இரண்டில் ஒரு காரை தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்... குறைந்த விலையில் கிடைக்கும் சொகுசு கார்கள்!!
ஆடி (Audi) நிறுவனம் உலகளவில் அதன் புதிய க்யூ5 (Q5) என்கிற லக்சரி எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட வெளிப்பக்க தோற்றம் மற்றும் கூடுதல் என்ஜின் ஆப்ஷன்கள் உடன் க்யூ5 உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் புதிய ஆடி க்யூ5 காரின் விலை 52,300 யூரோக்களாக (ரூ.48.54 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடி காருக்கு விற்பனையில் நேரெதிர் போட்டியாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 விளங்குகிறது. இந்த இரு லக்சரி எஸ்யூவி கார்களில் எது சிறந்தது என்பதையும், இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிப்புற தோற்றம்: புதிய ஆடி க்யூ5 காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் சிங்கிள் ஃப்ரேம் க்ரில் மற்றும் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் 2ஆம் ஜென்ரேஷன் ஓ.எல்.இ.டி டெயில்லைட்கள் உள்ளன. மறுப்பக்கம், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில் முன்பக்கத்தில் சிறிய அளவில் 'கிட்னி' வடிவில் கிரில், தேவைக்கேற்ப அடாப்டிவ் ஆகக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பின்பக்கத்தில் T-வடிவில் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புற தோற்றம்: இந்த இரு கார்களிலும் டேஸ்போர்டில் பொழுதுப்போக்கிற்காகவும், டிரைவருக்கு தேவையான விபரங்களை வழங்குவதற்காகவும் வளைவான பனோராமிக் டிஸ்பிளேஸ் வழங்கப்பட்டுள்ளன. ஆடி க்யூ5 காரில் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு 14.5-இன்ச்சிலும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 11.9 இன்ச்சிலும் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், பேங் & ஒலுஃப்சன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேவும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள கர்வ்டு பனோராமிக் டிஸ்பிளே ஆனது பிஎம்டபிள்யூவின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் 9-இல் ரன் ஆகக்கூடியதாக உள்ளது. இந்த பிஎம்டபிள்யூ காரில் எலக்ட்ரானிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹீட்டட் & வெண்டிலேட்டட் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், வெவ்வேறு விதமான அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷன்ஸ் மற்றும் U வடிவில் லைட் ஸ்ட்ரிப்ஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்: புதிய ஆடி க்யூ5 காரில் பாதுகாப்பிற்காக, ரிவர்ஸில் பார்க் செய்வதற்கும், சாலையில் ஒரே பாதையை பின்பற்றவும் உதவிகள், எமர்ஜென்சி பிரேக்கிங், எவாசன் அசிஸ்ட் மற்றும் டர்ன் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடாஸ் ஃபங்க்ஷன்ஸ் மூலமாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரிலும் சாலையில் ஒரே பாதையில் செல்ல உதவி மற்றும் டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம். மேலும், டிரைவர் வெளியில் கை நீண்டுவதை தவிர்க்கும் டிராஃபிக் ஜாம் அசிஸ்டண்ட் மற்றும் வழக்கமான பார்க்கிங் உதவியையும் இந்த காரில் பெறலாம்.

பவர்டிரெயின்ஸ்: இந்த இரு கார்களும் மைல்ட்-ஹைப்ரீட் கார்களாகும். ஆடி க்யூ5 காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் மற்றும் அதி செயல்திறன்மிக்க எஸ்.க்யூ5 மாடல் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் ஐரோப்பிய சந்தையில் வழங்கப்படுகின்றன. இந்த மூன்றில் எதை தேர்வு செய்தாலும், காரில் 48 வோல்ட் ஹைப்ரீட் சிஸ்டம் கிடைக்கும். மேலும், இந்த காரில் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுடனும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு இந்த பிஎம்டபிள்யூ காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இரண்டும் மாடர்ன் வசதிகளை கொண்ட லக்சரி கார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல், இந்த இரு கார்களிலும் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படுவது இந்த கார்களின் பவர்டிரெயின் தரத்தை காட்டுகிறது. இதனால், இந்த இரண்டில் ஒரு காரை தேர்வு செய்வது கொஞ்சம் சிரமம் தான். எங்களை கேட்டால், தோற்றத்தை பொறுத்தவரையில் ஆடி க்யூ5 ஆனது மாடர்ன் தரத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications









