நம்ம சென்னை நிறுவனம் 3 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து அசத்தல்.. சத்தமே இல்லாம இப்படி ஒரு சாதனையா!
நம்முடைய தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு வாகன உற்பத்தியை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் அசோக் லேலண்ட் (Ashok Leyland)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் 3 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து மாபெரும் சாதனையைப் படைத்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த சாதனைக் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழகத்தின் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் அசோக் லேலண்ட் (Ashok Leyland). நிறுவனத்தின் முக்கிய உற்பத்தியாக கனரக வாகனம் மற்றும் இலகு ரக வாகனங்களே உள்ளன. அந்தவகையில், பேருந்து, டிரக், மினி லோடு வேன் மற்றும் மினி பஸ் போன்றவற்றை அசோக் லேலண்ட் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே அசோக் லேலண்ட் நிறுவனம் 3 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் உத்தர்காண்ட், பன்ட்நகர் ஆலையிலேயே இந்த தரமான சம்பவம் அரங்கேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள 9 ஆலைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சாதனையின் வாயிலாக, கனரகம் மற்றும் இலகு ரக வாகன பிரிவில் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தயாரிப்பிற்கு அபரீதமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. அசோக்லேலண்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் விளைவாகவே இந்த அளவு மாபெரும் உற்பத்தி இலக்கை அதனால் எட்ட முடிந்து உள்ளது. குறிப்பாக, அசோக்லேலண்ட்டின் பேருந்துகள் மற்றும் டிப்பர் லாரிகளுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், வர்த்தக பிரிவு வாகனங்களுக்கும் சூப்பரான டிமாண்ட் சந்தையில் உள்ளது.
இப்போதைய நிலவரப்படி பல ஆயிரக் கணக்கான மக்கள் தங்களின் போக்குவரத்தை அசோக் லேலண்டின் பேருந்துகளிலேயே மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அசோக் லேலண்ட் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை மேற்கொள்ளவில்லை.
அது விவாசய பணிகளுக்கான எஞ்சின், ஜெனரேட்டர் போன்றவற்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, ராணுவ பயன்பாட்டிற்கான வாகனங்களையும் அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதே அசோக் லேலண்ட் நிறுவனம் ஆகும். ஆனால், அசோக் மோட்டார்ஸ் எனும் பெயரிலேயே அது தொடங்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, பிரிட்டிஷ் லேலண்ட் எனும் நிறுவனத்துடன் இணைவிற்கு பின்னர் அது அசோக் லேலண்ட் ஆக மாறியது. தற்போது இந்தியாவின் இரண்டாவது மாபெரும் வர்த்தக வாகன உற்பத்தியாளராகவும், உலகின் நான்காவது மிகப் பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் இந்த நிறுவனம் வளர்ந்துக் காணப்படுகின்றது.
இதேபோல், டிரக்குகள் உற்பத்தியிலும் இந்த நிறுவனம் மாபெரும் பிராண்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் 19ஆவது பெரும் நிறுவனமாக அசோக் லேலண்ட் உள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமாக ஒட்டுமொத்தமாக ஒன்று உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதில் ஏழு இந்தியாவிலும், இரண்டு வெளிநாடுகளிலும் உள்ளன. அரபு நாட்டிலும், இங்கிலாந்து நாட்டிலும் அவை இருக்கின்றன.
75 ஆண்டுகளாக இந்த நிறுவனம் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் அது அதன் கால்தடத்தைப் பதித்து இருக்கின்றது. இதுதவிர, 12 ஓட்டுநர் பயிற்சி இன்ஸ்டிட்யூட்களையும் இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதன் வாயிலாக இதுவரை 18 லட்சம் பேர் ஓட்டுநர் பயிற்சியைக் கற்றுக் கொண்டதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 12 ஓட்டுநர் பயிற்சி இன்ஸ்டிட்யூட்களும் 12 விதமான பகுதிகளில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் சாதனை ஒட்டுமொத்த வாகன உலகையும் வாயடைக்கச் செய்திருக்கின்றது. மேலும், சென்னை நிறுவனத்தின் இந்த சாதனையால் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை தேடி தரும் வகையிலும் அமைந்திருக்கின்றது. வரும் நாட்களிலும் இதுபோன்று இன்னும் பல சாதனைகளை இந்த நிறுவனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








