17 ஆண்டு கால சகாப்தத்திற்கு முடிவு கட்ட போறாங்களா! இந்த காரோட உற்பத்தியை நிறுத்த எப்படிதான் மனசு வருதோ!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan) கடந்த 17 ஆண்டுகளாக உற்பத்தியில் இருந்த தன்னுடைய பிரபலமான கார் மாடல் ஒன்றின் உற்பத்தி பணிகளை நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த நாட்களில் பலதரப்பட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்றோ அதன் நிலைமை மிக மோசமானதாக மாறியுள்ளது. அது நாட்டில் மேக்னைட் (Magnite) எனும் ஒரே ஒரு கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் மாடலை பிரத்யேகமான சிறப்பு பதிப்புகளிலும் நிஸான் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், கூரோ ஸ்பெஷல் எடிசன் (Kuro Special Edition) மற்றும் கெசா சிவிடி ஸ்பெஷல் எடிசன் (Geza CVT Special Edition) ஆகிய சிறப்பு பதிப்புகளிலேயே மேக்னைட் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

Nissan gt-r discontinuation

மற்ற கார் மாடல்கள் அனைத்தும் வெவ்வேறு காரணங்களுக்காக விற்பனையில் அகற்றப்பட்டு இருக்கின்றன. புதிய மாசு உமிழ்வு விதி, விற்பனை குறைவு என பல்வேறு காரணங்களுக்காக அதன் கார் மாடல்கள் சில சந்தையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது அந்த நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற கார் மாடல் ஒன்றை உற்பத்தியில் இருந்து நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிஸான் ஜிடி-ஆர் ஆர்35 (Nissan GT-R R35) எனும் கார் மாடலையே உற்பத்தியில் இருந்து வெளியேற்ற இருக்கின்றது. இந்த கார் இந்தியாவிலும் கடந்த நாட்களில் விற்பனைக்குக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இந்த கார் மாடல் 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2022 ஆம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இருந்து வெளியேற்றியதைப் போலவே தற்போது உலக சந்தையில் இருந்தும் இந்த காரை அகற்றும் பணியில் நிஸான் களமிறங்கி இருக்கின்றது. உலக அளவில் இந்த கார் மாடல் 17 ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வருகின்றநிலையிலேயே இந்த தீர்க்கமான முடிவை அது எட்டி இருக்கின்றது. இதன் வெளியேற்றத்திற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை.

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி வருகின்ற 2024 அக்டோபர் மாதமை இந்த கார் உற்பத்திக்கான கடைசி மாதமாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த மாதத்திலேயே ஜிடி-ஆர் ஆர்35 காரின் உற்பத்தி நிறுத்தப்பட இருக்கின்றது. இந்த காரை கார் காதலர்கள் 'காட்ஸில்லா' என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

உலகின் தலைசிறந்த மற்றும் அதீத செயல்திறனை வெளியேற்றக் கூடிய கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டிலேயே நிஸான் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. ஜிடி-ஆர் இரண்டு முறை புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, சிறப்பு பதிப்புகளும் இந்த கார் மாடலில் அவ்வப்போது களமிறக்கப்பட்டன. இதுதவிர வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இதன் செயல்திறனிலும் கடந்த காலங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த காரை விற்பனையில் இருந்து அகற்றுவதற்கான தீர்க்கமான முடிவை நிஸான் தற்போது எடுத்திருக்கின்றது.

நிஸான் ஜிடி-ஆர் ஆர்35 கார் மாடலில் 3.8 லிட்டர், ட்வின் டர்போ வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 570 எச்பி ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இது ஓர் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட வாகனமாகும். கார் ஆர்வலர்கள் பலர் இந்த காரை 1000 எச்பி வரை வெளியேற்றும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் வெளியேற்றத்தை அடுத்து அதற்கு விடைக் கொடுக்கும் விதமாக நிஸான் அமெரிக்கா பிரிவு, அந்நாட்டில் இரண்டு சிறப்பு பதிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸ்கைலைன் எடிசன் (Skyline Edition) மற்றும் டகுமி எடிசன் (Takumi Edition) ஆகியவையே அவை ஆகும். வழக்கமான ஜிடி-ஆர் கார் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான மற்றும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதே இந்த சிறப்பு பதிப்புகள் ஆகும். நிஸான் நிறுவனம் ஜிடி-ஆர் கார் மாடலுக்கு மாற்றாக வேறு ஏதேனும் புதிய மாடலையோ அல்லதுஅப்கிரேட் வெர்ஷனையோ விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 17 ஆண்டுகளாக சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டவிருக்கும் நிசானின் இந்த திட்டம் பலரை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்க செய்திருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு அதேவேளையில், அதிக திறனை எதிர்பார்க்கும் கார் காதலர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக ஜிடி-ஆர் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இன்னும் சில மாதங்களில் இந்த கார் விற்பனையில் இருந்த சுவடே இல்லாமல் போக போகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 7, 2024, 11:00 [IST]
English summary
After 17 years nissan announces the end of gt r production in october 2024
மேலும்... #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+