இந்த காலத்திலும் இவ்வளவு குறைவான விலையில் டாடா காரா? ஹூண்டாய், மாருதிக்கு தலைவலி ஆரம்பிச்சிடுச்சு!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் கர்வ் (Curvv) காரை அறிவித்தப்படி இன்று (செப்டம்பர் 2) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டாடா நிறுவனம் சமீப காலமாக அதன் மாடர்ன் எஸ்யூவி கார்கள் மூலம் கவனிக்கத்தக்க வரவேற்பை பெற்று வருகிறது. நெக்ஸான், பஞ்ச் கார்களின் வரிசையில் கர்வ் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான், பஞ்ச் எஸ்யூவி கார்களை போன்று இல்லாமல், கர்வ் ஆனது கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார் ஆகும். அதாவது, இந்த காரின் மேற்கூரையின் பின்பகுதி ஆனது வழக்கத்தை விட மிகவும் சாய்வாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதன் கர்வ் இவி எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதே தினத்தில் பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான டாடா கர்வ் காரை பற்றி விபரங்கள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது, கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.17.70 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய மற்ற பிரபலமான கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்று. குறிப்பாக, 2020ஆம் ஆண்டிற்கு பிறகு கிரெட்டா கார்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கிரெட்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. டிரைவர் உடன் சேர்த்து 5 நபர்கள் பயணிப்பதற்கு ஏற்ற காராக கிரெட்டா விளங்குகிறது.

கியா செல்டோஸ் (Kia Seltos): ஹூண்டாய் கிரெட்டாவை போன்று, கொரியன் ஸ்டைல் எஸ்யூவி கார் கியா செல்டோஸ் ஆகும். இந்த காரும் ரூ.10.89 லட்சத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்கிறது. 19 தானியங்கி ADAS லெவல்-2 தொழிற்நுட்பங்களை கொண்ட செல்டோஸ் காரில் பவர்ஃபுல்லான, நல்ல மைலேஜ் தரக்கூடிய என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara): மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் 4 மீட்டர்களுக்கு கொஞ்சம் அதிக நீளம் கொண்ட எஸ்யூவி காராக கிராண்ட் விட்டாரா விளங்குகிறது. இந்த மாருதி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. பொதுவாகவே மாருதி கார்கள் நல்ல மைலேஜ் தரக்கூடியவை என்கிற பேச்சு மார்க்கெட்டில் உள்ளது. அதற்கு சரியான உதாரணமாக, கிராண்ட் விட்டாராவை சொல்லலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyruder): மேலே கூறப்பட்ட கிராண்ட் விட்டாரா காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டொயோட்டா கார் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும். ஆனால், இந்த டொயோட்டா காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.11.41 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. ஏனெனில், இந்த காரில் அடாஸ் போன்ற மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX): மஹிந்திரா தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனாக தார் ராக்ஸ் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட்டது. தார் ராக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. பனோராமிக் சன்ரூஃப் மற்றும் புத்தம் புதிய பெட்ரோல் என்ஜின் என ஏகப்பட்ட அம்சங்கள் தார் ராக்ஸ் வாகனத்தில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் உள்பட இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை அனைத்தும் 4 மீட்டர்களுக்கும் அதிகமான நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும். இவை அனைத்தின் விற்பனையும் மார்க்கெட்டில் சிறப்பாக உள்ளது. இவை அனைத்தையும் சமாளித்து மார்க்கெட்டில் டாடா கர்வ் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









