33 கி.மீ மைலேஜ் வழங்கும் காரை வெறும் ரூ7,793 செலவுல வாங்க முடியுமா? எப்படி தெரியுமா?

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பலர் புதிதாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் இப்படியாக கார் வாங்கும் போது அவர்கள் கடன் வாங்கி தான் கார் வாங்குவார்கள். அவர்கள் கடன் வாங்கி கார் வாங்கினால் அவர்கள் எவ்வளவு இஎம்ஐ கட்ட வேண்டியது இருக்கும்? இப்படியாக அவர்கள் குறைந்த விலையில் எப்படி கார் வாங்குவது? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

இந்தியாவிலேயே குறைந்த விலை காராக மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பேஸ் வேரியன்ட் ரூபாய் 3.99 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. டாப் வேரியன்ட் ரூ 5.80 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. குறைந்த விலையில் கார் வாங்க வேண்டும் என்றால் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்.

alto k10 emi calculation

மாருதி நிறுவனம் இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருளிலும் இயங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஒருவர் தீபாவளிக்காக வாங்க வேண்டும் என்ற என நினைத்தால் வாங்கலாம்.

இந்த காரை வாங்க வேண்டும் என்றால் அவர் ரூபாய் 5 லட்சம் வரை லோன் மூலம் பெற முடியும். இப்படியாக அவர் ரூ 5 லட்சம் லோன் வாங்கினால் எவ்வளவு வட்டி விகிதத்திற்கு எவ்வளவு காலம் எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்ற விபரங்களை பார்ப்போம்.

alto k10 emi calculation

இந்த ரூ 5 லட்சம் கடனை அவர் 10 சதவீத வட்டி விகிதத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு வாங்கினால், மாதம் ரூ 8301 இஎம்ஐயாகவும், 6 ஆண்டுகளுக்கு ரூ 9263 இஎம்ஐயாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு ரூ 10,624 இஎம்ஐயாகவும், நான்காண்டுகளுக்கு ரூ 12,681 இஎம்ஐயாகவும், மூன்று ஆண்டுகளுக்கு ரூ16,134 இஎம்ஐயாகவும் செலுத்த வேண்டும். இந்த பத்து சதவீத வட்டி வகிதம் என்பது மிக அதிகமான வட்டியாக பார்க்கப்படுகிறது.

இதுவே இந்த கடனை அவர் 9.5% வட்டி வகிதத்தில் வாங்கினால் 7 ஆண்டுகளுக்கு ரூபாய் 8171 இஎம்ஐயாகவும், ஆறு ஆண்டுகளுக்கு ரூ 6,137 இஎம்ஐயாகவும், 5 ஆண்டுகளுக்கு ரூ 10,501 இஎம்ஐயாகவும், நான்காண்டுகளுக்கு ரூ12,562 இஎம்ஐயாகவும், 3 ஆண்டுகளுக்கு ரூ16,016 இஎம்ஐயாகவும் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

alto k10 emi calculation

இதே கடனை அவர் 9 சதவீத வட்டி விகிதத்தில் வாங்கினால், 7 ஆண்டுகளுக்கு ரூ 8,045 இஎம்ஐயாகவும், 6 ஆண்டுகளுக்கு ரூ9,013 இஎம்ஐயாகவும், 5 ஆண்டுகளுக்கு ரூ10,379 இஎம்ஐயாகவும், நான்கு ஆண்டுகளுக்கு ரூ12,443 இஎம்ஐயாகவும், 3 ஆண்டுகளுக்கு ரூ15,900 இஎம்ஐயாகவும் செலுத்த வேண்டும்.

இதே கடனை அவர் 8.5% வட்டி வீதத்தில் வாங்கினால் 7 ஆண்டுகளுக்கு ரூ7,918 இஎம்ஐயாகவும், 6 ஆண்டுகளுக்கு ரூ8,889 இஎம்ஐயாகவும், 5 ஆண்டுகளுக்கு ரூ10,258 இஎம்ஐயாகவும், 4 ஆண்டுகளுக்கு ரூ 12,324 இஎம்ஐயாகவும், மூன்று ஆண்டுகளுக்கு ரூ15,784 இஎம்ஐயாகவும் செலுத்த வேண்டும்.

இதே கடனை அவர் 8 சதவீத வட்டி விகிதத்தில் வாங்கினால் 7 ஆண்டுகளுக்கு ரூ 7,793 இஎம்ஐயாகவும், 6 ஆண்டுகளுக்கு ரூ8,767 இஎம்ஐயாகவும், 5 ஆண்டுகளுக்கு ரூ10,138 இஎம்ஐயாகவும், 4 ஆண்டுகளுக்கு ரூ 12,206 இஎம்ஐயாகவும், 3 ஆண்டுகளுக்கு ரூ 15,668 இஎம்ஐயாகவும் செலுத்த வேண்டும். இருப்பதிலேயே 8% வட்டி வீதம் தான் குறைந்த வட்டி வீதமாக பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 கார் புதிய தலைமுறை கே சீரியஸ் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி இன்ஜினுடன் விற்பனைக்கு வரும் காராக இருக்கிறது. இந்த கார் 66.62 பிஎஸ் பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த கார் மேனுவல் வேரியண்டில் 24.39 கிலோமீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியட்டில் 24.90 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்குகிறது. சிஎன்ஜியில் 33.85கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிதாக கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பலர் இந்த காரை ஒரு நல்ல ஆப்ஷனாக தேர்வு செய்கிறார்கள். முதல் தலைமுறையில் கார் வாங்கும் பலர் இந்த காரை வாங்குகிறார்கள். இந்த தீபாவளி நேரத்தில் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2024, 17:19 [IST]
English summary
Alto k10 emi calculation loan 5 lakh buying guide
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X