டாடா கார் கூட இந்த கியா கார் முன் ஒதுங்கி தான் நிற்கனும்!! டாடா நெக்ஸானில் கிடைக்காத 8 வசதிகள்!
கியா (Kia) நிறுவனம் அதன் சொனெட் காரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய சொனெட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.7.99 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் அதன் நெக்ஸான் காரை ஃபேஸ்லிஃப்ட்டுக்கு அப்டேட் செய்து இருந்தது. இருப்பினும், நெக்ஸான் உடன் ஒப்பிடுகையில் சில அம்சங்கள் கூடுதலாக 2024 சொனெட் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அடாஸ் (ADAS): கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இரண்டிலும் பல்வேறு பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்கால மாடர்ன் கார்களில் வழங்கப்படும் அடாஸ் வசதி ஆனது கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் மட்டும் தான் கிடைக்கும். 2024 சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள லெவல் 1 அடாஸ் தொகுப்பின் மூலம் லேன்-கீப் அசிஸ்ட், ஹை-பீம் அசிஸ்ட் என பல்வேறு டிரைவர் அசிஸ்டன்ஸ் தொகுப்புகளை பெறலாம்.

எலக்ட்ரானிக் அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை: புதிய கியா சொனெட் காரில் டிரைவர் இருக்கையை எலக்ட்ரிக் மூலமாக 4 விதமாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம். 2024 சொனெட் காரின் எச்.டி.எக்ஸ்+, ஜி.டி.எக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்களில் இந்த வசதியை பெறலாம். ஆனால், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் முன் இருக்கைகள் இரண்டையும் மேனுவலாகவே அட்ஜெஸ்ட் செய்ய முடிகிறது.
சவுண்ட்டிற்கு ஏற்ப செயல்படும் எல்இடி விளக்குகள்: 2024 சொனெட் காரின் உள்ளே இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்ப எல்இடி விளக்குகள் தங்களது நிறத்தையும், ஒளிச் செறிவையும் மாற்றிக் கொள்ளும். இதற்கான எல்இடி விளக்குகள் காரின் முன்பக்க கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளன. 2024 சொனெட் காரின் எச்.டி.எக்ஸ்+, ஜி.டி.எக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்களில் இந்த வசதியை பெறலாம். ஆனால், 2023 டாடா நெக்ஸான் காரின் எந்தவொரு வேரியண்ட்டிலும் இத்தகைய எல்இடி விளக்குகள் வழங்கப்படுவது இல்லை.

ஆல் டோர்ஸ் ஒன்-டச் அப்/டவுன் பவர் விண்டோஸ்: 2024 சொனெட் காரின் விலையுயர்ந்த எக்ஸ்-லைன் வேரியண்ட்டில் மட்டும் ஒரு டச் மூலமாகவே காரின் அனைத்து 4 ஜன்னல் கண்ணாடிகளையும் மேலேற்றவும்/ கீழிறக்கவும் முடியும். புதிய சொனெட்டின் மத்திய-நிலை வேரியண்ட்களில் இத்தகைய வசதி டிரைவருக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. 2023 டாடா நெக்ஸானிலும் டிரைவருக்கு மட்டும் இந்த வசதி கொடுக்கப்படுகிறது. அதுவும், நீங்கள் விலையுயர்ந்த நெக்ஸான் ஃபியர்லெஸ் வேரியண்ட்டை வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.
ரிமோட் என்ஜின் ஸ்டார்ட்: புதிய சொனெட் காருடன் ஸ்மார்ட் கீ-ஐ கியா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த சாவியின் மூலமாக தூரத்தில் இருந்தும் காரின் என்ஜினை உங்களால் ஸ்டார்ட் செய்ய முடியும். 2024 சொனெட் காரின் மத்திய-நிலை எச்.டி.எக்ஸ்+ வேரியண்ட்டில் இருந்து இந்த வசதியை பெறலாம். இத்தகைய வசதியை பெற்ற முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் கியா சொனெட் ஆகும்.

அட்வான்ஸ்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ்: கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் இரண்டிலும் பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், கியா சொனெட்டில் மட்டுமே இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் என்ற அட்வான்ஸ்டு தரத்திலான கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற முடியும். ஆனால், டாடா நெக்ஸானில் ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் என்பதே அதிகப்பட்ச மாடர்ன் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆகும்.
டிராக்ஷன் மோட்கள்: இந்த செய்தியில் நாம் பார்க்கும் இரு எஸ்யூவி கார்களிலும் பல்வேறு டிரைவ் மோட்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், 2024 சொனெட் கார் மட்டுமே பனி, சகதி மற்றும் மணல் என்ற 3 டிராக்ஷன் மோட்களை பெற்றுள்ளது. இந்த டிராக்ஷன் மோட்கள் காரின் சக்கரங்கள் சறுக்குவதை அட்ஜெஸ்ட் செய்வது மட்டுமின்றி, என்ஜினின் டார்க் மற்றும் கியர் ஷிஃப்ட் பேட்டர்ன்களையும் டிரைவிங் கண்டிஷனை பொறுத்து தேவையான பிடிமானத்துடன் வழங்கும்.

அனைத்து சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள்: 2024 சொனெட் காரில் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளை முக்கியமான பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்றாக கியா நிறுவனம் வழங்கி உள்ளது. டிஸ்க் பிரேக்குகள் கூடுதல் கண்ட்ரோலை வழங்கி, பிரேக் கொடுத்த பின்னர் கார் நிற்கும் தூரத்தை குறைக்கின்றன. டாடா நெக்ஸானில் முன் சக்கரங்களில் மட்டுமே டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவைதான் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை விட புதிய கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் ஆகும். விலைகளில், இந்த இரு சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆதலால், இவை இரண்டில் எந்த காரை தேர்வு செய்வது என்பதை நன்கு நிதானமாக யோசித்து முடிவெடுக்கவும்.


Click it and Unblock the Notifications









