மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
இந்தியாவில் பல்வேறு விதமான எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி ஆகும். இந்த பிரிவில் தற்சமயம் மொத்தம் 5 மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றியும், கடந்த 1 ஆண்டில் அவை எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
எஸ்யூவி ரக கார்களை மக்கள் அதிகமாக வாங்குவதற்கு முக்கிய காரணம், அவற்றின் விசாலமான உட்பக்க இடவசதி ஆகும். இதன் காரணமாக, எஸ்யூவி கார்களில் இருக்கைகளையும் அதிக எண்ணிக்கையில் வழங்க முடிகிறது. அவ்வாறு, அதிக இடவசதி மற்றும் இருக்கைகளுடன் வாங்குவதற்கு ஏற்றவை மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும்.

இந்த ரக எஸ்யூவி கார்களை மஹிந்திரா நிறுவனம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்கிறது. மஹிந்திராவின் ஸ்கார்பியோ-என்/ கிளாசிக் மற்றும் எக்ஸ்யூவி700 கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் முதல் இரு மிட்-சைஸ் எஸ்யூவி கார்களாக உள்ளன. குறிப்பாக, மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் விற்பனை சமீப வருடங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்திய சந்தையில் நீண்ட வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் கார், மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது கடந்த காலங்களில் இருந்து ஏற்றமும், இறக்கமுமாய் இருந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் நியூ ஜென்ரேஷன் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஸ்கார்பியோ கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

நியூ ஜென்ரேஷன் மாடல் என்பதால் ஸ்கார்பியோ-என் காரின் தோற்றம் மிகவும் மாடர்ன் தரத்தில் உள்ளது. அதேநேரம் பழைய ஸ்கார்பியோ காரின் தோற்றத்தில் ஸ்கார்பியோ கிளாசிக் காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 2023 ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரையில் சுமார் 1 லட்சத்து 41,462 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதாவது ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 11,789 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி காரை வாங்கும் 2இல் ஒருவரது தேர்வு மஹிந்திரா ஸ்கார்பியோவாக உள்ளது. 2வது இடத்தில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பொறுத்தவரையில், இதுவும் மஹிந்திராவின் மாடர்ன் எஸ்யூவி கார் ஆகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டது.

2023 ஏப்ரல் - 2024 மார்ச் வரையில் மொத்தம் 79,398 எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 6,617 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார்கள் 3வது இடத்தை பிடித்துள்ளன. ஹெக்டர் ஆனது 5 இருக்கைகளை கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும்.
அதுவே, ஹெக்டர் பிளஸில் கூடுதலாக இருக்கை வசதிகள் கிடைக்கின்றன. இருப்பினும் இரண்டும் ஒரே நீளத்தில் இருப்பதால் இவை இரண்டும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களாக கருதப்படுகின்றன. கடந்த 2023-24 நிதியாண்டில் மொத்தம் 27,435 எம்ஜி ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் பாதுகாப்புமிக்க டாடா கார்களாக கருதப்படும் ஹெரியர் மற்றும் சஃபாரி உள்ளன. இவற்றின் கடந்த 1 ஆண்டின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 24,701 மற்றும் 21,944 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த 1 ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள், மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே ஆகும். மஹிந்திரா நிறுவனம் மட்டும் கடந்த ஆண்டில் ஏறக்குறைய சுமார் 2.20 லட்ச மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், மஹிந்திரா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் குறைவான விலை ஆகும்.


Click it and Unblock the Notifications









