குறைந்த விலையில் மைலேஜை வாரி வழங்கும் 6 சிஎன்ஜி கார்கள்!! மாருதி கார் தான் நிறைய இருக்கு!
பெட்ரோல் என்ஜினை கொண்டிருப்பினும், அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடியவை சிஎன்ஜி கார்களாகும். இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதி சுஸுகி நிறைய சிஎன்ஜி கார்களை சந்தையில் விற்பனை செய்வதாகும்.
மாருதி சுஸுகியை பின்பற்றி ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் தங்களது சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளன. சிஎன்ஜி கார்களில் மைலேஜ் நன்கு அதிகமாக கிடைக்கும், அதேநேரம் அவற்றின் விலைகள் அதிகமாக இருக்கின்றன. இவ்வாறான சூழலில் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 6 எஸ்யூவி சிஎன்ஜி கார்களை இனி பார்க்கலாம்.

6. டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி (Toyota Hyryder CNG): இந்த லிஸ்ட்டில் கொஞ்சம் விலைமிக்க எஸ்யூவி சிஎன்ஜி கார் என்றால் அது இதுதான். ஹைரைடர் சிஎன்ஜி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.13.71 லட்சமாக உள்ளது. இந்த டொயோட்டா சிஎன்ஜி காரில் 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த காரில் 26.60km/kg வரையிலான மைலேஜ் கிடைக்கிறது.

5. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி (Maruti Suzuki Grand Vitara CNG): மேலே கண்ட டொயோட்டா ஹைரைடர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் தான் கிராண்ட் விட்டாரா ஆகும். ஆதலால், ஹைரைடரை போன்று கிராண்ட் விட்டாராவும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. டெல்டா & ஸெட்டா என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.15 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

4. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG): மேலே கண்ட எஸ்யூவி கார்கள் அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு விசாலமான எஸ்யூவி கார் பிரெஸ்ஸா ஆகும். இதன் சிஎன்ஜி வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.29 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

3. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி (Maruti Suzuki Fronx CNG): மாருதி சுஸுகியின் மாடர்ன் கிராஸ்ஓவர் கார், ஃப்ரான்க்ஸ் ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் சிஎன்ஜி வெர்சன் அதன்பின் சில மாதங்கள் கழித்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.46 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

2. டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG): டாடா மோட்டார்ஸின் ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் கிடைக்கும் சிஎன்ஜி கார். இதன் மூலமாக, காரின் பின்பக்கத்தில் அதிக பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. பஞ்ச் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.23 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இந்த காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 73.5 எச்பி மற்றும் 103 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.

1. ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி (Hyundai Exter CNG): இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சிஎன்ஜி கார் இதுவாகும். ரூ.6.43 லட்சத்தில் இருந்து இந்த ஹூண்டாய் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் துவங்குகின்றன. டாடா பஞ்ச் சிஎன்ஜி காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் எக்ஸ்டர் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் 6வது மற்றும் 5வது இடங்களில் உள்ள சிஎன்ஜி எஸ்யூவி கார்கள் அளவில் நன்கு பெரியதாக பயணிகள் நிறைய பேர் செல்லக்கூடியதாக உள்ளது. இதனால்தான், அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. அதுவே, டாடா பஞ்ச் சிஎன்ஜி மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி கார்களில் 5 பேர் மட்டுமே சவுகரியமாக அமர்ந்து செல்ல முடியும். சிஎன்ஜி கார்கள் ஹேட்ச்பேக் உடலமைப்பில் நிறைய கிடைக்கின்றன. ஆனால், எஸ்யூவி பாடி ஸ்டைலில் கிடைப்பவை இவை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications









