நம்ம சென்னை மழைக்கு இதில் ஒரு கார் தான் சரியா இருக்கும்!! இடுப்பளவு நீரிலும் தைரியமாக எடுத்து செல்லலாம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிவிட்டதாக, சில வாரங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர். சென்னையையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் அதிகனமழை வெளுத்து வாங்க போவதாக கடந்த வாரத்தில் அறிவித்தனர். ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேறு திசைக்கு சென்றதால் சென்னை ஆபத்தில் இருந்து தப்பியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானது கிடையாது என்பது நம் எல்லாருக்குமே தெரியும். ஏனெனில், வருடாவருடம் டிசம்பரில்தான் சென்னையில் அதிக கனமழை பெய்கிறது.

இதனால், ஜனவரி மாதம் துவங்கும் வரையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கவும். வாகனங்களை பொறுத்தவரையில், அதிக ஆழமுள்ள நீரிலும் இயங்கக்கூடிய கார்களை வாங்க முயற்சி செய்யுங்கள். அவ்வாறு இயங்கக்கூடிய 5 வாகனங்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

suv cars with high-wading capacity

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender): டிஃபெண்டர் கார்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றை சாதாரண சாலைகளிலும் ஓட்டலாம். அதேநேரம், பள்ளம், மேடான ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்லலாம். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை அதிகப்பட்சமாக 900மிமீ வரையில் ஆழம் கொண்ட நீரில் கொண்டு செல்லலாம். அதாவது, இடுப்பளவிற்கும் மேல் ஆழம் கொண்ட நீரில் டிஃபெண்டர் இயங்கும். இந்த அளவிற்கு ஆழம் கொண்ட நீரில் வேறெந்த காரும் இயங்குவதில்லை என்பது டிஃபெண்டரின் சிறப்பம்சம் ஆகும்.

ஜீப் வ்ராங்க்லர் (Jeep Wrangler): அதிக ஆழமுள்ள நீரில் இயங்குவதினால் பிரபலமான மற்றொரு கார், ஜீப் வ்ராங்க்லர் ஆகும். வ்ராங்க்லரின் வாட்டர்-வேடிங் கெப்பாசிட்டி 863மிமீ ஆகும். உலகளவில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வாகனங்களுள் ஒன்று ஜீப் வ்ராங்க்லர் ஆகும். அதற்கேற்ப இந்த வாகனம் பல்வேறு விதமான சவால்களை தாங்கக்கூடியதாக உருவாக்கப்படுகிறது.

suv cars with high-wading capacity

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): ஆஃப்-ரோடு பயணங்களையும், ஆழம் குறைவான நீர் நிலைகளை கடப்பதற்கும் ஏற்ற கார்களுள் ஒன்று ஃபார்ச்சூனர் ஆகும். ஆனால், இதன் விலையும் சற்று அதிகமாக ரூ.30 லட்சம் - 40 லட்சம் வரையில் உள்ளது. ஃபார்ச்சூனரை அதிகப்பட்சமாக 700மிமீ ஆழமுள்ள நீரில் கொண்டு செல்லலாம். இதற்கேற்ப, ஃபார்ச்சூனரின் அடிப்பகுதி நன்கு உயரமாக கொடுக்கப்படுகிறது.

suv cars with high-wading capacity

ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha): ஃபார்ச்சூனரை போன்று குர்கா எஸ்யூவி வாகனத்தையும் அதிகப்பட்சமாக 700மிமீ ஆழமுள்ள நீரில் கொண்டு செல்லலாம். ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் இந்த எஸ்யூவி வாகனம் ஆனது முக்கியமாக ஆஃப்-ரோடு பயணங்களை அவ்வப்போது மேற்கொள்பவர்களுக்காக தயாரிக்கப்படுகிறது. மேலே கண்ட வ்ராங்க்லரை போன்று எல்லா விதமான சூழலையும் சமாளிக்கக்கூடியது குர்கா ஆகும்.

suv cars with high-wading capacity

மஹிந்திரா தார் (Mahindra Thar): இப்போதுதான் முக்கியமான வாகனத்திற்கு வந்துள்ளோம். தார் வாகனத்தை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான மக்கள் வாங்குகின்றனர். இந்த வாகனத்தை அதிகப்பட்சமாக 650மிமீ ஆழமுள்ள நீரில் கொண்டு செல்லலாம். மேலும், அளவில் சிறியதாக வடிவமைக்கப்படுவதால், தார் வாகனத்தை கண்ட்ரோல் செய்வதும் எளியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடைசியாக பார்த்த மஹிந்திரா தார் வாகனம் தான் நிறைய பேர் தேர்வு செய்யக்கூடியதாக உள்ளது. மேலே கண்ட மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா தாரின் வாட்டர்-வேடிங் கெப்பாசிட்டி பெரியதாக குறைவு கிடையாது. ஆகையால், சென்னை என்று மட்டுமின்றி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் புதியதாக கார் வாங்குவதாக இருந்தால் முடிந்தவரையில் மேற்கூறப்பட்ட 5 வாகனங்களுள் ஒன்றை வாங்க முயற்சிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 20, 2024, 22:13 [IST]
English summary
5 suv cars with high water wading capacity in india land rover defender to mahindra thar
மேலும்... #suv car #monsoon period #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X