கெத்தாக இருந்த ஆடி லோகோவை வெத்தாக மாத்திட்டாங்க போல
ஆடி நிறுவனம் சீனாவில் வெளியிட்டுள்ள புதிய காரில் அந்நிறுவனத்தின் வழக்கமான ரிங் வடிவ லோகோ இல்லாமல் புதிதாக லோகோவை வடிவமைத்து புதிய காரை வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. ஜாகுவார் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றிவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் ஜாகுவார் நிறுவனம் இனி முழுமையாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரிக்கப் போகும் நிறுவனமாக மாற உள்ள நிலையில், தனது லோகோவை மாற்ற முடிவு செய்தது. அதன்படி வழக்கமாக ஜாங்குவார் மிருகத்தின் உருவம் கொண்ட லோகோ மாற்றி அமைக்கப்பட்டு புதிதாக ஜாகுவார் லோகோ வெளியிடப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஜாகுவார் லோகோ நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் பிரபலமான லோகமாக இருக்கிறது. இதில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமான மாற்றமாக இல்லை என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் அறிமுகமாகியுள்ள காரில் வழக்கமான லோகோ இடம்பெறவில்லை.
ஆடி நிறுவனம் கடந்த 1930ம் ஆண்டு தனது காருக்கான லோகோவை முதன்முதலில் பயன்படுத்தியது அப்பொழுது நான்கு வட்டமான ரிங் போன்ற அமைப்பை அடுத்தடுத்து வைத்தது போன்ற ஒரு லோகோவை உருவாக்கி அதை தான் இத்தனை ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தது. சுமார் 90 ஆண்டுகளுக்கு மேல் இந்த லோகோ பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இந்த லோகோவை மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் ஆடி நிறுவனமும் அந்நாட்டிலுள்ள எஸ்ஏஐசி நிறுவனமும் சேர்ந்து எலெக்ட்ரிக் வாகனத்தை தயார் செய்யும் திட்டத்தை துவங்கியது. இதன்படி அந்நாட்டிலுள்ள இளம் தலைமுறை கவரும் வகையில் ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் காரை தயாரிப்பதற்காக இந்த இரு நிறுவனங்களும் சேர்த்து முயற்சி செய்து தற்போது அதன் முதல் காரை வெளியிட்டுள்ளது. இந்த காரில் தான் ஆடி நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக ஆடி என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வார்த்தை மட்டும் வாகனத்தின் முன் பகுதியில் இருக்கிறது.
இதை பார்த்த போது ஜாகுவார் நிறுவனம் போல ஆடி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களுக்காக தனது லோகோவை மாற்றி விட்டதாக தற்போது மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஜாகுவார் நிறுவனத்திற்கு வந்த விமர்சனம் போல இந்த லோகோவிற்கும் கடுமையான விமர்சனங்கள் வருகிறது. ஆடி நிறுவனத்தின் லோகோ நீண்ட ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமான லோகோவாக இருக்கிறது. இதை மாற்றிவிட்டு புதிய லோகோ கொண்டு வருவது அவ்வளவு சரியானதாக இல்லை என மக்கள் பேசி வருகிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் பிரீமியம் காதலை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 50 வயதை கடந்தவர்களாக இருக்கிறார்கள். சராசரியாக 55 வயது உடைய மனிதர்கள் தான் பிரீமியம் ரக வாகனங்களை சொந்தமாக வாங்கி வருகிறார்கள். ஆனால் சீனா போன்ற நாடுகளில் 30 முதல் 35 வயது கொண்ட நபர்களை இந்த ரக வாகனங்களை வாங்க அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
இதன் காரணமாக சீனாவில் பிரிமியம் ரக வாகனங்களை தயாரிக்கும் போது இந்த ரக வாடிக்கையாளர்களின் எண்ணங்களை மனதில் வைத்து அவர்களுக்கு பிடித்த வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆடி மற்றும் எஸ்ஐஏசி ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து தற்போது எலெக்ட்ரிக் பிரீமியம் ரக காரை உருவாக்கியுள்ளார்கள்.
இப்படியாக உருவாக்கப்பட்ட காரில் தான் ஆடியின் லோகோ இல்லாமல் வெறும் எழுத்து மட்டும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது கடும் விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த விமர்சனத்திற்கு ஆடி நிறுவனம் இதுவரை எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை. அந்நிறுவனம் அளிக்கும் விளக்கத்தை கொடுத்துதான் நாம் நிறுவனம் உண்மையிலேயே லோகோவை மாற்றியதா அல்லது இது ஒரு சோதனைக்காக உருவாக்கப்பட்ட கார் என்ற விவரம் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனம் தனது லோகோவை அவ்வளவு எளிதாக மாற்றும் என மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதன் காரணமாக தற்போது இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்த ஆடி நிறுவனம் நிறுவனம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு தான் இது குறித்த நமது விமர்சனங்களை முன்வைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








