வர தீபாவளிக்கு பட்டாசு கடைக்கே டஃப் கொடுக்கபோது மாருதி கார் ஷோரூம்கள்.. ஸ்விஃப்ட்டை ஒர்த்தானதாக மாத்திட்டாங்க!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார் மாடலில் டோமினியோன் லிமிடெட் எடிசன் (Dominion Limited Edition) எனும் சிறப்பு பதிப்பையும், பலினோ (Baleno) கார் மாடலில் ரீகல் எடிசன் (Regal Edition) எனும் சிறப்பு பதிப்பையும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்பு பதிப்புகளைத் தொடர்ந்து தற்போது அதன் புகழ்பெற்ற ஸ்விஃப்ட் (Swift) கார் மாடலிலும் மாருதி சுஸுகி சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு பதிப்பு வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் என அனைவரும் இந்த பண்டிகைக் காலத்தை அதகளப்படுத்தும் பொருட்டு சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

Maruti introduced swift blitz edition

இந்த நிலையிலேயே தன்னுடைய அதிக பிரபலமான கார் மாடல்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது அது ஸ்விஃப்ட் கார் மாடலின் சிறப்பு பதிப்பை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஸ்விஃப்ட் பிளிட்ஸ் எடிசன் (Swift Blitz Edition) எனும் பதிப்பையே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு குறைவான நாட்களுக்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்விஃப்ட் கார் மாடலின் எல்எக்ஸ்ஐ (LXI), விஎக்ஸ்ஐ (VXI), விஎக்ஸ்ஐ ஏஎம்டி (VXI AMT ), விஎக்ஸ்ஐ (ஓ) ( VXI(O) ) மற்றும் விஎக்ஸ்ஐ (ஓ) ஏஎம்டி (VXI(O) AMT) ஆகிய தேர்வுகளில் மட்டுமே சிறப்பு பதிப்பு வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஸ்விஃப்ட் பிளிட்ஸ் சிறப்பு பதிப்பானது வழக்கமான ஸ்விஃப்ட் கார் மாடலைக் காட்டிலும் அதிக அலங்கரிப்பைக் கொண்ட வெர்ஷனாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த சிறப்பு பதிப்பில் மெக்கானிக்கல் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. பனி மின் விளக்கு இருக்கும் இடம், கிரில் உள்ளிட்டவை கூடுதல் அழகுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, பின் பக்கத்தின் அடிப் பக்கத்தில் மற்றும் பூட்-க்கு மேலே ஸ்பாய்ளர் வழங்கப்பட்டு இருக்கின்றன. இலுமினேட்டட் டோர் சில்கள், டோர் விஷர்கள் உள்ளிட்டவை கூடுதலாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான அலங்கார மாற்றங்களைக் கொண்டதாகவே மாருதி சுஸுகி பிளிட்ஸ் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டு ஆப்ஷன்களும் பிளிட்ஸ் சிறப்பு பதிப்பில் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த சிறப்பு பதிப்பின் ஆரம்ப விலை ரூ. 6.49 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 9.85 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். சிறப்பு பதிப்பின்கீழ் வழங்கப்படும் அலங்கார அணிகலன்களின் மதிப்பு மட்டுமே ரூ. 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்விஃப்ட் காரின் விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது பிளிட்ஸ் பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே மோட்டாரே சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், பெட்ரோலில் இயங்கும்போது ஓர் மாதிரியான திறனையும், சிஎன்ஜியில் இயங்கும்போது ஓர் மாதிரியான திறனையும் வெளிப்படுத்தும். அந்தவகையில், பெட்ரோலில் இயங்கும் 82 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கையும், சிஎன்ஜியில் 70 எச்பி மற்றும் 102 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வரும் பண்டிகைக் கால விற்பனயைில் நம்பர் ஒன் கார் மாடலாக இதனை மாற்றும் பொருட்டு மாருதி சுஸுகி தற்போது பிளிட்ஸ் சிறப்பு பதிப்பை ஸ்விஃப்ட்-இல் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 16:55 [IST]
English summary
After grand vitara dominion and baleno regal edition maruti introduced swift blitz edition at rs 6 4
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+