இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
செடான் ரக கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மற்ற நாடுகளை போன்று இந்தியாவிலும் வெகுவாக குறைந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, சற்று விலைமிக்க செடான் கார்களை வாங்க இவ்வளவு பெரிய இந்தியாவில் அதிக கஸ்டமர்கள் கிடைப்பது இல்லை. சற்று விலைமிக்க மிட்-சைஸ் செடான் கார்களாக இந்தியாவில் 5 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லாவியா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் என்பன அந்த 5 மிட்-சைஸ் செடான் மாடல்கள் ஆகும். இதில், கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் செடான் காராக முதலிடத்தை ஹூண்டாய் வெர்னா பிடித்துள்ளது.

கடந்த 1 ஆண்டில் மொத்தம் 30,027 ஹூண்டாய் வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, மாதத்திற்கு சராசரியாக 2,502 வெர்னா கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 1 வருடத்தில் அதிகப்பட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலிலும், ஜூன் மாதத்திலும் தலா 4,001 வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. குறைந்தப்பட்சமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெறும் 712 வெர்னா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக வெர்னா கார்களின் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் மிட்-சைஸ் செடான் காரை வாங்குபவர்களில் 3இல் ஒருவரது தேர்வு ஹூண்டாய் வெர்னா காராக உள்ளது. வெர்னாவுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை ஃபோக்ஸ்வேகனின் விர்டுஸ் பெற்றுள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் மொத்தம் 21,094 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 1,758 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 1 ஆண்டில் அதிகப்பட்சமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2,199 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. குறைந்தப்பட்சமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 1,174 விர்டுஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 1 ஆண்டில் எந்தவொரு மாதத்திலும் ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக விர்டுஸ் கார்கள் விற்பனையானது இல்லை.
இந்திய மார்க்கெட்டிற்கு புதிய கார் என்பதால், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரின் விற்பனை பெரிய அளவில் தடுமாற்றம் இல்லாமல் உள்ளது. கடந்த 2024 மார்ச் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணியில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் விர்டுஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிட்-சைஸ் செடான் காரை வாங்கும் 5இல் ஒருவரது தேர்வு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காராக உள்ளது.

இந்த வரிசையில் 3வது இடத்தில் ஸ்கோடா ஸ்லாவியா பிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காரான ஸ்கோடா ஸ்லாவியா கடந்த 1 ஆண்டில் மொத்தமாக 19,092 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாத சராசரி 1,591 ஆகும். அதிகப்பட்சமாக கடந்த ஆண்டு டிசம்பரில் 1,960 ஸ்லாவியா கார்களும், குறைந்தப்பட்சமாக கடந்த பிப்ரவரியில் 1,028 ஸ்லாவியா கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஸ்லாவியாவுக்கு அடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் ஜப்பானிய-ஸ்டைல் மிட்-சைஸ் செடான் கார்களான ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் உள்ளன. இதில் ஹோண்டா சிட்டி கார்கள் கடந்த 1 வருடத்தில் 16,925 யூனிட்களும், சியாஸ் கார்கள் 10,337 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சியாஸ் கார்களின் விற்பனை சமீப மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காலத்தில் இந்த வகை செடான் கார்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டிருந்தன. ஆனால், மார்க்கெட் டிரெண்ட் மாறியதால் கஸ்டமர்களின் இரசனை முழுவதும் எஸ்யூவி கார்களின் பக்கம் சாய்ந்துவிட்டது. இருப்பினும், இந்த காலத்திலும் மாதத்திற்கு 2,500 வெர்னா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்வது சற்று ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









