குடும்பமாக 7 பேர் வரை சவுகரியமா போகலாம்!! பெருசா பணத்தை செலவழிக்காமல் வாங்கக்கூடிய 5 கார்கள்!

இந்தியாவில் கார்களின் தேவை சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. அதாவது, அந்த அளவிற்கு கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், உலகளவில் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்றாக நமது இந்தியா மாறி வருகிறது. நம் நாட்டில், ஷோரூமிற்கு சென்று புதியதாக கார் வாங்குபவர்கள், யூஸ்டு கார் வாங்குபவர்கள் என அனைவரது எண்ணிக்கைகளும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்து உள்ளன. இதன் காரணமாக, கார் நிறுவனங்களும் புது, புது கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன.

குறிப்பாக, எஸ்யூவி ரக கார்களுக்கு தொடர்ந்து கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். ஏனெனில், எஸ்யூவி கார்கள் கம்பீரமான தோற்றத்தில் இருப்பது மட்டுமின்றி, உள்ளேயும் அதிக இடவசதியை வழங்குகின்றன. இதனால், எஸ்யூவி கார்களுக்குள் ஏறுவதும், இறங்குவதும் எளியதாக இருக்கிறது. மேலும், எஸ்யூவி ரக கார்களை ஓட்டுவதும் எளிதாக இருப்பதாக சில கஸ்டமர்கள் தெரிவித்துள்ளனர்.

5 affordable 7-seater suv cars

அதிக பேருடன், குடும்பமாக பயணிக்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸாக எஸ்யூவி கார்கள் விளங்குகின்றன. அதிலிலும், 7 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி கார்களை வாங்கவே நம்மில் நிறைய பேர் விரும்புகிறோம். இருப்பினும், 7-சீட்டர் எஸ்யூவி கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பதால், சிலரால் வாங்க முடிவதில்லை. இந்த தொகுப்பில், இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஐந்து 7-சீட்டர் எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கலாம்.

மஹிந்திரா பொலேரோ நியோ (Mahindra Bolero Neo): பிரபலமான மஹிந்திரா பொலேரோ உடன் இதை குழப்பிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், தோற்றத்தில் இந்த கார் கொஞ்சம் வித்தியாசமானது. விசாலமான உட்பக்க இடவசதி உடன் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் 7-சீட்டர் கார் இதுவாகும். இந்த மஹிந்திரா காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.9.95 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

5 affordable 7-seater suv cars

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero): பொலேரோ நியோவை காட்டிலும், முற்றிலும் பெட்டகம் வடிவிலான எஸ்யூவி காரை எதிர்பார்ப்போர்க்கு மஹிந்திரா பொலேரோ ஏற்றதாக இருக்கும். ஷார்ப்பான முனைகளுடன் பெட்டகம் போன்று வடிவமைக்கப்படுவதால், பொலேரோவின் உட்பக்கத்தில் அதிக இடவசதி கிடைக்கிறது. பொலேரோ கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.98 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross): மேலே கண்ட கார்களை காட்டிலும் ஸ்டைலிஷான 7-சீட்டர் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த சிட்ரோன் கார் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், இந்த கார் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 7-சீட்டர் ஆப்ஷனில் சி3 ஏர்கிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.96 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

5 affordable 7-seater suv cars

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): மஹிந்திராவில் இருந்து தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவின் 3ஆம் தலைமுறை மாடலாக கடந்த 2022ஆம் ஆண்டில் இது மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கார்பியோ-என் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.85 லட்சம் ஆகும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic): ஸ்கார்பியோ-என் காரை போல் இல்லாமல், ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவ டிசைனில் கிடைக்கிறது. ரூ.13.59 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ள ஸ்கார்பியோ கிளாசிக் கார் 7-சீட்டர் மற்றும் 9-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 9-சீட்டர் ஆப்ஷனிலும் கிடைப்பதால், பழமையான டிசைனை கொண்டிருப்பினும் நிறைய பேர் இந்த காரை வாங்குகின்றனர்.

5 affordable 7-seater suv cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, வேறு சில 7-சீட்டர் எஸ்யூவி கார்களும் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. ஆனால், அவை ஒன்று அதிக விலையில் இருக்கின்றன அல்லது உட்பக்கத்தில் விசாலமான இடவசதியை வழங்குவதில்லை. இந்த ஐந்து 7-சீட்டர் எஸ்யூவி கார்களை நகரத்தில் மட்டுமின்றி, கிராம புறங்களில் வசிப்பவர்களும் தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2024, 8:00 [IST]
English summary
5 affordable 7 seater suv cars in india check full list here
மேலும்... #suv car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X