இந்தியா ஏழை நாடு என்று சொன்னால் நம்பாதீங்க!! புது லக்சரி கார்கள் வரிசைக்கட்டி நிற்குது... யார் வாங்க போறாங்களோ
இந்திய மக்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிட்டால், நம் நாட்டில் விலையுயர்ந்த கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சற்று குறைவுதான். இருப்பினும், நம் நாட்டு சந்தையில் தொடர்ந்து புது, புது லக்சரி கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள லக்சரி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class): இந்தியாவில் கடந்த பல வருடங்களாக பணக்காரர்கள் மிகவும் விரும்பி வாங்கும் லக்சரி செடான் கார்களுள் ஒன்றான இ-கிளாஸை விரைவில் மேம்படுத்த மெர்சிடிஸ் தயாராகி வருகிறது. அடுத்த தலைமுறைக்கான அப்டேட் என்பதால், காரில் மிக முக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series): மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ நிறுவனமும் அதன் லக்சரி செடான் காரான 5 சீரிஸை மேம்படுத்த ரெடியாகி வருகிறது. இது, இந்தியாவில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் 8அம் தலைமுறை மாடல் ஆகும். இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் அறிமுகத்தை வருகிற தீபாவளி பண்டிகை சமயத்தில் எதிர்பார்க்கிறோம்.
ஆடி க்யூ6 இ-ட்ரான் (Audi Q6 e-tron): ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக பிரத்யேகமாக பிபிஇ என்கிற பிளாட்ஃபாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் ஆடி காராக விளங்கும் க்யூ6 இ-ட்ரான் என்கிற எலக்ட்ரிக் கார் விரைவில் நம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் இந்திய அறிமுகத்தை இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கலாம்.

ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட் (Audi Q8 Facelift): வெளிநாடுகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி க்யூ8 காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி காரான ஆடி க்யூ8-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. அதாவது வழக்கம்போல், முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்.
மெர்சிடிஸ்-மேபக் இ.க்யூ.எஸ் (Mercedes-Maybach EQS): இந்தியாவில் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஒரேயொரு எலக்ட்ரிக் பென்ஸ் காரான இது '680' என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே நம் நாட்டில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏறக்குறைய ரூ.4 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் காரில் 108.4kWh பேட்டரி பொருத்தப்படுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி கூபே (Mercedes-Benz GLC Coupe): மெர்சிடிஸ் நிறுவனம் அதன் ஜிஎல்சி எஸ்யூவி காரின் விற்பனையை இந்தியாவில் சமீபத்தில் நிறுத்தியது. அதன் இடத்தில் புதிய ஜிஎல்சி கூபே கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாதாரண ஜிஎல்சி காருக்கும், ஜிஎல்சி கூபே காருக்கும் இடையேயான வித்தியாசம், காரின் மேற்கூரை டிசைன் ஆகும். கூபே காரில் மேற்கூரை ஆனது பின்பக்கத்தில் கொஞ்சம் கூடுதல் சறுகலாக கிடைக்கும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.பி ஃபேஸ்லிஃப்ட் (Mercedes-Benz GLB Facelift): மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார் இதுவாகும். வழக்கமான காஸ்மெட்டிக் மாற்றங்களுடன், அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை புதிய ஜிஎல்பி ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவர உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.65 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படும் மினி பிராண்டில் இருந்தும் புதிய கண்ட்ரிமேன் மற்றும் கூப்பர் எலக்ட்ரிக் கார்கள் இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல், இந்த வருடத்திலும் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து நிறைய சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனைக்குவர உள்ளன. இதனால், எப்போதும்போல் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை இந்தியாவில் புதிய உச்சத்தை தொடும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









