அடிக்கிற வெயிலுக்கு பைக்குலயா இன்னும் போறீங்க? கம்மி விலையில இந்த காரை உடனே வாங்குங்க!

இந்தியாவில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கும் குறைவான விலையில் கார் விற்பனையாகி வருகின்றன. தற்போது கோடை வெயிலில் பைக்கில் பயணம் செய்யும் பலர் ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து வரும் நிலையில், குறைந்த விலையில் எந்த காரை வாங்கலாம் விரிவான விவரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் உள்ள மக்களுக்கு பைக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. குறிப்பாக டிராபிக் நிறைந்த பகுதிகள் மற்றும் குறுகிய தூர பயணத்திற்கு பைக் சிறப்பான வாகனமாக இருக்கிறது. ஆனால் பைக்கில் செல்லும் போது இருக்கும் பிரச்சனை கோடை வெயில் மற்றும் மழை காலங்களை சமாளிப்பது தான். பைக்கில் பயணிக்கும் பலர் ஒரு கார் வாங்கி விட வேண்டும் என இந்த மாதிரி நேரத்தில் தான் யோசிப்பார்கள்.

Alto K10 EMI Details

அதிகமாக வெயிலடித்தாலும் அதிக மழை பெய்தாலும் பைக்கில் செல்பவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் கிடையாது. அவர்கள் வெயிலில் காய்ந்தபடியும் மழையில் நனைந்தபடியும் தான் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இப்படியாக அவஸ்திப்படும் மக்கள் பலர் எப்படியாவது குறைந்த விலையில் ஒரு காரை வாங்கி விட வேண்டும் என நினைப்பார்கள் இப்படியாக இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகியும் வரும் காரை பற்றி பார்ப்போம்.

குறைந்த விலை கார் என்ற உடனே நம் நினைவுக்கு வருவது மாருதி நிறுவனம் தான். மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 கார் ரூபாய் 4.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை பைக் வாங்குபவர்கள் வாங்கினால் குறைந்த பட்ஜெட்டில் அவர்களால் காரை வாங்க முடியும். கோடை வெயில், சீசன் மழை, டிசம்பர் குளிர் ஆகிய மூன்று பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.

Alto K10 EMI Details

இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட பைக் பயன்படுத்த ஆகும் செலவிலேயே காரையும் பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது. இந்த காரை வாங்குவதற்கு ரூ1.35 லட்சம் முன்பனமாக செலுத்தினால் போதும் மிச்சம் உள்ள பணத்தை இஎம்ஐயாக திரும்ப செலுத்த முடியும். மிச்சமுள்ள பணத்திற்கு ஆண்டிற்கு 9 சதவீதம் வரை வட்டி வசூல் செய்யப்படுகிறது.

வட்டியும் முதலுமாக மாதம் ரூபாய் 5000 செலுத்தினால் போதும், சுலபமாக இந்த காரை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் பயன்படுத்த முடியும். இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஸ்டாண்டர்ட், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் ஆகிய வேரியன்ட்கள் தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன.

Alto K10 EMI Details

இதில் விஎக்ஸ்ஐ என்ற வேரியண்டில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. இந்த காரின் டாப் மாடல் விலை ரூபாய் 6.61 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 66 பிஎச்பி பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை லிட்டருக்கு 24 முதல் 33 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட் கார் 33 கிலோமீட்டர் மைலேஜ் தரும் திறன் கொண்டதாக இருக்கிறது.

நீங்கள் தினமும் பைக்கில் பயணம் செய்து இந்த கோடை வெயிலை தாங்க முடியாமல் தவித்து வந்தால் உங்களுக்கு இந்த கார் நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும். மிகவும் குறைந்த விலையில் இந்த காரை நீங்கள் சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட பைக் போலவே இந்த கார் மைலேஜ் தருவதால் பைக் செலவிலேயே நீங்கள் காரை ஓட்டிக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் ஓட்டும் பலருக்கு என்றாவது ஒருநாள் கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்த கனவிற்காக அவர்கள் தங்கள் உழைப்பை கொட்டி பணம் சம்பாதித்து அதை சேமித்து வருவார்கள். இந்த கோடை காலம் அவர்களுக்கு கார் வாங்க சரியான நேரமாக இருக்கும் என எடுத்துக் கொள்ளலாம். இந்த கோடையை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு பிடித்தமான காரை உடனே புக் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2024, 15:26 [IST]
English summary
Alto k10 emi details weather milage and much more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X