3.5 நொடியில் 100 கிமீ வேகத்தை பிக்கப் செய்யும் கார் இந்தியாவிற்கு வந்துடுச்சு! இதோட விலை என்ன தெரியுமா?

அப்டேட் செய்யப்பட்ட ஆஸ்டான் மார்ட்டின் வேண்டேஜ் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமான இந்த கார் தற்போது இந்தியாவில் ரூபாய் 3.99 கோடி என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்னென்ன அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள அஸ்டான் மார்ட்டின் வேண்டேஜ் காரை பொருத்தவரை முன்பக்கம் மிகப்பெரிய அளவில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக அகலமான கிரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் பகுதியும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட் மற்றும் புதிய பானெட் பகுதியும் பொருத்தப்பட்டுள்ளன. முன் வீலுக்கு பின்புறம் இருக்கும் வென்ட் பகுதியும் மறுபடிவமைப்பு செய்யப்பட்டு முற்றிலும் புதிதாக லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

aston martin vantage launch

முக்கியமாக இந்த வேண்டேஜ் காரில் 21 இன்ச் கொண்ட ஸ்டெய்ன் சில்வர் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து விதமான வேரியண்ட்களிலும் இந்த வீல்கள் தான் பொருத்தப்பட்டுள்ளது. காஸ்மெட்டிக் அப்டேட்களை பொறுத்தவரை காரின் வெளிப்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. காரில் உட்பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஆஸ்டான் மார்ட்டின் வேண்டேஜ் காரில் உட்புறம் முழுமையாக புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. வெகு சில வடிவமைப்புகள் மட்டுமே முந்திய மாடலில் இருந்தது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றவை எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக தொழில்நுட்ப அம்சங்களும் பல மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறம் மத்தியில் 10.35 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

aston martin vantage launch

இதுபோக இந்த காரில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய டிசைனில் ஸ்டேரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. காரின் கியர் ஸ்விட்ச்கள் எல்லாம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த காரின் உட்பகுதி முற்றிலும் வித்தியாசமான வகையில் வேறு விதமான லுக்கில் இருக்கிறது. பார்த்தால் ஒரு பிரம்மாண்ட லுக் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய அப்டேட்டாக இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் இன்ஜின் ரீவோர்க் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இது கூடுதலாக 153 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வேண்டேஜ் வி8 மாடலில் இருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த கார் 656 பிஎச்பி பவரையும் என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

aston martin vantage launch

இதன் மூலம் இந்த கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 325 கிலோமீட்டர் வேகத்தில் இந்த கார் சீறிப்பாயும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே வேண்டிய காரை பொருத்தவரை 690 பிஎச்பி பவரும், 753 என்எம் டார்க் திறனை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் அதிகபட்சமாக 322 கிலோமீட்டர் வேகத்தை எட்டி பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஜின் மட்டுமல்லாமல் சஸ்பென்ஷன் சிஸ்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் துடிப்பான காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் நான்கு வீல்களிலும் ஸ்டீல் பிரேக்குக்கு பதிலாக கார்பன் செராமிக் பிரேக்குகள் ஒரு ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்டான் மார்ட்டின் வேன்டேஜ் காரை பொருத்தவரை பல்வேறு விதமான கஷ்டமைசேஷன் ஆப்ஷன் உடன் வருகிறது. முக்கியமாக இதன் பெயிண்ட் அம்சங்கள் அலாய் வீல் வடிவமைப்பு குறைந்த எடை கொண்ட கார்பன் பைபர் சீட்டுகள் கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக் எல்லாம் கஷ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஸ்டான் மாட்டின் நிறுவனத்தின் இந்த கார் ரூபாய் 3.99 கோடி என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளதால் வெகு சிலர் மட்டுமே இந்த காரை வாங்க வாய்ப்பு இருக்கிறது. ஓரிரு நபர்கள் இந்த காரை இந்தியாவில் வாங்கினாலே மிகப்பெரிய விஷயம்தான். இந்த காரை யார் வாங்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2024, 17:11 [IST]
English summary
Aston martin vantage launch india price rs 3 99 crore
மேலும்... #aston martin #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X