எதிரி நாட்டு வீரர்களால் கொஞ்சம் கூட கண்டுப்பிடிக்க முடியாது... உருவாக்கியது யார் தெரியுமா?
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் வாகனங்கள் பரவலாக இந்திய இராணுவ துறையில் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இராணுவத்திற்கான வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு என்றே தொழிற்சாலையில் தனியாக ஒரு பிரிவை மஹிந்திரா கொண்டுள்ளது. ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, இராணுவ பயன்பாட்டிற்கான மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட ஜிம்னி வாகனத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகியின் ஜிப்ஸி வாகனங்கள் முந்தைய காலங்களில் அதிகளவில் இந்திய இராணுவ துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் ஒன்று இராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவம் என்று மட்டுமின்றி, ஜிம்னி ஆனது எந்தவொரு நாட்டின் இராணுவத்திற்கும் ஏற்ற வாகனமாகும். சுஸுகி ஜிம்னியின் தாயகம் ஜப்பான் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும்.

இந்த வாகனம் இந்திய சந்தைக்குதான் புதியதே அன்றி, ஜப்பான் நாட்டில் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2ஆம் உலக போரில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வாகனமே சுஸுகி ஜிம்னி ஆகும். போர் முடிந்த பின்பு பொது மக்களின் விற்பனைக்காக சில மாற்றங்களை செய்து ஜிம்னியை சுஸுகி கொண்டுவந்தது.
பல நாடுகளில், கரடு முரடான சாலையில் அட்வென்ச்சர் பயணங்களை மேற்கொள்வோரின் விருப்பமான வாகனமாக ஜிம்னி விளங்குகிறது. இத்தகைய ஜிம்னி வாகனத்தின் புதிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஏனெனில், இந்த படங்களில் சுஸுகி ஜிம்னி வாகனம் பாதுகாப்பு கவசங்களையும், ஆயுதங்களையும் தாங்கி நிற்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இந்த படங்களை பார்த்த சிலர், இது செய்ற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட படங்கள் என கூறினர்.

ஆனால், நெட்டிசன் ஒருவர் இந்த ஜிம்னி வாகனத்தை பற்றி தெளிவாக விவரித்துள்ளார். அதாவது, இந்த வாகனத்தை பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல கார் மாடிஃபிகேஷன் நிறுவனமான டெக்னம் டிசைன் செய்துள்ளது. ஃபென்னேசி 2 லைட்வெயிட் 4X4 பேட்ரோல் என்கிற பெயரில் இந்த ஜிம்னி வாகனத்தை சோஃபின்ஸ் 2023 எக்ஸ்போவில் டெக்னம் நிறுவனம் காட்சிப்படுத்தியது.
அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பொர்தோ என்கிற பகுதியில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வாகனத்தின் படங்கள் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன. இந்த ஜிம்னி வாகனத்தின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் ஹெட்லேம்ப்களையும், கிரில் பகுதியையும் அவ்வளவு எளிதாக சேதப்படுத்த முடியாது. ஏனெனில், அவற்றை பாதுகாக்கும் வகையில் முரட்டுத்தனமான தோற்றத்தில் பம்பர் வழங்கப்பட்டுள்ளது.

பொனெட்டின் மீது போலியான செடி, கொடிகள் போர்த்தப்பட்டுள்ளன. வாகனத்தின் மேற்கூரை முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மேற்கூரையில்தான் பாதுகாப்பு ஆயுதங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஆயுதங்களில் தொலைநோக்கி, மெஷின் கன் மற்றும் மற்ற ஆயுதங்கள் அடங்குகின்றன. இந்த ஆயுதங்கள் உண்மையானவையா அல்லது அழகிற்காக பொருத்தப்பட்டுள்ள போலியானவையா என்பது தெரியவில்லை.
வாகனத்தினுள் இரு இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதில் டிரைவருக்கு மட்டுமே விண்ட்ஷீல்டு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மற்றொரு இருக்கையில் அமர்பவருக்கு மொத்தமாக திறந்தவெளியாக உள்ளது. இதனால், அந்த இருக்கையில் பயணிக்கும் வீரரால் எழுந்து நின்று 360 டிகிரிக்கு பார்க்க முடியும். இருக்கைகள் இரண்டு மட்டுமே இருப்பினும், இந்த வாகனத்தில் இன்னும் நிறைய பேரை ஏற்றி செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்த வாகனம் எந்தவொரு நாட்டின் இராணுவத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இந்திய இராணுவத்தில் முன்னர் காலத்தில் ஜிப்ஸி பயன்பாட்டில் இருந்ததால், வருங்காலங்களில் மாருதி சுஸுகி ஜிம்னியும் பயன்படுத்தப்படலாம். ஜிம்னி, அளவில் சிறிய வாகனம் ஆகும். ஆதலால், இந்த வாகனத்தில் இராணுவ வீரர்கள் நுழைவதும், வெளியேறுவதும் எளியதாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஜிம்னியை எந்தவொரு சாலைக்கும் தைரியமாக கொண்டு செல்லலாம்.


Click it and Unblock the Notifications









