சம்பாதிச்ச பணத்தை எல்லாம் இழந்துட்டாங்க! ஆப்பிள் காரை நிறுத்தியதால் இவ்வளவு நஷ்டமா?

ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிப்பு புரொஜெக்ட்டை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில் நிறுவனத்திற்கு ஏகப்பட்ட பணம் நஷ்டமாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிப்பை ஏன் நிறுத்தியது இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.

தற்போது செய்திகளில் இருக்கும் தலைப்பு செய்திகள் என்னவென்றால் ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிப்பு முடிவை முற்றிலும் கைவிட்டதாக வெளியான செய்திகள் தான். இதை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அதே நேரம் நிராகரிக்கவும் இல்லை. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட இந்த கார் தயாரிப்பு என்ற முடிவை கைவிட்டுள்ளதாகவே நமக்கு தெரிகிறது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏகப்பட்ட பணம் நஷ்டமாகியுள்ளது.

apple car

ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தானியங்கி காரை தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வந்தது. ஆப்பிள் கார்கள் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது உள்ள டெஸ்லா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் தனது காரை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் இந்த திட்டத்திற்கு டைட்டான் என பெயர் வைத்திருந்தது.

இந்த டைட்டானில் சுமார் 2000 பேர் பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் இந்த புராஜெக்ட்டை முழுமையாக கைவிடுவதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த திட்டத்தை கைவிடுவதற்கு முக்கியமான காரணம் உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதாரம் அந்த நிலை தான் என கூறப்படுகிறது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரம் அந்த நிலை காரணமாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு செலவிட ஆப்பிள் நிறுவனத்திலும் பணம் இல்லை.

apple car

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிப்பு முடிவை கைவிடும் நிலையில் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ1000 கோடி அந்நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை இந்த ஆப்பிள் கார் தயாரிப்பு திட்டத்திற்காக செலவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது பணம் இல்லை என முற்றிலுமாக இந்த புராஜெக்ட்டை மூடுவது மூலம் செலவு செய்த பணம் எல்லாம் வீணாக போய் உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் எலெக்ட்ரிக் காரை தயாரிக்கப் போவதாக திட்டமிட்டபோது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அப்படியான எந்த கார்களும் இல்லாமல் இருந்தது. பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் என்ற ஒரு ஐடியாவே இல்லாமல் இருந்த நிலையில் தற்போது டெஸ்லா, ரெனால்ட், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் முடிவை எடுத்து விட்டன. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது.

ஆப்பிள் நிறுவனம் தற்போது காரை தயாரிக்க வேண்டும் என்றால் போட்டி நிறுவனங்கள் தயாரிக்கும் காரில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட அம்சங்கள் நிறைந்த காரை தயாரிக்க வேண்டும். போட்டி நிறுவனங்களை தற்போது ஏகப்பட்ட அம்சங்கள் கொண்ட காரை தயாரித்துவிட்டன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட வேண்டும் என்றால் அந்த காரை குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலையில் தான் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வளவு செலவு செய்து ஆப்பிள் நிறுவனம் இந்த காரை கொண்டு வந்தாலும் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. மார்க்கெட்டில் உள்ள போட்டி நிறுவனங்கள் எல்லாம் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை காப்பி அடித்து அந்நிறுவனங்கள் தங்கள் கார்களில் புகுத்தி விட்டால் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும். இதையெல்லாம் யோசித்து தான் ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிப்பு முடிவை கைவிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது காரை தயாரிக்கும் போது அதில் மற்ற நிறுவனங்கள் வழங்காத மேம்படுத்தப்பட்ட சன்ரூஃப், சூரிய ஒளியால் பாதிக்கப்படாத விண்டு ஷீல்டு, மற்றும் புதிதாக முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டங்களை எல்லாம் தற்போது கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆப்பிள் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் சந்தையை குறிவைத்து களமிறங்கியது பலரை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்தது. பலர் ஆப்பிள் கார்கள் வந்தவுடன் புக் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த ஆர்வத்தில் எல்லாம் மண்ணை அள்ளி போட்டது போல ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிக்கும் முடிவை கைவிட்டுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2024, 16:14 [IST]
English summary
Apple car project failure 1000 crores loss details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+