பைக் மாதிரி மைலேஜ் தரும் புது ஸ்விஃப்ட் காரின் விலை இவ்ளோதானா! டோக்கன் போட ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 29 லட்சம் பேர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ளனர்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 3வது தலைமுறை மாடல் ஆகும். ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதாலும், விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதாலும், ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. அனேகமாக நடப்பு மே மாதத்தின் 2வது வாரத்தில், 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 Maruti Suzuki Swift

அதற்கு முன்னதாக 4வது தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் நெருங்கி விட்டது என்பதையே இது உணர்த்துகிறது. எனவே 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ, 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 11 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024 Maruti Suzuki Swift Rear Design

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள 3வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், கே12 நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் 4வது தலைமுறை மாடலில் இதற்கு பதிலாக, புத்தம் புதிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் மிக சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என மாருதி சுஸுகி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி இன்ஜினே ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வசதிகளை பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை, 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போதைய நிலையில், 3வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6.24 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.28 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்படவுள்ளதாலும், டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாலும், 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். அனேகமாக இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை 6.75-7 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.

4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் வருகை, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 1, 2024, 17:52 [IST]
English summary
4th gen maruti suzuki swift official bookings open all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+