இவ்வளவு கம்மியான விலையில் புது மஹிந்திரா கார் வந்தால் எல்லாரும் இதைதான் வாங்க போறாங்க!! ஆட்டோமேட்டிக் கியரில்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 (XUV700) காரில் புதிய விலை குறைவான பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய எக்ஸ்யூவி700 காரில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்ந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி700 -ஐ சொல்லலாம். குறைந்தப்பட்சமாக இந்த காரை ரூ.13.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். ஆன்-ரோடு விலை இன்னும் கொஞ்சம் சற்று அதிகமாக வரும். ரூ.13.99 லட்சத்தில் எம்.எக்ஸ் வேரியண்ட்டில் எக்ஸ்யூவி700 கார் கிடைக்கும்.

affordable mahindra xuv700 automatic

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் வேரியண்ட் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த கார் மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வருகிறது. அதாவது, எக்ஸ்யூவி700 காரின் மற்ற டாப் வேரியண்ட்களில் பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கிறது.

இந்த நிலையில், எண்ட்ரீ-லெவல் எம்.எக்ஸ் வேரியண்ட்டிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுவரும் முயற்சியில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இத்தகைய காரின் விற்பனைக்கு அனுமதி கோரி மஹிந்திரா விண்ணப்பித்த ARAI சான்றிதழின் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

affordable mahindra xuv700 automatic

இந்த ARAI சான்றிதழின்படி பார்க்கும்போது, புதிய எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் என்ஜின் அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம் வேகத்தில் 149.2 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த புதிய எக்ஸ்யூவி700 ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை குறித்த எந்த விபரமும் இடம்பெறவில்லை.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த காரின் விலை எம்.எக்ஸ் மேனுவல் காரின் ரூ.13.99 லட்சம் விலையை காட்டிலும் ரூ.1.80 லட்சம் என்கிற அளவில் அதிகமாக இருக்கும். அப்படியென்றால், ரூ.15.80 லட்சம் என்கிற அளவில் இதன் விலையை எதிர்பார்க்கலாம். எக்ஸ்யூவி700 காரை பெட்ரோல் என்ஜினுடன் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் இதனை காட்டிலும் அதிக விலையில் வாங்க வேண்டுமென்றால், அதற்கு ஏ.எக்ஸ்3 பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் வேரியண்ட் உள்ளது.

affordable mahindra xuv700 automatic

ஆனால், அதன் விலை இதனை காட்டிலும் ரூ.2.4 லட்சம் அதிகமாக ரூ.18.19 லட்சம் என்கிற அளவில் உள்ளது. எக்ஸ்யூவி700 காரின் எம்.எக்ஸ் வேரியண்ட்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8.0-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4-ஸ்பீக்கர்கள், 7.0-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மடக்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இவற்றுடன், பவர் விண்டோஸ், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்ஸ், பவர்டு விங் மிரர்ஸ் & ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் போன்றவையும் விலை குறைவான எக்ஸ்யூவி700 காரிலும் கிடைக்கின்றன. இதனை காட்டிலும் விலைமிக்க எக்ஸ்யூவி700 ஏஎக்ஸ்3 வேரியண்ட்டில் கிடைக்கும் 8.0 இன்ச்சில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, 2 கூடுதல் ஸ்பீக்கர்கள் முதலியவை எம்.எக்ஸ் வேரியண்ட்டில் கிடைக்காது.

affordable mahindra xuv700 automatic

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனையை அதிகரிக்க மஹிந்திரா எடுக்க போகும் மற்றொரு அருமையான முடிவு இது எனலாம். ஏனெனில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கார் வாங்க விரும்புவோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். ஆதலால் எக்ஸ்யூவி700 காரில் புதியதாக விலை குறைவான ஆட்டோமேட்டிக் வேரியண்ட் என்பது இலாபகரமான தயாரிப்பாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 13, 2024, 19:52 [IST]
English summary
Affordable mahindra xuv700 automatic car on the way check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X