு கார் சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னியில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு யூஸ்டு காரும் சுமார் 200 சோதனை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில், டீலர்ஷிப் ஷோரூம்களில் இருந்து புதிய கார் வாங்குவதிலும் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், யூஸ்டு கார்கள் மார்க்கெட்டிலும் அதிகளவில் பெண் வாடிக்கையாளர்கள் குவிய துவங்கி இருப்பதாக ஸ்பின்னி தெரிவித்துள்ளது. நம் நாட்டில் யூஸ்டு கார்களை வாங்குபவர்களில் கிட்டத்தட்ட 2இல் ஒருவர் பெண் என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 8:00 [IST]
English summary
46 percent of women bought used cars in india in this march says spinny
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X