ஆடி-யின் இந்த சொகுசு காரை வாங்க நீ-நான்னு பெரும் போட்டியே நடக்கபோகுது! அழகால இப்பவே இழுக்குதேப்பா!
ஆடி (Audi) நிறுவனத்தின் பிரபலமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக க்யூ5 (Q5) இருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே ஆடி நிறுவனம் தற்போது சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. சொகுசு கார் காதலர்களை கவர்ந்திழுக்கும் பொருட்டே இந்த வேலையை நிறுவனம் பார்த்திருக்கின்றது. ஆடி க்யூ5 போல்டு எடிசன் (Audi Q5 Bold Edition) பதிப்பையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 72.3 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
மேலும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு சொகுசு காரை விற்பனைச் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. எனவே இந்த காரை வாங்க கடுமையான போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதே இந்த காருக்கான புக்கிங் பணிகளையும் ஆடி நிறுவனம் தொடங்கிவிட்டது. ஆன்-லைன் அல்லது ஆடி கார் விற்பனையகங்கள் வாயிலாக இந்த சிறப்பு பதிப்பு காரை வாடிக்கையாளர்களால் புக் செய்துக் கொள்ள முடியும்.

ஆடி க்யூ5 போல்டு எடிசன் தனித்துவமான நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. வழக்கமான ஆடி க்யூ5 மாடலிடமிருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக சில தனித்துவமான ஸ்டைலிங் யுக்தியையும் இந்த காரில் ஆடி மேற்கொண்டிருக்கின்றது. அந்தவகையில், காரின் ரூஃப் ரெயில், கிரில், லோகோ, ஜன்னல் சட்டக், பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றில் உயர் பளபளப்பான கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடனேயே, ஐந்து சூப்பரான நிற ஆப்ஷன்களும் இந்த சிறப்பு பதிப்புடன் வழங்கப்படுகின்றது. கிளாசியர் ஒயிட் (Glacier White), நவர்ரா ப்ளூ (Navarra Blue), மைதோஸ் பிளாக் (Mythos Black), டிஸ்ட்ரிக் கிரீன் (District Green) மற்றும் மேன்ஹேட்டன் கிரே (Manhattan Gray) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.
இந்த நிற தேர்வுகள் ஆடி க்யூ5 போல்டு எடிசன் சிறப்பு பதிப்பிற்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் ஆடி க்யூ5 சொகுசு கார் மாடலுக்கு மிகப் பெரிய ரசிக பட்டாளம் உண்டு. இந்த நிலையிலேயே இதற்கான ஃபேன் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் ஓர் முயற்சியாக சிறப்பு பதிப்பை ஆடி நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இதையே ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியிருக்கின்றார். அவர் சிறப்பு பதிப்பின் வருகைகுறித்து மேலும் கூறியதாவது, "இன்றைய வாடிக்கையாளர்கள் தனித்துவத்தை விரும்புகின்றனர். இந்த போல்டு எடிசன், அம்மாதிரியானோரின் கவனத்தை மிகப் பெரிய ஈர்க்கும். ஆடி க்யூ5 எங்களின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த புதிய சிறப்பு பதிப்பு அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.
அவரின் இந்த நம்பிக்கை ஏற்ப பலதரப்பட்ட சிறப்பம்சங்களையும், நவீன கால சொகுசு அம்சங்களையும் இந்த காரில் ஆடி நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பயணிகளுக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் விதமாக 8 ஏர் பேக்குகளும், பிரீமியம் ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு பனோரமிக் சன்ரூஃப்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, எலெக்ட்ரிக் பூட் லிட், பார்க் அசிஸ்ட் வசதிக் கொண்ட 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, முன் மற்றும் பின் பக்கங்களில் எல்இடி மின் விளக்குகள் மற்றும் ஆறு விதமான ரைடிங் மோட்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கம்ஃபோர்ட் (Comfort), டைனமிக் (Dynamic), இன்டீவிசுவல் (Individual), எஃபீசியன்சி (Efficiency), ஆட்டோ (Auto) மற்றும் ஆஃப் ரோடு (Off-Road) ஆகிய ரைடிங் மோட்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த டிரைவிங் மோட்கள் அனைத்தும் ஆடி டிரைவ் செலக்ட் வாயிலாக வழங்கப்பட்டவை ஆகும்.
இதுதவிர, கூடுதல் அம்சங்களாக 19 ஸ்பீக்கர்கள் கொண்ட பி அண்ட் ஓ பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஞாபக திறன் கொண்ட பவர் இருக்கைகள், எம்எம்ஐ நேவிகேஷன், ஆம்பியன்ட் லைட் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த சிறப்பு பதிப்பு காரிலும் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. மேலும், இந்த காரால் வெறும் 6.1 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய பதிப்பு, பண்டிகைக் காலத்திற்கு முன்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. பொதுவாக, பண்டிகைக் காலத்தை முன்னிட்டே அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு நிறுவனங்கள் அதிக அம்சங்களைக் கொண்ட புதுமுக பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும். ஆனால், பண்டிகை காலம் வரும் முன்னரே ஆடி வாடிக்கையாளர்களை தன் வசம் கவரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








