ஆவலோடு எதிர்பார்த்த ஏசர் ஃபாஸ்டர் விருது 2024 பட்டியல் வெளியாகிருச்சு.. எந்த கார்-பைக் ஆண்டின் சிறந்த வாகனம்?
ஏசர் ஃபாஸ்டர் விருது 2024 (Acer FASTER Awards 2024)-இல் எந்த பைக் மற்றும் கார் மகுடத்தைத் தட்டிச் சென்றது என்கிற விபரங்கள் வெளியாகி உள்ளன. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்து விருது விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் அறிமுகமான புதிய வாகனங்கள் எவை சிறந்தவை என்பதை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது மூன்றாவது பதிப்பு ஆகும். டெல்லியில் உள்ள ஜே.டபிள்யூ. மேரியாட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை டிவி தொகுப்பாளர் மற்றும் எம்சீ ரவின் குந்துவே தொகுத்து வழங்கினார். விருதானது தலை சிறந்த பைக், கார், பிஆர் ஏஜென்சீஸ் என பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் இயங்கி வரும் ஆன்லைன் ஆட்டோமொபைல் செய்தி தளங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டதே இந்த ஃபாஸ்டர் (FASTER) ஆகும். இதில் ஏசர் (Acer) டைட்டில் ஸ்பான்சராக உள்ளது. இந்த கூட்டமைப்பில் இருந்தே ஜூரிக்கள் நியமிக்கப்பட்டு அவர்களே இந்தியாவின் தலைசிறந்த பைக் மற்றும் கார்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அந்தவகையில், 2023ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த வாகனம் என்கிற மகுடத்தைத் தட்டிச் சென்ற வாகனங்கள் எவை என்பதை கீழே வழங்கி உள்ளோம்.

ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2024 இன் வெற்றியாளர்களின் பட்டியல் இதோ:
- ஆண்டின் சிறந்த கார் (Car of the Year): (Hyundai Verna)
- ஆண்டின் சிறந்த பைக் (Bike of the Year): ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan)
- ஆண்டின் சிறந்த பிரீமியம் கார் (Premium Car of the Year): மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC)
- ஆண்டின் சிறந்த பிரீமியம் பைக் (Premium Bike of the Year): ராயல் என்பீல்டு மீட்டியோர் 650 (Royal Enfield Meteor 650)
- ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர் (Scooter of the Year): ஹீரோ ஜூம் (Hero Xoom)
- ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக் கார் (EV of the Year (4W)): ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai IONIQ 5)
- ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் (EV of the Year (2W)): ரிவர் இன்டீ (River Indie)
- ஆண்டின் சிறந்த அப்டேட்டைப் பெற்ற கார் மாடல் (Update of the Year ): கியா செல்டோஸ் (Kia Seltos)
- ஆண்டின் சிறந்த ஆட்டோ டெக்னாலஜி (Auto Tech of the Year): கூல் மற்றும் ஹீட் ஆகிய வசதி கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 (Cooled & Heated Seats on TVS Apache RTR 310)
- ஆண்டின் சிறந்த இன்டஸ்ட்ரீ பெர்சனாலிட்டி (Industry Personality of the Year): சிவி. ராமன், மாருதி சுஸுகி. C.V. Raman (CTO at Maruti Suzuki India Ltd.)
- ஆண்டின் சிறந்த கம்யூனிகேஷன் பெர்சனாலிட்டி (Communications Personality of the Year): சஞ்ஜீவ் ஹண்டா, மாருதி சுஸுகி. Sanjeev Handa (Sr. Vice President - PR & Communications at Maruti Suzuki India Ltd.)
- ஆண்டின் சிறந்த மோட்டார்ஸ்போர்ட் பெர்சனாலிட்டி (Motorsport Personality of the Year): ஹரித் நோவா, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கான மோட்டார்ஸ்போர்ட் விளையாட்டு வீரர் ஆவார். Harith Noah (Motorsport Athlete for TVS Motor Company)
- கௌரவ விருது (Award of Honour): மணிஷ் தண்டோன், பஜாஜ் ஆட்டோ. Manish Tandon (Divisional Manager - Product Management & Customer Insight at Bajaj Auto Ltd.)
- ஆண்டின் சிறந்த கார்பரேட் பொதுநல திட்டம் (CSR Initiatives of the Year): எம்ஜி சேவா (MG Sewa)
- ஆண்டின் சிறந்த கார்பரேட் கம்யூனிகேஷன் டீம் (Corporate Communications Team of the Year): கியா இந்தியா (Kia India)
- ஆண்டின் சிறந்த பிஆர் டீம் (PR Team of the Year): ஃப்ளெயிஷ்மேன் ஹில்லர்டு (Fleishman Hillard)
- ஆண்டின் சிறந்த பிஆர் பெர்சனாலிட்டி (PR Personality of the Year): சாஹிர் சேத், ஆட்ஃபேக்டர். Sahir Seth (Account Director at Adfactors PR)
- ஆண்டின் சிறந்த ஆட்டோ விளம்பர கேம்பைன் (Auto Ad Campaign of the Year): மாருதி சுஸுகி (Maruti Suzuki Jimny)

