ஒரு தடவை சார்ஜ் போட்டால் போதும் சென்னை டூ நெல்லை நிக்காம போக முடியும்! ஆடியின் இந்த இவி காரை பற்றி தெரியுமா
ஆடி நிறுவனம் இந்தியாவில் கொண்டு வரப்போகும் தனது க்யூ6 இ-டிரான் காரை முதன்முதலாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த காரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் 625 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆடி நிறுவனம் இந்த காரை பிபிஇ என்ற பிளாட்பார்மில் உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆடி நிறுவனம் தனது கியூ 6 இ-டிரான் காரை தற்போது பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் தான் அந்நிறுவனம் பிபிஇ பிளாட்பார்மில் உருவாக்கும் முதல் இவி காராகும். இதே பிளாட்பார்மில் தான் போர்ஷே மேக்கன் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4,771 மிமீ நீளமும், 1965 மிமீ உயரமும், 1648 மிமீ அகலமும், 2689 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் க்யூ8 இ-டிரான் காருக்கு கீழ் உள்ள பொசிஷனில் விற்பனைக்கு வருகிறது. இது ஒரு 5 சீட்டர் கொண்ட காராகும். இந்த காரின் டிசைன் மொழியை பொருத்தவரை, அந்நிறுவனத்தின் புதிய டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் மூடப்பட்ட சிங்கிள் பிரேம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இரண்டு டயர் மேட்ரிக்ஸ் ஹெட் லேம்ப், 6ஓஎல்இடியுடன் கூடிய டெயில் லேம்ப், மேல் பக்கம் உள்ள டிஆர்எல் 70எல்இடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பின்பக்கம் உள்ள ஓஎல்இடி டெயில் லேம்ப்கள் இந்த காருக்கு அருகே உள்ள மற்ற காருடன் கார்டு தொழிற்நுட்பத்தில் கம்யூனிகேட் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை விபத்துகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறத்தில் 11.9 இன்ச் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கண்ட்ரோல் மற்றும் 14.5 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

10.9 இன்ச் கொண்ட எம்எம்ஐ முன்பக்க பயணிகள் டிஸ்ப்ளே மற்றும் புதிய தலைமுறை ஆர்க்யூமெண்டெட் ரியாலிட்டி, எச்யூடி டிஸ்ப்ளே ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.இந்த காரின் உட்புறத்தில் டைனமிக் மோடு லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 84 எல்இடிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆடியோ சிஸ்டத்தை பொறுத்தவரை 20 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடி ஆண்ட்ராய்டு ஆட்டோமோட்டிவ் ஓஎஸ் உடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் முன் பகுதியில் 64 லிட்டர் அளவிற்கு ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி இருக்கிறது. பூட் பகுதியில் 526 லிட்டர் அளவுக்கு ஸ்டேரேஜ் கெபாசிட்டி இருக்கிறது. இதில் சீட்டை மடித்து விட்டால் 1529 லிட்டர் அளவுக்கு பூட் பகுதியை பெரிதாக்கிக் கொள்ள முடியும். இந்த காரின் பெர்பார்மன்ஸை பொறுத்தவரை டூயல் இ-மோட்டார் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது 426 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த கார் 0ல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் லான்ச் கண்ட்ரோல் ஆக்டிவாக இருப்பதால் இவ்வளவு நேரம் ஆகிறது. இல்லை என்றால் இதைவிட மிக விரைவாக இந்த கார் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக தான் இருக்கிறது.
இந்த கார் அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆடி க்யூ இ-டிரான் எக்ஸ்கியூ 6 காரைப் பொறுத்தவரை 516 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 0 முதல் 96 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்சமாக 230 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இதன் பேட்டரியை பொருத்தவரை 12 மாடுல் கொண்ட 180 பெரிஸ்மேட்டிக் செல்களை கொண்டு 100 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் போட்டால் 625 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இதன் பேஸ் மாடல் எஸ்கியூ 6 கார் 598 கிலோ மீட்டர் பயணிக்கும் இதற்காக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆன 270 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 10 முதல் 80 சதவீத சார்பில் வெறும் 21 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் மீது மக்களுக்கு மவுசு இருக்கிறது. இன்றளவும் இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் பலர் இந்த ஆடி இ-டிரான் ரக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் நிச்சயம் நல்ல விற்பனையை பெறும்.


Click it and Unblock the Notifications









