பெரிய தலைங்க எல்லாம் லிஸ்ட்டிலேயே இல்ல!! எம்ஜி எலக்ட்ரிக் கார்கள் இவ்வளவு கம்மியான விலையிலா?

தீபாவளி நெருங்க, நெருங்க ஓர் இனம் புரியாத கொண்டாட்டமும் நம்முடன் தொற்றிக் கொள்கிறது. தீபாவளி வந்துவிட்டாலே ஒரு சிலர் புதிய பொருட்களை வாங்கி போடுவர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப... தீபாவளிக்கு புதிய பைக், கார்களை வாங்கியுள்ளவர்களும் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை போல நீங்களும் எலக்ட்ரிக் கார் ஒன்றை இந்த தீபாவளிக்கு வாங்க பிளான் போட்டு வருகிறீர்களா? மார்க்கெட்டில் என்னென்ன எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன? அவற்றில் சிறந்தவை எது? என்பது தெரியவில்லையா? அட ரொம்ப பயப்பிட வேண்டாம்ங்க...

எல்லாராலும் வாங்கக்கூடிய விலையில் தற்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் இருப்பவை சில எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே. அவற்றுள்ள முக்கியமான 5 எலக்ட்ரிக் கார்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். விலைகளை பொறுத்தவரையில் இவை ஐந்தும் ஒவ்வொரு விதமானவை. வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

electric cars for this diwali

எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV): இந்தியாவின் முதல் இண்டெலிஜெண்ட் சியூவி எலக்ட்ரிக் கார். ஆனால் இதனை காட்டிலும் முக்கிய விஷயமாக, பேட்டரி அஸ் எ சர்வீஸ் என்கிற பெயரில் பேட்டரி குத்தகை முறையை விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் எம்ஜி அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பேட்டரி இல்லாமல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம்; பேட்டரி உடன் ரூ.13.50 லட்சம்.

electric cars for this diwali

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எம்ஜி மோட்டாரின் மற்றொரு எலக்ட்ரிக் கார். இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்கும் கோமெட் இவி காரின் விலை ரூ.6.99 லட்சம் ஆகும். பேட்டரி அஸ் எ சர்வீஸில் ரூ.4.99 லட்சம். இந்த முறையில் காருக்கான பேட்டரி வாடகை கிமீ-க்கு ரூ.2.5 என்கிற விகிதத்தில் வசூலிக்கப்படும்.

electric cars for this diwali

டாடா டியாகோ இவி (Tata Tiago EV): எம்ஜி கோமெட் இவி அறிமுகமாகும் வரையில் இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இதுதான். இந்த டாடா எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. 4 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் டியாகோ இவி காரில் 19.2kWh மற்றும் 24kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

electric cars for this diwali

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): பெட்ரோல் என்ஜின் டாடா பஞ்ச் காரும், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு விதமான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரிலும் டியாகோ இவி காரை போன்று 25kWh மற்றும் 35kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

electric cars for this diwali

சிட்ரோன் இசி3 (Citroen eC3): மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் சிட்ரோன் சி3 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இசி3 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் பொருத்தப்படும் 29.2kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 320கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த காரை வெறும் 57 நிமிடங்களில் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும் என்கிறது சிட்ரோன் நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளிக்கு நிறைய பேர் புதியதாக கார்களை வாங்குவர். அவர்களில் இருந்து வேறுப்பட்டதாக தெரிய விரும்புபவர்கள், எலக்ட்ரிக் காரை வாங்கலாம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக கூறப்படுகிறது. நமது மத்திய அரசாங்கமும் எலக்ட்ரிக் கார்களை ஊக்குவிப்பதில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறது. ஆதலால், சுற்றுச்சூழலுக்கு நன்மை சேர்க்க விரும்புபவர்கள் எலக்ட்ரிக் காரை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 17:00 [IST]
English summary
5 electric cars to buy for this diwali season mg windsor ev to citroen ec3
மேலும்... #electric car #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X