விருது நிகழ்வு எங்கு நடைபெற்றது? ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2024, ஜூரி சுற்று குருகிராமில் நடைபெற்றது. 2024 பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலேயே இது நடைபெற்றது. வெற்றியாளர்கள் அனைவரும் தலைசிறந்த ஜூரிக்களால், பல நிலைகளில் ஆய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டவை ஆகும்.
மேலும், ஜூரிக்கள் அனைவரும் ஆட்டோமொபைல் துறையில் மிக சிறந்த அனுபவம் பெற்றவர்கள். 250 மில்லியனுக்கு அதிகமான பயனர்களைக் கொண்ட ஊடகங்களில் இருந்தே இவர்கள் வந்திருக்கின்றனர். அத்துடன், அவர்களின் பல ஆண்டு கால அனுபவத்தை முன் வைத்தே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜூரிக்களின் விபரம்:
- அமித் சங்கானி - எடிட்டர், மோட்டாராய்ட்ஸ்
- கவுரவ் யாதவ் - எடிட்டர், காடிவாடி
- நரேந்திர ஷர்மா - எடிட்டர் கியர்ஃப்ளியோ
- புரோமித் கோஷ் - ரிவியூஸ் எடிட்டர், டிரைவ்ஸ்பார்க்
- ரோஹித் குரானா - எடிட்டர் கார் பிளாக் இந்தியா
- ரோஷன் ஜோஷப் - எடிட்டர், பைலட் ஆன் வீல்ஸ்
ஸ்பான்சர் மற்றும் பார்ட்னர்களின் விபரம்: உலகின் முன்னணி லேப்டாப் மற்றும் கணினி உற்பத்தி நிறுவனமான ஏசர்-தான் ஃபாஸ்டர் விருதுகள் 2024க்கான டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. கார்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ், இணை ஸ்பான்சராகவும் உள்ளது.

மேலும், ஆட்டோமோட்டிவ் டேட்டா சோதனையில் நாட்டின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான ஜென் மைக்ரோசிஸ்டம்ஸ், ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2024 இல் டேட்டா & டெஸ்டிங் பார்ட்னராக தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கின்றது. இத்துடன், ஜூரி ரவுண்டை மார்க்கெட்ஸ் அண்ட் மார்க்கெட்ஸ், ஒரு சுயாதீன சரிபார்ப்பு ஏஜென்சியாக கலந்துக் கண்கானிப்பைச் செய்தது. அதாவது, தவறுகள் அரங்கேறிவிடாத, நியாயமான முறையில் தேர்வு நடைபெறும் வண்ணம் மேற்பார்வைச் செய்தது.
ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2024இல் கலந்துக் கொண்ட மோட்டாராய்ட்ஸ்-இன் எடிட்டரும் ஃபாஸ்டர் அமைப்பின் தலைவருமான அமித் சங்கானி கூறியதாவது, "பொய் தகவல்களை பரப்புவர்களிடம் இருந்து வேறுபட்டுக் காணப்படும் ஆன்-லைன் ஆட்டோமொபைல் ஊடகவியாளர்களை ஃபாஸ்டர் வாயிலாக ஒன்றிணைத்திருக்கின்றோம். இப்போது போலவே வரும் நாட்களிலும் தரமான தரவுகளை கொண்டு வர வேண்டும் என்பதில் நாங்கள் கவனத்துடன் இருக்கின்றோம். மேலும் எங்கள் வாசகர்களுக்கு அவர்கள் நம்பக்கூடிய நம்பகமான தகவல்களை வழங்குவதில் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்றார்.

கியர்ஃப்ளிக் எடிட்டரும் ஃபாஸ்டர்-இன் செயலாளருமான நரேந்திர ஷர்மா கூறுகையில், "ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் தொழில்துறை மற்றும் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை மீறி தாக்கத்தை ஏற்படுத்திய தயாரிப்புகள் மற்றும் நபர்களை அங்கீகரிக்கின்றது. வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதற்கான ஒரு முழுமையான செயல்முறையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். தரமான தயாரிப்புகளுக்கு மகத்தான மதிப்பையும் பெருமையையும் தேடி தர வேண்டும் என்றே நாங்கள் எப்போதும் விரும்புகின்றோம்" என்றார்.


Click it and Unblock the Notifications









