ஆப்பிள் கார் கனவுல இருக்கீங்களா? அது இனி வெறும் கனவாகவேதான் இருக்கும்.. ஆப்பிள் கார் பற்றிய சுடசுட அப்டேட்!

உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்ட பிராண்டாக ஆப்பிள் ஐ-போன் (Apple iPhone) உற்பத்தி நிறுவனம் இருக்கின்றது. கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த பிராண்ட் செல்போனை போலவே விரைவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களையும் உற்பத்தி செய்ய இருப்பதாக சமீப சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஆகையால், ஆப்பிள் செல்போன் பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இது அமைந்தது. சொல்லப்போனால், நிறுவனம் அடுத்து என்ன சீரிஸ் செல்போனை விற்பனைக்குக் கொண்டு வரும் என ஏக்கத்துடன் பார்த்தவர்களைக் காட்டிலும் இந்த பிராண்டுடைய எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பில் மூழ்கியவர்களே அதிகம்.

Apple quits electric car project

இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவில் காத்திருக்கத் தொடங்கினர் ஐபோன் பிரியர்கள். இதற்கிடையில், இவர்கள் அனைவரையும் தூண்டும் வகையில் அவ்வப்போது சுடச்சுட ஆப்பிள் எலெக்ட்ரிக் கார் பற்றிய அப்டேட்டுகளை தெறிக்க விட்டது ஐபோன் நிறுவனம். இத்துடன், கடந்த சில மாதங்களுக்கு 'மாடல் பி' (Model B) போன்ற சில கார் மாடல்களையும் அது வெளியீடு செய்தது.

இத்துடன், செல்ஃப்-டிரைவ் கார் உற்பத்தி நிறுவனமான டிரைவ்.ஏஐ (Drive.Ai) எனும் நிறுவனத்தின் பங்குகளையும் அது வாங்கியது. மேலும், உச்சகட்டமாக எலெக்ட்ரிக் புராஜெக்டிற்காக மிகப் பெரிய அளவில் ஊழியர்களை பணியமர்த்தும் பணியையும் அது மேற்கொண்டது. இதன் அடிப்படையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் பணியாளர்கள் ஆப்பிள் எலெக்ட்ரிக் கார் புராஜெக்டிற்காக பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி திட்டத்தை கைவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஆப்பிள் கார் எதிர்பார்ப்பாளர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

சுமார் பத்து ஆண்டுகளாக எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த திட்டத்திற்கு அது டைட்டன் எனும் பெயரை சூட்டியிருந்தது. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் துணைத் தலைவர் கெவின் லிஞ்ச் ஆகியோர் கூட்டாக, ஆப்பிள் கார் திட்டம் நிறுத்தப்பட இருப்பதை அறிவித்தனர்.

தொடர்ந்து, முக்கிய பணியாளர்கள் தற்போது பிராண்டின் ஏஐ திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். எனவே ஆப்பிள் நிறுவனம் கார் உற்பத்தியைக் கைவிட்டு ஏஐ சார்ந்த பணிகளில் ஈடுபடுவதில் தீவிரம் காட்டத் தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், நிறுவனத்தின் இந்த முடிவு ஆப்பிள் காரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களை பெருத்த ஏமாற்றத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

வாகன துறையில் ஏற்கனவே மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே நிறுவனம் கார் உற்பத்தி திட்டத்தைக் கைவிட்டிருக்குமோ என நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், நிறுவனத்திடம் இருந்து இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. உலக அளவில் மாபெரும் ஜாம்பவான் நிறுவனங்களாக பிஒய்டி, டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், டொயோட்டா, பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களும் களத்தில் தீ பொறி பறக்க செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான சூழல் நிலவுவதே அந்த நிறுவனத்தின் பின் வாங்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் இந்த முடிவிற்கு டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்.

ஒரு வேளை ஆப்பிள் கார் உற்பத்தியைத் தொடர்ந்திருந்தால், இதனால் தலைவலியை சந்திக்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. புராஜெக்ட் டைட்டன் திட்டம் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், வாகன உற்பத்தியில் பல்வேறு முன்னேற்றங்களையும், பின்னடைவுகளையும் இது சந்தித்தது.

இதன் அடிப்படையிலேயே கான்செப்ட் மாடல்களை அது காட்சிப்படுத்தியது. ஆனால், முழுமையான இலக்கை எட்டுவதில் அது பெரும் சிரமங்களைச் சந்தித்தது. இந்த நிலையிலேயே அனைத்து பணிகளையும் நிறுவனம் தற்போது கைவிட்டு இருக்கின்றது. நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வசதிக் கொண்ட கார்களை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்தது.

இதனால்தான் ஆப்பிள் செல்போன் பிரியர்களையும் தாண்டி பலரின் கவனத்தை இந்த நிறுவனம் தன் வசம் ஈர்த்து வந்தது. இருப்பினும் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பிலும் மண்ணைப் போட்டு இருக்கின்றது, ஆப்பிள் நிறுவனம். அதேவேளையில், இந்த தகவல் இதன் வருகையை போட்டியாக கருதிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்தையில் பல செல்போன்கள் விலை குறைவாக விற்பனைக்குக் கிடைத்து வந்தாலும் ஐபோனுக்கு வரவேற்பு மிக மிக அதிகம். இத்தனைக்கும் இதன் விலை சற்று அதிகம் ஆகும். ஆகையால், இந்த பிராண்டுக்கு என தனி மதிப்பு உண்டு. எனவேதான் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வருகை பலரிடையே பீதியை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தற்போது தன்னுடைய கார் உற்பத்தி பணிகளை ஐபோன் கைவிட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 17:50 [IST]
English summary
Apple quits electric car project here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+