மஹிந்திராவால் இந்த ஒரு விஷயத்தில் மாருதியை முந்தவே முடியல!! எர்டிகா காருக்கு இந்தியாவில் இப்படியொரு மவுசா!

இந்தியாவில் அதிக இருக்கைகள் உடன் கார் வாங்க நிறைய பேர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால், 7-சீட்டர் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023 டிசம்பர் மாதத்திலும் ஆயிரக் கணக்கிலானோர் 7-சீட்டர் கார்களை வாங்கி உள்ளனர். 7 சீட்டர் கார்களில் அதிக பேர் தேர்வு செய்யும் டாப்-10 கார்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அதிக பேர் வாங்கிய 7-சீட்டர் காராக மாருதி எர்டிகா முதலிடம் வகிக்கிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 12,975 எர்டிகா கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 டிசம்பர் மாதத்திலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

7-seater cars sales 2023 december

இருப்பினும், துல்லியமாக பார்த்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எர்டிகா கார்களின் விற்பனை ஆனது 6% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் மஹிந்திராவின் பிரபலமான காரான ஸ்கார்பியோ உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 11,355 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022 டிசம்பர் மாதத்தில் வெறும் 7,003 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது சுமார் 62% அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் ஸ்கார்பியோ கார்கள் தற்சமயம், ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கார்பியோவுக்கு அடுத்து 3வது இடத்திலும் மஹிந்திரா காரான பொலேரோ உள்ளது.

7-seater cars sales 2023 december

ஆனால், ஸ்கார்பியோ அளவிற்கு பொலேரோ கார்களின் விற்பனை இல்லை. ஏனெனில், கடந்த மாதத்தில் 7,995 பொலேரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 2022 டிசம்பரை காட்டிலும் பொலேரோ கார்களின் இந்த விற்பனை எண்ணிக்கை 9% அதிகம் ஆகும். ஏனெனில், 2022 டிசம்பரில் 7,311 பொலேரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் 4வது இடத்தில் டொயோட்டா இன்னோவா உள்ளது. ஹைப்ரீட் காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா இன்னோவா கடந்த மாதத்தில் 7,832 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2022 டிசம்பரில் வெறும் 36 டொயோட்டா இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றால் நம்ப முடிகிறதா.

7-seater cars sales 2023 december

ஏனெனில், அந்த சமயத்தில் முந்தைய ஜென்ரேஷன் இன்னோவா க்ரிஸ்ட்டா விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 5வது இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி700 5,881 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை 2022 டிசம்பர் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் தான் இருந்தது. ஆனால், 6வது இடத்தில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனை ஆனது 2022 டிசம்பரை விட 94% உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் 3,104 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது இடத்தில் உள்ள கியா கேரன்ஸின் விற்பனை 66% குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 2,563 கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 8வது மற்றும் 9வது இடங்களில் மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 மற்றும் டாடா சஃபாரி கார்கள் முறையே 2,226 மற்றும் 2,103 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. கடைசி 10வது இடத்தில் ஹூண்டாய் அல்கஸார் (954) உள்ளது.

7-seater cars sales 2023 december

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கண்ட கார்களில் சிலவற்றை 7 இருக்கை ஆப்ஷனில் மட்டுமின்றி, 6 இருக்கை ஆப்ஷனிலும் வாங்கலாம். 6 இருக்கை ஆப்ஷன்களில் சில கார்களில் கேப்டன் இருக்கைகள் மத்தியில் கிடைக்கின்றன. மேலே கண்ட கார்களில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகாவின் விற்பனை மட்டுமே தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால்தான், எர்டிகா ஆனது இந்தியாவின் எம்பிவி கார் எனப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 23:03 [IST]
English summary
7 seater cars sales 2023 december top 10 list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X