0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.5 நொடியில் எட்டி பிடிக்கும் கார்! இந்த காரின் விலையை கேட்டா மயக்கமே வந்துடும்!
ஆடி நிறுவனம் தனது இ-டிரான் ஜிடி காரின் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் ஸ் மாற்றங்கள் சில டெக்னிகல் அப்டேட்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன அப்படியாக இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடையில் இந்தியாவில் களமிறங்குகிறது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வரும் போர்ஷே டேக்கன் காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் என்னென்ன அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆடி நிறுவனம் தனது இ-டிரான் ஜிடி காரன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் மிக முக்கியமாக தனது செல் கெமிஸ்ட்ரியை அப்டேட் செய்துள்ளது. அதன் மற்றும் அதன் கூலிங் சிஸ்டத்தையும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் பேட்டரி 84 கிலோ வாட் ஹவர் பேட்டரியிலிருந்து 97 கிலோ வாட் ஹவர் பேட்டரியாக அதிகமாகியுள்ளது. மேலும் இந்த காரின் எடை 9 கிலோ அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 609 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சார்ஜிங் வேகம் 320 கிலோ வாட் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 270 கிலோ வாட்டாக மட்டுமே இருந்தது. மேலும் இந்த காரின் எஸ் இ-டிரான் ஜிடி வெர்ஷனில் டூயல் மோட்டார் செட் அப் 680 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ் இ-டிரான் வெர்ஷனில் 857 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்எஸ் இ-டிரான் ஜி டி வெர்ஷனில் இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.5 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்எஸ் வேரியன்டிற்கும் சாதாரண வேரியன்டிற்க்கும் வித்தியாசம் தெரிவதற்காக முன்பக்கம் உள்ள ஏர்டேம் பகுதியில் முக்கோண வடிவிலான இன்ஸெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆர் எஸ் மாடல் பொருத்தவரை எல் வடிவ இன்ஸெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் புதிதாக ஸ்டேரிங் வீல்கள் பிளாட் பாட்டம் மற்றும் டாப் அம்சங்கள் கொண்ட ஸ்டேரிங் வீலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் உள்ள பட்டன்களெல்லாம் டச் சென்சிட்டிவ் பட்டன்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள சீட்டுகள் 14 வழியில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனம் தற்போது மற்றும் ஆர்எஸ் இ-டிரான் ஆகிய இரண்டு கார்களையும் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எஸ் இ-டிரான் வேரியன்ட் கார் ரூபாய் 1.72 கோடி என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஆர்எஸ் இ-டிரான் என்ற கார் ரூ1.95 கோடி என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார்கள் சமீபத்தில் தான் ஐரோப்பாவில் அறிமுகமான நிலையில் தற்போது இங்கும் அறிமுகமாகியுள்ளது.

இந்த காரின் டெலிவரி பொறுத்தவரை இந்த ஆண்டு இறுதி அல்லது 2025ம் ஆண்டு துவக்கத்தில் தான் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட காராக இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதனால் தான் இந்த காரின் விலை மிக அதிகமாக இருக்கிறது. மற்றும் மெர்சிடீஸ் ஆகிய கார்களுக்கு இந்த கார் போட்டியாக இருக்கிறது.
இந்த காரின் விலை ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாக இருப்பதால் வெகுசிலர் மட்டுமே இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பெர்பார்மென்ஸ் விரும்பும் மக்கள் இந்த காரை வாங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எலெக்ட்ரிக் காருக்கு இவ்வளவு அதிக விலை இருப்பதால் இதை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக தான் இருக்கும்.
எலெக்ட்ரிக் காரில் அதிக பவர்ஃபுல்லான காராக உருவாக்க வேண்டும் என ஆடி நிறுவனம் இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்த காருக்கு என தனியான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த கார் பலர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா சாலைகளில் இந்த காரை பார்க்க ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். யார் இந்த காரை வாங்கப் போகிறார்கள் என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காராக இ-டிரான் காரின் ஜிடி வேரியன்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரின் விலை அதிகம் இருந்தாலும் பிரத்தியேகமாக தனி ரசிகர்கள் இருப்பதால் இந்த காரின் விற்பனை ஓரளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









