இவ்வளவு கம்மியான விலையில் இவ்வளவு பெரிய மஹிந்திரா காரா? பணத்தை சேர்த்து வைக்க ரெடி ஆகுங்க!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. முழுக்க முழுக்க எஸ்யூவி ரக கார்களை மட்டுமே விற்பனை செய்வதில் முழு கவனம் செலுத்திவரும் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 (XUV700) ஆகும். இருப்பினும், மிடில்-கிளாஸ் மக்களால் எளிதில் வாங்க முடியாத வகையில் இந்த மஹிந்திரா காரின் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 4வது கார் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. மஹிந்திரா இத்தகைய உயரத்தை அடைவதற்கு காரணமாக இருக்கும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 ஆகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி கார், வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவது வழக்கம்.

mahindra xuv700 automatic variant

அதேபோல், எக்ஸ்யூவி700 காரில் புது, புது வேரியண்ட்களை அறிமுகம் செய்வதையும் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த வகையில், சமீபத்தில் கூட ஏ.எக்ஸ்5எல் மற்றும் எம்.எக்ஸ் (7-சீட்டர்) மற்றும் பிளேஸ் எடிசன் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை தொடர்ந்து, புதியதொரு விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை எக்ஸ்யூவி700 காரில் அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள அரசாங்க அனுமதி விண்ணப்ப படிவத்தில், எக்ஸ்யூவி700 காரில் இந்த புதிய வேரியண்ட் 'எம்.எக்ஸ் ஆட்டோமேட்டிக்' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் எம்.எக்ஸ் வேரியண்ட் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வருகிறது.

mahindra xuv700 automatic variant

இதனை விரைவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வழங்க மஹிந்திரா தயாராகி வருகிறது. இதன் மூலமாக, குறைந்த விலையில் எக்ஸ்யூவி700 காரை ஆட்டோமேட்டிக் தேர்வில் வாங்க முடியும். எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் கார் 5-இருக்கை மற்றும் 7-இருக்கை என 2 விதமான இருக்கை தேர்வுகளில் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் வேரியண்ட்டில் 7-இருக்கை ஆப்ஷன் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் ஆட்டோமேட்டிக் கார் 5-இருக்கை ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் பெட்ரோல் மேனுவல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14 லட்சமாக தற்சமயம் உள்ளது.

mahindra xuv700 automatic variant

இந்த ரூ.14 லட்சம் தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக உள்ளது. அதாவது, எக்ஸ்யூவி700 காரை குறைந்த விலையில் எம்.எக்ஸ் வேரியண்ட்டில் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். இதே வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸுக்கு பதிலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் விலையை ரூ.15.80 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் & பின் இருக்கைகளில் யுஎஸ்பி துளைகள், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மடக்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், ரியர் ஏசி வெண்ட்ஸ் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள் உள்ளிட்டவை புதிய எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் ஆட்டோமேட்டிக் காரில் இடம்பெறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.15.80 லட்சம் என்பது மிடில்-கிளாஸ் மக்களை பொறுத்தவரையில் சற்று அதிகமாக தோன்றலாம். ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்க விரும்புவோருக்கு இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரூ.15.80 லட்சம் என்பது நாங்கள் யூகிக்கும் விலையே. இதனை காட்டிலும் சற்று கூடுதல் அல்லது குறைவாகவும் விலை நிர்ணயிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 8:00 [IST]
English summary
Affordable mahindra xuv700 automatic car launching soon check all details here
மேலும்... #mahindra xuv700 #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X