ஆடியின் இந்த காரை வாங்க கூட்டம் குவியப்போகுது! விலை எவ்வளவு தெரியுமா?
ஆடி நிறுவனம் தனது க்யூ 3 மற்றும் க்யூ 3 ஸ்போர்ட் பேக் ஆகிய கார்களின் போல்ட் எடிசன் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் வெளிப்புறமும், உட்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ரூபாய் 54.65 லட்சம் என்ற விலையில் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆடி இந்தியா நிறுவனம் இன்று தனது க்யூ 3 மற்றும் க்யூ 3 ஸ்போர்ட் பேக் கார்களின் போல்ட் எடிஷனை இந்தியாவில் முறையே ரூபாய் 54.65 லட்சம் மற்றும் ரூபாய் 55.71 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற வேரியன்டை ஒப்பிடும்போது இதில் சில விஷுவல் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இது தனித்துவமான சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

ஆடி நிறுவனம் இந்த போல்ட் எடிஷன் காரில் பல்வேறு இடங்களில் கருப்பு நிறங்களை கொண்டு ஸ்டைல் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்க ரேடியேட்டர் கிரில் பகுதி கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் ரேடியேட்டரில் உள்ள ஆடி நிறுவனத்தின் லோகோவும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பக்கவாட்டில் உள்ள விங் மிரர் பகுதியும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ரூஃப் ரெயில்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கான ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது. இந்த காரில் மெக்கானிக்கல் ரீதியாக எந்தவித மாற்றங்களும் இல்லை. சாதாரண வேரியன்ட் கார்களில் என்ன அம்சங்கள் இருக்கிறதோ அதே அம்சங்கள் தான் இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்த வரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கியர்பாக்ஸ் 4 வீல்களுக்கும் பவரை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆடியின் குவாட்டரோ சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. காரில் 18 இன்ச் 5 ஸ்போக் வி-ஸ்டைல், எஸ்-டிசைன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் எஸ் லைன் எக்ஸ்டிரியர் பேக்கேஜ்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடி க்யூ 3 போல்ட் எடிசன் காரில் 18 இன்ச் ஸ்டைல் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன . மற்றும் முக்கிய ஹைலைட்டாக இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெய்ல் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் பானரோமிக் கிளாஸ் சன்ரூஃப், பவர் அட்ஜஸ்டபிள் முன் பக்க சீட்டுகள், நான்கு வழிகளில் லும்பர் சப்போர்ட். லெதர் மற்றும் லெதரேட் காம்பினேஷனில் சீட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரில் மூன்று ஸ்போக் கொண்ட மல்டி ஃபங்ஷன் ஸ்டேரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது லெதர் கொண்டு விராப் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் பெடல் ஸ்விஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறம் மல்டி கலர் ஆம்பியர் லைட்டிங் பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் எய்டு பிளஸ் மற்றும் ஆடி ஸ்மார்ட் போன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எம்எம்ஐ நேவிகேஷன் பிளஸ் எம்எம்ஐ டச், ஆடி டிரைவ் செலக்ட், ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், கம்ஃபோர்ட் கீ, கெஸ்டர் கண்ட்ரோல் டெயில் கேட், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.
இது போக காருக்குள் ஆடி போன் பாக்ஸில் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆடியோ சிஸ்டத்திற்காக 180 வாட் 10 ஸ்பீக்கர் கொண்ட ஆடி சவுண்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக டூயல் டோன் அலாய் வீல் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி க்யூ3 கார் இந்தியாவில் பிரபலமான காராக இருக்கிறது. இதில் பல்வேறு ஆப்ஷன்களை மக்கள் விரும்பி வரும் நிலையில், ஆடி நிறுவனம் தற்போது போல்டு எடிஷன் என்ற இந்த வெர்ஷன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த காரின் விற்பனை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








