கருப்பு என்றாலே நம் எல்லாருக்கும் ஓர் தனி பிரியம்!! இந்த எஸ்யூவி கார்களை கருப்பு நிறத்தில் வாங்கலாம்!!
நம் எல்லாருக்குமே புதியதாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே கனவாக இருக்கும். பெரியவர்கள் ஆன பின் இந்த காரை தான் வாங்க வேண்டும் என குறிப்பாக ஒரு காரின் மீது அதிக பிரியம் வைப்போம். அவ்வாறு வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே கார் நிறுவனங்கள் பல்வேறு விதமான விலைகளில், பல்வேறு விதமான உடலமைப்புகளில் கார்களை விற்பனை செய்கின்றன. அதேபோல், கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வாங்க வேண்டும் என்பதற்காக முடிந்தவரையில் நிறைய பெயிண்ட் ஆப்ஷன்களில் கார்களை விற்பனை செய்ய முயற்சிக்கின்றன.
நம்மில் சிலருக்கு கருப்பு நிற பொருட்கள் என்றாலே தனி பிரியம் இருக்கும். அதாவது, உடுத்தும் உடையில் இருந்து பல இலட்சங்கள் கொடுத்து வாங்கும் கார் வாங்கும் வரையில் அனைத்தையும் முடிந்தவரை கருப்பு நிறத்தில் வாங்க பார்ப்போம். அத்தகையவர்களை கவர்வதற்காகவே கார் நிறுவனங்கள் அவ்வப்போது பிளாக் எடிசன் கார்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகின்றன. இந்தியாவில் கருப்பு நிறத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த மற்றும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பிளாக் எடிசன் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்றான கிரெட்டா கருப்பு நிறத்தில் இன்னும் அழகானதாக இருக்கிறது. மேலும், கருப்பு நிறத்தில் கிரெட்டா கம்பீரமாக காட்சியளிக்கிறது. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): எந்த நிறத்திலும் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான லுக்கை வழங்கக்கூடியது இந்த டொயோட்டா கார் ஆகும். கருப்பு நிறத்தில் இன்னும் மிரள வைக்கக்கூடியதாக இந்த கார் காட்சியளிக்கிறது. இதனால், இந்தியாவில் கருப்பு நிறத்தில் கிடைக்கக்கூடிய கம்பீரமான தோற்றம் கொண்ட காராக ஃபார்ச்சூனரை சொல்லலாம். தோற்றத்திற்கு ஏற்ப நன்கு பவர்ஃபுல்லான என்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700): இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் பிரத்யேகமான பிளாக் எடிசன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. எக்ஸ்யூவி700 பிளாக் எடிசன் ஆனது முற்றிலுமாக கருப்பு நிறத்தில் கிடைக்கும். அதாவது, காரின் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் கிடைக்கும். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் கொடுக்கப்படுகின்றன.
டாடா சஃபாரி டார்க் எடிசன் (Tata Safari Dark Edition): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கார்களில் அவ்வப்போது டார்க் எடிசன்களை அறிமுகம் செய்வதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில், சஃபாரி காரில் டார்க் எடிசன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பாதுகாப்புமிக்க காராக விளங்கும் டாடா சஃபாரியின் டார்க் எடிசனில் பவர் ஃபுல்லான 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பெறலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் ஸ்கார்பியோ ஆகும். ஸ்கார்பியோ-என் காரிலும் டார்க் எடிசன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 4x4 டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் ஸ்கார்பியோ-என் டார்க் எடிசன் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், காரை கருப்பு நிறத்தில் வாங்கவே ஒரு சிலருக்கு விருப்பமாக இருக்கும். இந்த 5 கார்கள் மட்டுமின்றி வேறு சில கார்களும் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் கிடைக்கின்றன. ஆனால், இந்த 5 கார்கள் குறைந்த விலையில் சிறந்த தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் கிடைக்கின்றன. இந்த 5 கார்களில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









