இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான அஸ்டன் மார்ட்டின் (Aston Martin), அதன் 2024 வேன்டேஜ் (Vantage) எனும் கவர்ச்சிகரமான கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார் மாடலின் விலை எவ்வளவு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் சொகுசு மற்றும் அதிக திறனை வெளியேற்றும் கார் விரும்பிகளைக் கவரும் விதமாக, உலக புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான அஸ்டன் மார்ட்டின் (Aston Martin), அதன் 2024 வேன்டேஜ் (Vantage) கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Aston martin vantage front look

இதற்கு அறிமுக விலையாக ரூ. 3.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கு பெயர்போனவை. இதற்கு சான்றாகவே இந்த வேன்டேஜ் கார் மாடலும் உள்ளது.

குறிப்பாக, இந்த காரின் பான்னெட் மற்றும் ஹெட்லைட்டே அதற்கு மிக அதிக அழகைச் சேர்க்கும் வகையில் உள்ளது. பெரிய கிரில், ஷார்ப்பான முகப்பு பகுதி மற்றும் பல சிறப்புகளை இந்த கார் தாங்கி இருக்கின்றது. இந்த காரின் ஒட்டுமொத்த முகப்பு பகுதியும் கோவமான மீன், அதிக பசியுடன் வாயை பிளந்துக் கொண்டு இருப்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.

Aston martin vantage cabin

இத்தகைய தனித்துவமான தோற்றத்தையே வேன்டேஜ் கொண்டிருக்கின்றது. இதன் கேபினும் தனித்துவமானதாகவே உள்ளது. ஓர் விமானத்தின் காக்பிட்டைப் போல அது உள்ளது. மேலும், இதன் உட்பக்கம் நவீன வடிவமைப்பையும், அத்தியாவசிய கன்ட்ரோல்களை பிசிக்கல் (physical) பட்டன்களாகவும் கொண்டிருக்கின்றது. இந்த காரின் உட்பக்கத்தில் மிகவும் மெல்லிய துளைகளைக் கொண்ட ஏசி வெண்டே வழங்கப்பட்டு இருக்கின்றது.

பார்க்கதான் இது மிக மெல்லியதாக இருக்கும், ஆனால், விரைவில் அது கேபினைக் குளிர்வித்துவிடும். இத்துடன், சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக பக்கெட் வகை இருக்கைகள், மஞ்சள் நிற தையல்கள்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்தும் காரை மீண்டும் மீண்டும் ஓட்ட தூண்டும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Aston martin vantage side look

இதை மேலும் சுவராஷ்யமானதாக மாற்றும் விதமாக இரண்டு விதமான திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒன்று 10.25 அங்குலத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று 10.25 அங்குலத்தில் டிரைவர்களுக்கான டிஜிட்டல் திரையாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ஒயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் கருவி, 15 ஸ்பீக்கர்கள் அடங்கி பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் வேண்டேஜ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, அடாஸ் (advanced driver assistance systems) போன்ற தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சம் அவசர காலத்தில் தானாகவே பிரேக்கைப் பிடித்தல், டிராஃபிக் குறித்த எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளே மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Aston martin vantage rear look

எஞ்சினைப் பொருத்த வரை 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 665 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த கார் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. உதாரணமாக வெறும் 3.4செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து இந்த கார் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் சொகுசு மற்றும் அதிக திறனை வெளியேற்றும் சூப்பர் வகை கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்தியர்கள் சிலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அதிக வேகத்தில் சீறி பாயும் கார்களை வாங்கி பரிசாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில்கூட கேரளாவைச் சேர்ந்த ஓர் நபர் தன்னுடைய மகளுக்கு மணிக்கு 300 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் திறன் கொண்ட போர்ஷே காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான நபர்கள் மத்தியில் இந்த அஸ்டன் மார்ட்டின் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2024, 11:53 [IST]
English summary
Aston martin vantage launched with 15 speaker music system and adas
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X