பெட்ரோல் என்ஜினில் பெஸ்ட் ஆனவை... கம்மியான விலை கிடைக்கும் 5 ஆட்டோமேட்டிக் கார்ஸ்!!
காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை நாளுக்கு விற்பனை அதிகரித்து வருகிறது. ஏனெனில், இத்தகைய எஸ்யூவி கார்கள் அளவில் மிகவும் பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் போதுமான இடவசதி உடன், மிடில்-கிளாஸ் மக்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. இதனாலேயே மார்க்கெட்டில் பல்வேறு கார் பிராண்ட்களில் இருந்து காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் உள்ளன.
காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பெரும்பாலும் பெட்ரோல் என்ஜின் உடன் தான் விற்பனையில் உள்ளன. அதேபோல், நிறைய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும், சில மாடல்கள் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross): 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் கடந்த 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சிட்ரோன் கார். ஆனால், சமீபத்தில் இந்த காரில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் விலை குறைவான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றான சி3 ஏர்கிராஸில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. 5 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் இந்த சிட்ரோன் கார் கிடைக்கிறது.

ஹோண்டா எலிவேட் (Honda Elevate): ரூ.13.41 லட்சத்தில் இருந்து ரூ.16.20 லட்சம் வரையில் விலையை கொண்ட பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார். இந்த ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலை சற்று அதிகமாக இருப்பதற்கு காரணம், இந்த காரில் ஆற்றல்மிக்க 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறலாம்.

மாருதி கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara): இந்த வரிசையில் நாம் பார்க்கும் 3வது விலை குறைவான பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் இதுவாகும். இந்த மாருதி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கிடைக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder): பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும் டொயோட்டா கார். ரூ.14.01 லட்சத்தில் இருந்து ரூ.17.24 லட்சம் வரையில் தற்சமயம் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ளது. கிராண்ட் விட்டாராவை போல், இந்த டொயோட்டா காரிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் கிடைக்கிறது. ஆனால், கிராண்ட் விட்டாராவை காட்டிலும் இந்த காரின் விலை சற்று அதிகமாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun): ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெட்ரோல் என்ஜினை கொண்ட ஆட்டோமேட்டிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் டைகுன் ஆகும். ரூ.15.43 லட்சத்தில் இருந்து ரூ.18.08 லட்சம் வரையிலான விலைகளில் இந்த கார் கிடைக்கிறது. இந்த காரின் விலை சற்று அதிகமாக இருப்பதற்கு காரணம், டைகுனில் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்கள் இன்னும் நம்மில் பெரும்பாலானோருக்கு விசித்திரமான காராகவே உள்ளது. அதாவது, ஆட்டோமேட்டிக் கார்களை நிறைய பேர் பயன்படுத்தியது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பயன்படுத்த விரும்புபவர்கள் இவற்றில் ஒரு காரை வாங்கலாம். அதுமட்டுமின்றி, டிரெண்ட்டிற்கு ஏற்ப காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்கிய திருப்தி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









