எல்லா செலவையும் கஸ்டமர்ஸ் தலையில் இறக்கும் ஆடி! ஷோரூம்களை காப்பாற்ற வேற வழி தெரியல!!

ஆடி (Audi), உலகின் முன்னணி லக்சரி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்து முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், மற்ற நிறுவனங்களை போன்று ஆடியும் அதன் சொகுசு கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த ஆடி கார்களின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன என்பதையும், அவற்றின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்பட உள்ளன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

புதிய 2025ஆம் ஆண்டை சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கவுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் இது நடக்கக்கூடிய ஒன்றுதான். இந்த முறை, புதிய 2025ஐ ஆடி இந்தியா நிறுவனம் விலை அதிகரிப்புடன் துவங்க தயாராகி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை ஆடி இந்தியா நிறுவனம் அறிக்கை மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

audi cars prices will increase

இதுகுறித்த ஆடி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆடி கார்களின் விலைகள் 3% வரையில் உயர்த்தப்பட உள்ளன. வழக்கம்போல், இந்த விலை உயர்வுக்கும், தொடர்ந்து அதிகரித்துவரும் கார் உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவையும் ஆடி நிறுவனம் காரணமாக சுட்டிக்காட்டி உள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி பல்பிர் சிங் தில்லோன் கூறுகையில், "முதலீட்டு செலவுகள் அதிகரித்து வருவதால், 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் 3% வரையிலான விலை சரி செய்தலை செயல்படுத்துகிறோம். நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய ஆடி இந்தியா மற்றும் எங்கள் டீலர்களுக்கு இந்த திருத்தம் அவசியம்.

எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார். ஆடி நிறுவனத்தில் இருந்து கடைசியாக க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ப்ரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.88.66 லட்சத்தில் இருந்து உள்ளன.

audi cars prices will increase

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட க்யூ7 காரின் 2வது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலாக புதிய க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் காரை தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் ஆடி நிறுவனம் மேம்படுத்தி உள்ளது. க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் காருடன் சேர்த்து இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 10 ஆகும்.

ஆடி ஏ4, ஏ6, க்யூ3, க்யூ3 ஸ்போர்ட்பேக், க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்.எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்.எஸ்5 க்யூ8, க்யூ8 50 இ-ட்ரான், க்யூ8 55 இ-ட்ரான், க்யூ8 ஸ்போர்ட்பேக் 50 இ-ட்ரான், க்யூ8 ஸ்போர்ட்பேக் 55 இ-ட்ரான், இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்.எஸ் இ-ட்ரான் என்பன அந்த 10 கார்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ஆடி நிறுவனம் பலமுறை இந்தியாவில் கார்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதனால், இந்த விலை அதிகரிப்பு எல்லாம் ஆடி நிறுவனத்திற்கு பெரிய விஷயமே இல்லை. இந்த விலை உயர்வால் ஏற்படும் தாக்கத்தை சரிசெய்ய ஆடி நிறுவனம் புதியதாக சலுகைகளை 2025 ஜனவரி மாதத்தில் அறிவிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2024, 21:19 [IST]
English summary
Audi india will increase cars price upto 3 percentage from 2025 check all details here
மேலும்... #audi #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+