பணத்தை சேர்த்து வைக்க இப்போதே ரெடியாகுங்க - வரிசையா புது எலக்ட்ரிக் கார்கள் வருது.. எதை வாங்குவது என்றே தெரியல

மற்ற நாடுகளை போன்று இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு விதமான எலக்ட்ரிக் கார்கள் பல கார் பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுடன் புதியதாக வேறு சில எலக்ட்ரிக் கார்களும் விரைவில் இணையவுள்ளன. இந்த வகையில் இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எலக்ட்ரிக் கார்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

டாடா கர்வ் இவி (Tata Curvv EV): இந்த 2024ஆம் வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எலக்ட்ரிக் கார் அறிமுகங்களுள் முக்கியமானது இதுவாகும். ஏனெனில், நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்களை போன்று மக்களால் அதிகம் வாங்கப்படும் எலக்ட்ரிக் காராக கர்வ் இவி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகம் இந்த 2024ஆம் ஆண்டிற்கு உள்ளாக இன்னும் சில மாதங்களில் இருக்கலாம்.

7 upcoming electric cars

டாடா ஹெரியர் இவி (Tata Harrier EV): கர்வ் இவி போன்ற விலை குறைவான எலக்ட்ரிக் காரை களமிறக்கும் அதேநேரம், பணக்கார கஸ்டமர்களையும் கவரும் விதமாக ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரையும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்வ் இவி காரை விட ஹெரியர் இவி கார் அளவில் நிச்சயமாக பெரியதாக இருக்கும். அதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.30 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம்.

கியா இவி9 (Kia EV9): இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு வர உள்ள எலக்ட்ரிக் கார் இதுவாகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கியா இவி9 எலக்ட்ரிக் கார் இந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம். கொரியன் ஸ்டைல் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இது அளவில் மிக பெரியது. எந்த அளவிற்கு என்றால், இந்த காரில் 9 பேர் வரையில் கூட சவுகரியமாக பயணம் செய்ய முடியும்.

7 upcoming electric cars

மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8): டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் உருவாக்கும் புதிய எலக்ட்ரிக் கார் இதுவாகும். விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக இது இருக்கும். மஹிந்திராவின் புதிய இவி கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட முதல் காராக, இந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் எக்ஸ்யூவி.இ8 அறிமுகம் செய்யப்படலாம்.

ஸ்கோடா என்யாக் ஐவி (Skoda Enyaq iV): இந்த ஆண்டு துவக்கத்தில் பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ நிகழ்ச்சியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவின் அதன் முதல் எலக்ட்ரிக் காரான என்யாக் இவி-ஐ காட்சிக்கு நிறுத்தியது. இந்த ஸ்கோடா எலக்ட்ரிக் கார் முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால், இதன் விலையை குறைவானதாக எதிர்பார்க்க முடியாது.

7 upcoming electric cars

வால்வோ இ.எக்ஸ்90 (Volvo EX90): இந்த வருடத்திற்கு உள்ளாக லக்சரி தரத்தில் 2 எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில் ஒன்று, வால்வோ இ.எக்ஸ்90 ஆகும். இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.3 கோடி என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். பவர் ஃபுல்லான 111kWh பேட்டரியை கொண்டுள்ள இந்த வால்வோ எலக்ட்ரிக் கார் ஸ்வீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 2022ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.ஏ (Mercedes-Benz EQA): இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த காரின் அறிமுகம் 2024 ஜூலை 8 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட உள்ளதால், இந்த காரின் அறிமுகத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எலக்ட்ரிக் கார் டாடா கர்வ் இவி தான், அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும், அதேநேரம் எலக்ட்ரிக் பென்ஸ் காரும் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 23:19 [IST]
English summary
7 upcoming electric cars in india in this 2024 check all details here
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X