8 லட்சம் கார்கள் விற்காமல் குப்பை மாதிரி கெடக்குது! இதை எப்படி தான் விக்க போறாங்களோ!
இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்காமல் ஸ்டாக்கில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார்களின் விலை மற்றும் 79 ஆயிரம் கோடியை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகமாக சாக்கில் இருக்கும் கார்களின் எண்ணிக்கை இதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்டதாக கார்களை தயாரிக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்தால் தான் அவர்களுக்கு அந்த வாகனத்தை குறைவான செலவில் தயாரிக்க முடியும். உதாரணமாக ஒரு மாதத்திற்கு வெறும் 100 கார்கள் தான் விற்கும் என்ற நிலையில் இருக்கும் கார்கள், ஆயிரம் கார்கள் தயாரித்தால் தான் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கும்போது வாகன தயாரிக்கும் நிறுவனங்கள் 10 மாதத்திற்கு ஒருமுறை 1000 வாகனங்களை தயாரித்து மீதி வாகனங்களை ஸ்டாக்கில் வைக்கும்.

அது மட்டுமல்லாமல் அதிகமாக கார் விற்பனையாகும் காலம் விரைவில் வரப்போகிறது என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உணர்ந்தால் உடனடியாக தங்கள் தயாரிப்பு திறனை அதிகரித்து அதிக வாகனங்களை தயாரித்து ஸ்டாக்கில் வைக்கும் அந்த காலம் வரும்போது விற்பனை அதிகரிக்கும் நிலையில் உடனடியாக அந்த கார்களை டீலர் ஷிப்களுக்கு அனுப்ப அது வசதியாக இருக்கும்.
இப்படியாக வாகனங்களை தயாரித்து ஸ்டாக்கில் வைக்கும் பணியை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றனர். ஏதாவது எதிர்பார்ப்பு மற்றும் திட்டங்களை போட்டு இப்படியாக வாகனங்களை தயாரித்து ஸ்டாக்கில் வைத்து வரும் நிலையில் இப்படியாக ஸ்டாக் இருக்கும் கார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை அதிகரிக்கவில்லை என்பதுதான்.

தரவுகளின் படி கடந்த மே மாதம் முதல் டீலர்ஷிப்களில் இருக்கும் ஸ்டாக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 7,90,000 வாகனங்கள் விற்பனை ஆகாமல் ஸ்டாக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் விற்பனை குறைவாக இருந்த போதும் பல வாகனங்கள் டீலர்ஷிப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் தற்போது தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பல டீலர்ஷிப்கள் கடந்த சில மாதங்களாகவே தங்கள் ஸ்டாக்குகளை அதிகரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதிகமாக விற்பனையாகும் கார்களை வாங்கி ஸ்டாக்கில் வைத்து வருகிறார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தற்போது விற்பனை நடக்கவில்லை சொல்லப்போனால் 18 சதவீதம் விற்பனை சரிவு தான் ஏற்பட்டுள்ளது.

இந்த தீபாவளி நேரத்தில் வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு விதமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதற்கிடையில் டீலர்ஷிப் தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் கார்களின் விற்பனை அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்டாக் எனக்கே ஓரளவு குறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சரியான விபரங்கள் தற்போது கிடைக்கவில்லை.
இதுபோக சமீபத்தில் அறிமுகமான மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட், டாடா கர்வ், ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஒ மற்றும் தார் ராக்ஸ் ஆகிய கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் ஸ்டாக்கிலேயே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கார்கள் எவ்வளவு தயாரிக்கிறதோ அதைவிட அதிகமாக தேவை இருப்பதால் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
கடந்த மே மாதம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அதிக வெயில் காரணமாக மோசமான வானிலையால் விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்பொழுது முதல் கார் விற்பனை சரிவை ஏற்படுத்த துவங்கியது. தொடர்ந்து இந்த தெருவில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்தாலும் அதில் பெரிய அளவில் வெற்றி காண முடியவில்லை. இருந்தாலும் தற்போது வானிலை சூழ்நிலைகள் மாறியுள்ளதால் விவசாயம் சற்று வளர்ந்து விரைவில் இந்த பிரச்சனை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகன தயாரிப்பு செலவை குறைப்பதற்காக இப்படியாக அதிக வாகனங்களை ஒரு பக்கம் தயாரித்தாலும், அதை ஸ்டாக்கில் வைத்திருப்பது அவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும். இது பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் இந்த விவகாரத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இனி கவனமாக செயல்பட்டால் தான் எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









