ரோடு எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்ல!! கொஞ்சம் செலவு செய்தால் போதும்... இதில் ஒரு தரமான எஸ்யூவி உங்க கையில்!!
எஸ்யூவி கார்கள் இன்றைய இந்திய மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையில் உள்ளன. ஆனால் அவை தோற்றத்தில் வேண்டுமாயின் எஸ்யூவியாக இருக்கலாம். ஆனால் உண்மையில், எஸ்யூவி என்பவை தோற்றத்தில் மட்டுமின்றி, செயல்படுதிறனிலும் வலுவானவை ஆக இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய எஸ்யூவி கார்கள் நம் இந்தியாவில் கொஞ்சம் குறைவாகவே விற்பனையில் உள்ளன.
அத்தகைய எஸ்யூவி கார்களை நம்மால் எளிதாக அடையாளம் காண முடியும். ஏனெனில், அவை நகரத்திற்கு வெளியேயும், மலைப்பிரதேச பகுதிகளிலும் மக்கள் பலரால் பரவலாக பயன்படுத்தப்படும். வழக்கமான கார் என்பதை தாண்டி, அவற்றின் தோற்றத்திலும் வித்தியாசத்தை காண முடியும். அத்தகைய 4x4 எஸ்யூவி கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா தார் (Mahindra Thar): 3 கதவுகளுடன் கிடைக்கும் மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். 3 கதவுகளை மட்டுமே கொண்டிருப்பதால், முன் மற்றும் பின் கதவுகளுக்கு இடையேயான தூரம் குறைவாக உள்ளது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப டயர்கள் நன்கு அகலமானதாக கொடுக்கப்படுகின்றன. தார் சமீபத்தில்தான் நியூ ஜென்ரேஷனுக்கு அப்கிரேட் செய்யப்பட்டது.

மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny): மார்க்கெட்டில் ஒரு சமயத்தில் பிரபலமாக இருந்த மாருதி ஜிப்ஸியின் இடத்தை நிரப்பும் விதமாக கொண்டுவரப்பட்டதே ஜிம்னி ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிம்னி விற்பனையில் மஹிந்திரா தாருக்கு போட்டியாக உள்ளது. ஆனால், ஜிம்னி 5 கதவுகளுடன் கிடைக்கிறது. இருப்பினும் தார் வாகனத்தை விட ஜிம்னி அளவில் சிறியதாக உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): ஸ்கார்பியோ கார்கள் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவை என்பதை கடந்த பல வருடங்களாக நிரூப்பித்து வருகின்றன. குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ-என் என்கிற நியூ-ஜென்ரேஷன் மாடல் பவர்புல் பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் செயல்திறன்மிக்கதாக உள்ளது. அத்துடன், 2-வீல்-டிரைவ் & 4-வீல்-டிரைவ் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha): மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் மாடர்ன் டெக்னாலஜிகள் மூலம் அட்வான்ஸானதாக இருக்கும் நிலையில், ஃபோர்ஸ் மோட்டார்ஸின் குர்கா வாகனம் ஓல்டு-ஸ்கூல் முறையில் தனித்துவமானதாக விளங்குகிறது. ஆதலால், பழைய காலத்து ஆஃப்-ரோடு வாகனங்களை விரும்புபவர்கள் குர்காவை வாங்க பார்க்கலாம். இந்த வாகனத்தில் முன் & பின்பக்க டிஃபென்ரென்ஷியல்கள் மெக்கானிக்கல்லி லாக் செய்யக்கூடியவையாக உள்ளன.

இஸுஸு வி-கிராஸ் (Isuzu V-Cross): எப்போதும் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு செல்ல விரும்புபவர்கள் வி-கிராஸ் டிரை செய்யலாம். ஏனெனில் இது, பின்பக்கத்தில் லோடு படுக்கையை கொண்ட பிக்-அப் டிரக் ஆகும். மிக சிறந்த 4x4 ஆஃப்-ரோடு திறன்களை கொண்ட இந்த ஜப்பானிய பிக்-அப் டிரக் வாகனம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதன் தனித்துவத்தை வெளிக்காட்டி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வென்ச்சரான பயணங்களை அதிகம் விரும்புவோர் இதில் ஒரு 4x4 எஸ்யூவி வாகனத்தை வாங்கலாம். மேலும், இவை தொலைத்தூர பயணங்களுக்கும் ஏற்றவை ஆக இருக்கும். இவற்றை காட்டிலும் செயல்திறன்மிக்க 4x4 எஸ்யூவி வாகனங்களும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. ஆனால், மிடில்-கிளாஸ் மக்களாலும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பவை இவை ஆகும். தற்போதைய நிலவரப்படி, இவற்றில் மஹிந்திராவின் ஸ்கார்பியோ-என் மற்றும் தார் வாகனங்களை மக்கள் நிறைய பேர் வாங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications









