டொயோட்டாவின் இந்த காஸ்ட்லீயான காருக்கு இந்தியாவில் செம டிமாண்ட்!! ஷோரூமுக்கு வருபவர்களை மயக்கும் தோற்றம்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும், எஸ்யூவி கார்களை வாங்குவோரில் பெரும்பாலானோரின் சாய்ஸ் சிறிய அளவிலான எஸ்யூவி கார்களின் பக்கமே உள்ளது. அதேநேரம், அளவில் பெரியதான சில ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களும் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் நன்கு நீளமானதாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கின்றன. இதன் காரணமாகவே இத்தகைய எஸ்யூவி கார்களின் விலைகள் சற்று அதிகமாக உள்ளன. ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களுள் அதிக பேர் வாங்குவது டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனரை ஆகும். கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 3,395 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

full-size suv cars sales report

அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 31 கார்கள் அதிகமாக 3,426 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனை ஆனது 1% குறைந்துள்ளது. ஃபார்ச்சூனருக்கு அடுத்து, அதிக பேர் வாங்கும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி காராக 2வது இடத்தில் எம்ஜி மோட்டாரின் க்ளோஸ்டர் எஸ்யூவி உள்ளது. இருப்பினும், ஃபார்ச்சூனருக்கும், க்ளோஸ்டருக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் மிக பெரிய வித்தியாசம் உள்ளது.

எந்த அளவிற்கு என்றால், பெரும்பாலான மாதங்களில் 200 க்ளோஸ்டர் கார்கள் கூட விற்பனையாகுவது இல்லை. கடந்த 2024 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி க்ளோஸ்டர் கார்களின் எண்ணிக்கை 168 ஆகும். ஆனால், 2023 பிப்ரவரியில் விற்பனையான க்ளோஸ்டர் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிட்டால், இது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 101 க்ளோஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

full-size suv cars sales report

எம்ஜி க்ளோஸ்டருக்கு அடுத்து 3வது இடத்தில், ஜீப் மெரிடியன் உள்ளது. அமெரிக்கன் ஸ்டைல் ஃபுல்-சைஸ் எஸ்யூவி காரான மெரிடியன் கடந்த மாதத்தில் மொத்தம் 127 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 313 மெரிடியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், மெரிடியன் கார்களின் விற்பனை இந்தியாவில் 59% குறைந்துள்ளது.

ஜீப் மெரிடியனுக்கு அடுத்து, 4வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் எஸ்யூவி கார் உள்ளது. இந்தியாவில் விலையுயர்ந்த ஃபோக்ஸ்வேகன் காராக விளங்கும் டிகுவான் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 102 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரியில் வெறும் 93 டிகுவான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

full-size suv cars sales report

ஸ்கோடா ஆட்டோவின் கோடியாக் இந்த வரிசையில் கடைசி 5வது இடத்தில் உள்ளது. அதாவது, இந்தியாவில் தற்போதைக்கு மொத்தமாகவே 5 ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கோடியாக் கார்களின் எண்ணிக்கை 89 ஆகும். அதுவே, 2023 பிப்ரவரியில் 189 ஸ்கோடா கோடியாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 100 கோடியாக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் கார்கள் இரண்டும் ஒரே பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, இந்த இரு கார்களில் ஒரே மாதிரியான என்ஜின்கள் பொருத்தப்படுகின்றன.

full-size suv cars sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக பயணிகள் உடன் பயணிப்பதற்கு ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஏற்றவை ஆகும். குறிப்பாக, டொயோட்டா ஃபார்ச்சூனரில் 9இல் இருந்து 10 பயணிகள் கூட தாராளமாக அமரலாம். இருப்பினும், இத்தகைய கார்களின் விலை அதிகமாக இருப்பதால், நிறைய பேர் இந்த கார்களை கண்டுக் கொள்வதில்லை. எதிர்காலத்தில் நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் பட்சத்தில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களை வாங்க நிறைய பேர் விரும்புவர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2024, 22:49 [IST]
English summary
5 full size suv cars sales report 2024 february check all sales numbers here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X