ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?

ஆடி இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அந்நிறுவனத்தின் கீழ் விற்பனையாகும் கார்களுக்கு 2 சதவீதம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆடி நிறுவனம் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். சொகுசு காரர்கள் தயாரிப்பில் ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசி இருக்கிறது. இதனால் வளர்ந்து வரும் பலர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஆடி காரையாவது வாங்கி பயன்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

audi price hike

அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் சிறப்பான விற்பனையை பெற்று வருகின்றன. இந்நிலையில் ஆடி நிறுவனம் தற்போது தனது கார்களுக்கு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி இரண்டு சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி நிறுவனத்திடம் தற்போது ஆடி ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ3,க்யூ 3 ஸ்போர்ட்பேக், க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ் க்யூ 8, க்யூ8 50 இடிரான், க்யூ8 55 இடிரான், க்யூ8 ஸ்போர்ட்பேக் 50 இடிரான், க்யூ 8 ஸ்போர்ட்பேக் 55 இடிரான், இடிரான் ஜிடி, ஆர்எஸ் இடிரான் ஜிடி ஆகிய கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

audi price hike

ஆடி நிறுவனம் கடந்த நிதியாண்டில் மொத்தம் 7,027 சொகுசு கார்களை கூடுதலாக விற்பனை செய்து 33 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை ஒரே ஆண்டில் விற்பனை செய்து சாதனையும் படைத்துள்ளது. இதனால் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவுக்கு இந்தியாவில் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

ஆடி நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி மறு விற்பனை செய்யும் துணை நிறுவனமாக ஆடி அப்ரூவ்டு பிளஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனமும் கடந்த நிதியாண்டில் 50 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மட்டும் 25 சதவீத வளர்ச்சி பெற்று உள்ளது.

audi price hike

ஆடி நிறுவனம் அடுத்த புதிய கார்களாக க்யூ 3 ஸ்போர்ட்பேக், க்யூ8 இ-டிரான், க்யூ8 ஸ்போர்ட் பேக் இடிரான், ஆகிய கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதுபோக சில கார்களில் லிமிடெட் எடிசன்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி க்யூ5, க்யூ8 மற்றும் எஸ்5 ஆகிய கார்களில் லிமிடெட் எடிஷன் கார்கள் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

அடுத்ததாக ஆடி நிறுவனம் அதிகமாக விற்பனை செய்யும் காராக ஏ4 மற்றும் ஏ6 ஆகிய கார்கள் தான் இருக்கின்றன அதே நேரத்தில் 174 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட் விற்பனை 40% அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. ஆடி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்களின் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. ஆடி நிறுவனத்தை பொருத்தவரை இந்த விலை உயர்வுக்கான காரணமாக கார்களுக்கான தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதையும் தயாரிக்கப்பட்ட கார்களை டீலர்ஷிப்புகளுக்கு எடுத்து செல்வதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையையும் குறிப்பிட்டு இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் விலை உயர்வு இல்லை என்பதால் விற்பனை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனத்தின் வாகனங்களின் விலை உயர்வு என்பது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும், இந்த விலை உயர்வு அதிக அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மிக குறைவான அளவிலான விலை உயர்வு என்பதால் இது விற்பனையை நேரடிக்காக பாதிக்க வாய்ப்பில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 7:00 [IST]
English summary
Audi price hike all models june 2024
மேலும்... #ஆடி #audi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X